Finance - Dinakaran

டிசம்பர் 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.29, டீசல் ரூ.68.14

சென்னை:  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை மாற்றப்படாமல் ரூ.73.29-ஆகவும், டீசல் விலை ரூ.68.14-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரூபாய் மதிப்பு அபார உயர்வு

மும்பை: ரூபாய் மதிப்பு நேற்று 5 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 112 காசு எகிறியது. நேற்று முன்தினம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.71.56ஆக இருந்தது. காலையில் வர்த்தகம் துவங்கியபோதே ரூ.71.34 என ஏற்றம் அடைந்தது. நேற்று வர்த்தகம் முடிவில் 112 காசு உயர்ந்து ரூ.70.44 ஆக இருந்தது. கச்சா எண்ணெய் 14 மாதங்களில் குறைந்த பட்ச அளவாக பேரல் 58.26 டாலருக்கு வர்த்தகமானது. இதுவே மதிப்பு உயர காரணம். இதற்கு முன்பு 2013 செப்டம்பர் 19ம் தேதி ரூபாய் 161 காசு உயர்ந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

மத்திய அரசு புதிய சட்டம் ஆதார் இணைப்பது கட்டாயமில்லை விரும்பினால் மட்டுமே அனுமதிக்கலாம்

புதுடெல்லி: மொபைல், வங்கி கணக்குடன் விருப்பத்தின் பேரில் ஆதாரை இணைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மொபைல் சிம் கார்டு வாங்குவது, வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் மொபைல் எண், வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்துள்ளனர். இதற்கிடையே, ஆதாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசின் மானியம், பான் எண் ஆகியவற்றிக்கு மட்டுமே ஆதார் கட்டாயம் என உத்தரவிட்டது. மற்றபடி, வங்கி கணக்கு, மொபைல் எண் பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, விருப்பத்தின் பேரில் மொபைல், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, தொலைதொடர்பு சட்டம், சட்டவிரோத பணி பரிவர்த்தனை தடுப்பு சட்டம், ஆதார் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், விருப்பத்தின் பேரில் ஆதாரை தருபவர்களின் விவரங்களை மத்திய அரசு பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், மின்னணு கேஒய்சி, பயோமெட்ரிக் அடையாள வசதிகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் இது வழங்கும். அதோடு, ஆதாரை மறைமுகமாக வலுவாக்கும் அம்சமும் அடங்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பால், ஆதாருக்கு பதிலாக வாடிக்கையாளர்களிடமிருந்து வேறு அடையாள ஆவணங்களை பெற வேண்டிய கட்டாயத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் தள்ளப்பட்டன. இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் நிலை உருவானது. தற்போது மத்திய அரசு மேற்கொள்ள உள்ள சட்ட திருத்தத்தால் அந்நிறுவனங்களும் நிம்மதி அடைந்துள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த சட்ட திருத்தம் ஆதார் பயன்பாட்டை மீண்டும் ஊக்குவிக்கும். ஆதார் தகவல்களை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்தும்’’ என்றார்.* வங்கி கணக்குகள் திறக்க ஆதார் அட்டை அவசியம் இல்லை* வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமும் இல்லை* மொபைல் எண் பெறுவதற்கு ஆதார் தேவையில்லை.* சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும் ஆதார் கட்டாய தேவையில்லை.

விற்பனையில் தொடர்ந்து சரிவு தங்கம் மீதான மோகம் குறைகிறதா? ஆன்லைன் வர்த்தகம் கைகொடுக்குமா?

