Ariyalur - Dinakaran

செந்துறையில் 65வது கூட்டுறவு வாரவிழா

செந்துறை, நவ. 15: செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  வளாகத்தில் 65வது அகில இந்திய கூட்டுறவு சங்க வாரவிழா நடந்தது. கொடியை ஏற்றி வைத்து சங்க தலைவர் கொளஞ்சிநாதன் பேசுகையில், 2017-18ம் ஆண்டு பயிர்க்கடன் ரூ.2.31 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு  பயிர்கடன் மற்றும் பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி தொழில்களுக்கு கடனுதவி,  சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி மானியத்துடன் வழங்கப்படும் என்றார். சங்க செயலாளர் கலியபெருமாள், சங்க  நிர்வாகக்குழு இயக்குனர்கள் நல்லதம்பி, ராஜேந்திரன், பழனிவேல்,  ரேவதி குமரவேல், செல்வம் நீலாவதி, முருகன், செல்வராசு, ராஜதுரை, காமராஜ்  அங்கன்வாடி பணியாளர்கள் பாஸ்கர், கயல்விழி பூராசாமி, அருள், சங்கர் துணை  செயலாளர்கள் ஞானபிரகாசம், குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

சார்பு நீதிபதி அறிவுறுத்தல் குழந்தைகள் தினவிழா சித்தேரியில் 1,000 பனை விதை நட்டு கொண்டாட்டம்

அரியலூர்,நவ.15: அரியலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட பசுமை படை சார்பில் பனை விதை நடும் விழா அரியலூர் சித்தேரியில் நேற்று நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம், வறண்ட மாவட்டமானது., இதனையடுத்து பனைமரம் நிலத்தடி நீரை தக்கவைத்து கொள்வதால் அதிக அளவு பனை விதைகளை நட்டு அரியலூர் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்க்காக முதன் முதலில் குழந்தைகள் தினமான நேற்று பனைவிதையை பள்ளி குழந்தைகள் தங்கள் கைகளால் நட்டு வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பனை விதையை நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி தலைமையில் பனை மரங்கள் காப்பாற்றும் முயற்சியாக   அரியலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாதிரிப்பள்ளி, கல்லகுடி நடுநிலைப்பள்ளி, தூய மேரி உயர்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சார்ந்த சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஏரிக்கரையின் இரு புறங்களிலும் விதைகளை நட்டனர். பனை விதைகளை பாளையப்பாடி அக்னி சிறகுகள் அமைப்பினர் வழங்கினர்.  

பெரம்பலூரில் பஸ் நிலையத்தில் பயணிகள் அச்சம்மணப்பத்தூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினவிழா

செந்துறை, நவ. 15:  செந்துறை அருகில் உள்ள மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி சார்பில் குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கபடி, பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவிய போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்தனகுமார், குழுமூர் தொடக்கப்பள்ளி  தலைமையாசிரியர் ராவணன், இலைக்கடம்பூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கொளஞ்சிநாதன், அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தனவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செயராமன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆண்டிமடத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

ஜெயங்கொண்டம். நவ.15: தமிழ்நாட்டில் பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தும் வகையில் டெங்கு, மலேரியா, பன்றிகாய்ச்சல் போன்ற மனித உயிர்களைக் குடிக்கும் கொடிய நோயிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலுக்கு இணங்க ஆண்டிமடம் ஒன்றிய திமுக சார்பில் ஆண்டிமடம் கடைவீதியில் பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் தருமதுரை, முருகன், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் சேவியர் சஞ்சீவிகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அழகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்   லூயிகதிரவன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன் மற்றும்  மாவட்ட, ஒன்றிய. நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அரியலூரில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

அரியலூர்,நவ.15:  அரியலூர் ராஜாஜி நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம். இவர் சேலத்தில் பொதுப்பணித்துறை வரைபட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அரியலூரில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் மனைவி மற்றும் மகனுடன் வேலை சம்பந்தமாக சென்னை சென்றுள்ளனர்.  இந்நிலையில் கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 15 சவரன் நகை மற்றும் 24 ஆயிரம் ரொக்கத்தினை திருடிச் சென்றனர்.வழக்கமாக காலை வேளையில் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வேலைக்கு வரும் பணியாட்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது  வீட்டின் கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து   வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்கவே பன்னீர் செல்வத்தின் மனைவி ஷோபனா அரியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட திட்டப்பணிகள் ஆய்வு

பெரம்பலூர்,நவ.15: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும்  திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு  உறுப்பினர் செயலருமான அனில்மேஷ்ராம் ஆய்வு செய்தார் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை வேப்பூர் உள்ளிட்ட 4 ஒன்றியங்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை  மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக  செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள்குறித்த ஆய்வுக்கூட்டம்  நேற்று கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடந்தது.   கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,  மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அனில்மேஷ்ராம் தலைமை வகித்து  ஆய்வுசெய்தார். அதனடிப்படையில் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை  சார்பாக பயிர்செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பளவு, பயிர் வகைகள்,  விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகள், உரங்கள் இருப்பு குறித்தும்,  கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள்,  பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். ஊரகவளர்ச்சித்துறை மூலம்  செயல்படுத்தப்பட்டு வரும் சோலார் மின் வசதியுடன் கூடிய பசுமைவீடுகள்  கட்டும் திட்டம், தாய் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், தேசிய ஊரக வேலை  வாய்ப்புத்திட்டம், ஆண், பெண் சுகாதார வளாக கட்டுமானப்பணிகள் செயல்பாடு மற்றும் வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, சத்துணவுத்துறை,  பள்ளிக்கல்வித்துறை, உணவுபாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும்  குடும்பநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப் பட்டுவரும்  திட்டங்களின் நிலைகுறித்து ஆய்வுசெய்தார். அரசின் திட்டங்கள்  செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடாது, மாவட்டத் தின் வளர்ச்சிக்காக  தமிழ்நாடுஅரசு அறிவித்துசெயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் குறித்த  காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் வகையில் அனைத்துத் துறை  அலுவலர்களும் முழுப்பங்களிப்பை தரவேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர்  ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளத்தில் இயங்கிவரும் வெங்காய வணிக வளாகத்தில் வெங்காயத்திலிருந்து ஊறுகாய், வெங்காய கூழ், உப்புக்கரைசலில் ஊரவைத்த  வெங்காயம் உள்ளிட்ட மதிப்புகூட்டுதல் பொருட்கள் தயாரிக்கும்பணிகளை நேரில்  பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின் போது எஸ்பி திஷாமித்தல்,  மாவட்ட வருவாய்அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மகளிர்  திட்டஇயக்குநர் தேவநாதன், வருவாய்கோட்டாட்சியர் விஸ்வ நாதன்  வேளாண்இணைஇயக்குநர் (பொ)கலைவாணி உள்ளிட்ட பல்வேறு துறை அலு வலர்கள்  உடனிருந்தனர். ஆய்வுக்காக திறப்பு விவசாயிகள் வியப்பு சின்னவெங்காய மதிப்புக்கூட்டு  பொருட்கள் தயாரிப்பு மையம் தொடங்கிய 1 மாதத்தில் மூடப்பட்டு கடந்த ஆறேழு  மாதங்களாக செயல்படாமல் பயன்பாடின்றி இருந்து வந்தது. ஆய்வுக்காக திடீரென  செயல்படுவதுபோல் தயாரித்து நாடகமாடியது கண்டு சின்ன வெங்காய விவசாயிகள் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

மண்டல டேக்வாண்டோ ேபாட்டி பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 6 தங்கம் உள்பட 18 பதக்கம் குவித்தது