புதுடெல்லி: உலகிலேயே அதிக அளவில் விற்பனை ஆகி வந்த நாடு என்ற நிலை போய், சமீப காலமாக தங்கம் வாங்குவது வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு இறக்குமதிக்கு விதித்த கட்டுப்பாடு, இளைய வயதினருக்கு அதன் மீதான ஈர்ப்பு குறைகிறது என்பது தான். இவர்களை தங்கம் வாங்க வைக்க ஆன்லைன் வர்த்தகம் கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த தீபாவளி உட்பட விழாக்காலங்களில் தங்கம் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.சர்வதேச அளவில் ஆன்லைனில் தங்க, வெள்ளியை விற்கும் சேப் கோல்டு நிறுவனம் இந்தியாவில் தங்க விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு சீனாவின் அலிபாபா மற்றும் வாரன் பப்பட் நிறுவனம் கைகொடுக்கிறது. டிஜிட்டல் பணம் செலுத்த பேடிஎம் உதவுகிறது. இந்த திட்டத்தில், ஒரு ரூபாய் முதலீடு போதும். ஆனால், கிராம் ₹3200 என இருந்தால் அந்த அளவு முதலீடு சேர்ந்ததும் தங்கம் சப்ளை செய்யப்படும். இதில் இதுவரை 30 லட்சம் பேர் வாடிக்கையாளராக உள்ளனர். இதை ஒன்றரை கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகளை விட ஆன்லைன் விற்பனை குறைவுதான். 500 டன் முதல் 1,000 டன் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விற்பனை ஆகிறது. ஏற்கனவே இந்தியாவில் டைட்டன், ஜவேரி நிறுவனங்கள் ஆன்லைனில் தங்கம் விற்னை செய்கின்றன. இந்த நிறுவனங்களுடன் புதிய ஆன்லைன் நிறுவனங்கள் போட்டி போடும் நிலை உருவாகி உள்ளது.கத்தை பணம் வேணாம்ஒத்த ரூவா போதும்தங்கம் வாங்க நகைக்கடைக்கு சென்றால், குறைந்த பட்சம் ஒரு கிராமாவது வாங்க வேண்டி வரும். எதைப்பார்த்தாலும் வாங்க தோன்றும். ஆனால் பட்ஜெட் கைமீறுகிறதே என மனசும், பர்சும் படபடக்கும். இங்கேதான் ஆன்லைன் நிறுவனங்களின் உத்தி உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய ஒரு ரூபாய் கூட போதுமே என்று சுண்டி இழுக்கின்றன. ஒரு ரூபாய் போட்டால் தங்கம் வந்து விடுமா?. ஒரு கிராம் நாணயம் தேவையென்றால் கூட, காக்காய் கல்லை போட்ட மாதிரி காத்துக்கிடக்க வேண்டும்.* கடந்த செப்டம்பருடன் முடிந்த ஓராண்டில் 524 டன் தங்கம் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளது. * கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டால் இந்த அளவு மிக  குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. * கடந்த 2010ம் ஆண்டு அதிக அளவில் அதாவது 1002 டன்கள் தங்கம் விற்பனை ஆனது. * இந்த அளவில் 23 சதவீதம் தான் கடந்தாண்டு தங்கம் விற்பனை ஆனது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.29 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.73.29 ஆக விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.68.14க்கு விற்றபனை செய்யப்படுகிறது.

டிசம்பர் 18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.29, டீசல் ரூ.68.14

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.29-ஆகவும், டீசல் விலை ரூ.68.14-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரூபாய் மதிப்பு பங்குச்சந்தை ஏற்றம்

மும்பை:பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றமுடன் முடிந்தன. வர்த்தக துவக்க நாளான நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 307.14  புள்ளிகள் உயர்ந்து 36,270.07 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 82.90 புள்ளிகள் உயர்ந்து 10,888.35 புள்ளிகளாகவும் இருந்தது. நேற்று காலை பங்குச்சந்தை ஏற்றத்துடனே துவங்கியது. மதியம் வரை பெரிய அளவில் உயரவில்லை. வர்த்தகம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பு திடீர் ஏற்றம் பெற்றது. கடந்த வாரம் 5 மாநில தேர்தல் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வார துவக்கத்திலேயே ஏற்றமுடன் காணப்பட்டது முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கிறது. ரூபாய் மதிப்பும் 34 காசு உயர்ந்து 71.56 ஆக இருந்தது.

ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல... அலங்காநல்லூர் இதுக்கும் பிரபலம் பொங்கலை ‘இனிப்பாக்க’ தயாராகுது வெல்லம்

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் கடந்த 4, 5 ஆண்டுகளாகவே மழை பொய்த்து வறட்சி தாண்டவமாடியது. இதனால் நெல் விளைச்சல், கரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் புறநகர் பகுதி கிராமங்களில் நெல் அறுவடை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. ஒரு போக நெல் சாகுபடி அறுவடை பணிகள் முடிந்து, தற்போது 2ம் போகத்திற்கான நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு புகழ் பெற்ற அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கோட்டைமேடு, கல்லணை, கொண்டையம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பயரிடப்பட்ட கரும்புகள் வெல்லம் தயாரிக்க வெட்டப்பட்டு வருகிறது.வழக்கமாக இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே வெல்லம் தயாரிக்கும் பணி துவங்கி விடும். தற்போது பறிக்கப்பட்ட கரும்புகளை ஆலைகளில்  அரவை செய்து பாகு காய்ச்சி, வெல்லம் தயாரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. உருண்டை வெல்லம், மண்டை வெல்லம், மலையாள வெல்லம், அச்சு வெல்லம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் பகுதி வெல்லத்திற்கு தனிச்சுவை உண்டு. இதனால் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவு வாங்கி செல்வது வழக்கம். கடந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் 1,050க்கு விற்பனையானது. இந்த ஆண்டு தொடர்மழை மற்றும் புயல் சேத பாதிப்பால் பெரும்பாலான இடங்களில் கரும்புகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக தற்போது ஒரு கிலோ வெல்லம் 50 வீதம் ஒரு சிப்பம் 1,500 வரை விற்பனையாகிறது. ஒரு டன் கரும்புக்கு 80 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யப்படுவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு சர்வரில் பதிவான இந்தியர்களின் கார்டு விவரங்களை அழிக்க மாஸ்டர் கார்டு உறுதி