பெரம்பலூர்,நவ.15:  பெரம்பலூர் மண்டல அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகளில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 தங்கம் உள்பட 18 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்    பெரம்பலூர் மண்டல அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் வேப்பந்தட்டை தாலுக்கா, உடும்பியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டிகளில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 50பேர் கலந்துகொண்டனர். இதில் பெண்கள் பிரிவில் 17 வயது மற்றும் 19வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் 18 பதக்கங்களை பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது. 7வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3 தங்கப் பதக்கம், 19வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2 தங்கப்பதக்கம், 14வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1 தங்கப்பதக்கம் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களில் 5மாணவிகளும், ஒரு மாணவரும் மாநில அளவில் நடைபெறவுள்ள டேக்வாண்டோ போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர்.    குறிப்பாக பரணி என்ற மாணவரும், சத்யா, காவ்யா, உமா, சங்கீதா, விஜயகுமாரி ஆகிய மாணவிகளும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அருளரங்கன், மாவட்டக்கல்விஅலுவலர் அம்பிகாபதி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியின்போது பள்ளித் தலைமை ஆசிரியர் கலைமகள், உடற்கல்வி ஆசிரியர் ரவி உடனிருந்தனர்.  

மணல் கடத்திய வாலிபர் கைது

அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீபுரந்தான்- சாத்தம்பாடி சாலை வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த ஜெகன்ராஜ் (30) என்பவர் ஸ்ரீபுரந்தான் கொள்ளிடம் ஆற்று படுகையில் இருந்து அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெகன்ராஜை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

சுபா.சந்திரசேகரன் பேச்சு அரியலூரில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்

அரியலூர்,நவ.2: அரியலூர் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில்  இந்திய சுரங்க பொறியாளர் சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில் ரத்தான முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் சுரங்கத்தில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றி வேகமாக செல்லும் லாரி ஓட்டுனர்களுக்கு அரியலூர் டி.எஸ்.பி  மோகன்தாஸ் அறிவுரை கூறினார். மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், குடித்து விட்டு லாரிகளை ஓட்டக்கூடாது.பள்ளி குழந்தைகள் முதல் பொதுமக்கள் யாரும் பாதிக்கக்கூடாது. அப்படி மீறி அதிக வேகத்தில் வண்டிகளை இயக்கினால் டிரைவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று லாரி டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனையடுத்து அரியலூர் அரசு மருத்துவமணைக்கு ரத்தம் வழங்குவதற்காக 100க்கும் மேற்பட்டோர் ரத்தானம் வழங்கினர்.

அரியலூர்அரசு கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

அரியலூர், நவ. 1:  அரியலூர் அரசு கலை கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் நல மையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார். பின்னர் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஐஆர்சிஎஸ் துணைத்தலைவர் சுப்பிரமணியன், துணை சேர்மன் பாஸ்கரன், பேராசிரியர்கள் அருள், சுமதி மற்றும் நலச்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரியலூர், நவ. 1:  அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சமக்கிரா சிஷா சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை கலெக்டர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள 114 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று 150க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். கண்காட்சியில் உடல்நலமும் சுகாதாரமும், இயற்கை வளங்களை பாதுகாத்தல், மறுசுழற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, கல்வி மேலாண்மை, ஆற்றல் வளங்களை பாதுகாத்தல் என்ற தலைப்புகளில் பல்வேறு விதமாக காட்சி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இயற்கை உணவுமுறை, எரிவாயு, மழைநீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் முறைகள் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் துணை தாசில்தாரிடம் லேப்டாப் ஒப்படைப்பு

அரியலூர், நவ. 1: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் துணை தாசில்தாரிடம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் லேப்டாப் ஒப்படைத்தனர். அடங்கல் முறையில் தற்போது  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ அடங்கல் முறையை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலருக்கு மாவட்ட மாறுதல் வழங்க கோருதல் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூரில் தலைமையிடத்து துணை  தாசில்தார் குருநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்த 24 பேர்,  கிராம நிர்வாக அலுவலர்  வட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஒரு நேற்று  ஒரு நாள் மட்டும் தாற்காலிக விடுப்பு எடுத்து தங்களுடைய லேப்டாப் மற்றும் சிம் கார்டுகளை ஒப்படைத்தனர்.

காலமுறை ஊதியம் கேட்டு 7வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், நவ. 1:  காலமுறை ஊதியம் கேட்டு அரியலூரில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சத்துணவு  ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு  ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் காலி  பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரியலூர் அண்ணா சிலை அருகே 7வது நாளாக கருப்பு பேட்ச், கருப்பு துண்டு மற்றும் கருப்பு சேலை அணிந்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி, மாவட்ட துணைத்தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

கலெக்டர் தகவல் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 335 மனுக்கள் குவிந்தன

அரியலூர்,அக்.30: அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 335 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்பனங்குறிச்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர்,அக்.30: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுப்பனங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தினர். பின்பு பள்ளி தலைமையாசிரியர் கிளாஸ்டிஸ் கலாவதி முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மாணவர்கள், ஊர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை சேகரிப்பது முக்கியத்துவத்தையும், மழை நீரை சேகரிப்பது முக்கியத்துவத்தை பற்றியும் மழைநீரை சேகரிக்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேச மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா

அரியலூர்,  அக். 30: அரியலூர் பெரிய தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோயிலில் 48ம் நாள்  மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி பரிவார தெய்வங்களான முருகன்,  விநாயகர், மூப்பனார், காளியம்மன் சுவாமிக்கு அலங்காரங்கள் செய்து மண்டல  பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முனியமுத்து, வில்லான், சீனிவாசன்,  கருணாநிதி, காளிமுத்து, குபேரன், மருதமுத்து மனோகரன், சிவஞானம் மற்றும்  பக்தர்கள் பங்கேற்றனர்.

அரியலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,அக்.30: சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், உள்ளாட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த கோரியும், அரியலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வரி உயர்வோடு, குடிநீர் கட்டணம் குடிநீர் இணைப்பு கட்டணம் பெயர் மாற்றம் பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ள வரியினை நகராட்சி ஆணையர்கள் தன்னிச்சையாக தீர்மானம் போட்டு பல மடங்கு வரை உயர்ந்துள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், அரசு விதித்துள்ள சொத்துவரி உயர்த்தியும், உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும் எடப்பாடி அரசைக் கண்டித்தும் கண்டன் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,அக்.30: சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், உள்ளாட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த கோரியும், அரியலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வரி உயர்வோடு, குடிநீர் கட்டணம் குடிநீர் இணைப்பு கட்டணம் பெயர் மாற்றம் பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ள வரியினை நகராட்சி ஆணையர்கள் தன்னிச்சையாக தீர்மானம் போட்டு பல மடங்கு வரை உயர்ந்துள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், அரசு விதித்துள்ள சொத்துவரி உயர்த்தியும், உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும் எடப்பாடி அரசைக் கண்டித்தும் கண்டன் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேச மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா

அரியலூர்,  அக். 30: அரியலூர் பெரிய தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோயிலில் 48ம் நாள்  மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி பரிவார தெய்வங்களான முருகன்,  விநாயகர், மூப்பனார், காளியம்மன் சுவாமிக்கு அலங்காரங்கள் செய்து மண்டல  பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முனியமுத்து, வில்லான், சீனிவாசன்,  கருணாநிதி, காளிமுத்து, குபேரன், மருதமுத்து மனோகரன், சிவஞானம் மற்றும்  பக்தர்கள் பங்கேற்றனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர்,அக்.30: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுப்பனங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தினர். பின்பு பள்ளி தலைமையாசிரியர் கிளாஸ்டிஸ் கலாவதி முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியில் மாணவர்கள், ஊர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை சேகரிப்பது முக்கியத்துவத்தையும், மழை நீரை சேகரிப்பது முக்கியத்துவத்தை பற்றியும் மழைநீரை சேகரிக்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.