புதுடெல்லி: வெளிநாட்டு சர்வர்களில் பதிவாகியுள்ள இந்தியர்களின் கார்டு எண், பரிவர்த்தனை விவரங்களை அழித்து விடுவதாக ரிசர்வ் வங்கியிடம் மாஸ்டர்கார்டு உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மாஸ்டர் மற்றும் விசா நிறுவனத்துடன் இணைந்த கார்டுகளாக உள்ளன. இந்த கார்டு நம்பர்களை வைத்து வெளிநாட்டில் இருந்து ஆன்லைனில் பரிவர்த்தனை செய்து மோசடி செய்ய முடியும். இவ்வாறு பல சம்பவங்கள் நடக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து பரிவர்த்தனை செய்யும்போது ஒரு முறை பாஸ்வேர்டு அவசியமில்லை.  இதற்கு மாற்றாக, இந்தியாவுக்கு எனவே பிரத்யேகமாக ரூபே கார்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் புதிய நெரிமுறையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில், வெளிநாட்டு கார்டு நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளிநாட்டு சர்வர்களில் பதிவு செய்து வைக்கக்கூடாது. இந்திய சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும். இதற்கான வசதிகளை ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இது அக்டோபர் 16 முதல் நடைமுறையில் உள்ளது.இதுதொடர்பாக மாஸ்டர் கார்டு நிறுவனம் ரிசர்வ் வங்கிக்கு இந்த திட்டம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து மாஸ்டர் கார்டு இந்தியாவின் தெற்காசிய பிரிவு தலைவர் போருஷ் சிங் கூறுகையில், இந்தியர்களின் கார்டு எண், பரிவர்த்தனை விவரங்கள் கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் மும்பையில் உள்ள சர்வரில் சேமித்து வவைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முந்தைய பரிவர்த்தனைகள் மட்டுமே வெளிநாட்டு சர்வர்களில் உள்ளன. வெளிநாட்டு சர்வரில் மேற்கண்ட தேதிக்கு முன்பு பதிவாகியுள்ள இந்தியர்களின் பரிவர்த்தனை மற்றும் கார்டு எண் விவரங்களை குறிப்பிட்ட தேதி முதல் அழிக்க தொடங்கி விடுவோம் என உறுதி அளித்துள்ளது என்றார். அதேநேரத்தில் இந்த விவரங்களை அழித்து விடுவதால் பழைய பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் பிரச்னை ஏற்படலாம் எனவும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதாரத்துக்கு பாதிப்பு என ரகுராம் ராஜன் எச்சரிக்கை உபரி இருப்பை கொடுத்து விட்டால் ரிசர்வ் வங்கியின் தரம் குறைந்து விடும்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள இருப்பை மத்திய அரசுக்கு கொடுத்து விட்டால், ரிசர்வ் வங்கியின் தரக்குறியீடு குறைந்து விடும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள நிதி 3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்கிறது எனவும், ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் மத்திய அரசு குறுக்கீடு செய்கிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி அளித்தார் உர்ஜித் படேல். தற்போது புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உபரி நிதி அளிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் டிவி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கி தற்போது ‘ஏஏஏ’ தரச்சான்று (நிதிநிலை நன்றாக இருப்பது என்பதை குறிக்கும் குறியீடு) பெற்றிருக்கிறது. மத்திய அரசுக்கு தன்னிடம் உள்ள உபரி நிதியை ரிசர்வ் வங்கி வழங்கி விட்டால் இந்த தரநிலை குறைந்து விடும். இது இந்த வங்கி கடன் வாங்கும் செலவை அதிகரித்து விடும். அதோடு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு அதிக ரேட்டிங் தேவை. இந்த ரேட்டிங் குறையாத அளவுக்கு ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ் ஷீட் வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது? இவ்வாறு மத்திய அரசுக்கு உபரி நிதியை ரிசர்வ் வங்கி கொடுப்பதன் பாதிப்பு இப்போது தெரியாமல் போகலாம். ஆனால், காலப்போக்கில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் திடீர் ஏற்றத்தாழ்வுகள், சிக்கல்கள் ஏற்படும்போது அந்த  பாதிப்புகளை ஈடுசெய்ய ரிசர்வ் வங்கியிடம் போதுமான இருப்பு இருக்க வேண்டியது அவசியம் என்றார்.நீங்கள் கவர்னராக இருந்தபோது இத்தகைய அழுத்தங்கள் மத்திய அரசிடம் இருந்து வந்தனவா என கேட்டதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி அதிகமாக நிதி தர வேண்டும் என்றுதான் மத்திய அரசுகள் எதிர்பார்க்கின்றன. நான் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தபோது, ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், ஒரு வேளை எவ்வளவு நிதி இருப்பு தேவையானதாக இருக்கும் என கேட்டிருந்தேன். நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது, இதுதொடர்பாக ஆராய ஒரு குழு அமைத்தேன். அந்தகுழு, முழு லாபத்தையும் தர அதிக இருப்பு வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தது. நான் கவர்னராக இருந்த 3 ஆண்டுகளில், மத்திய அரசுக்கு மிக அதிக டிவிடென்ட்டை ரிசர்வ் வங்கி அளித்தது. ரிசர்வ் வங்கி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு நிதி அளிக்கப்படவில்லை என்றார். இதுபோல், பணமதிப்பு நீக்கம் சரியான நடவடிக்கை அல்ல. உலக நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ந்து வந்தபோதும், இந்தியாவின் வளர்ச்சி சரிவதற்கு பணமதிப்பு நீக்கம் காரணமாகிவிட்டது. இது ஒரு மோசமான யோசனை. இதுபோல் ஜிஎஸ்டியாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது எனவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

உங்கள் சீக்ரெட் 3,500க்கு விற்பனை

காலையில் விடிந்தது முதல் தூங்கப்போகும் வரை மொபைல்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. பலர், வீட்டில் இருப்பவர்களுடன் பேசுகிறார்களோ இல்லையோ, மொபைல்தான் அவர்களது முழு உலகம். உணவு ஆர்டர், டாக்சி, பொருட்கள் வாங்குவது கூட ஆன்லைனில்தான். இதற்கெல்லாமே ஆப்ஸ்கள் உள்ளன. இதுதவிர, சிலர் ரகசியமாக ஆபாச படங்கள் பார்ப்பதும் அதிகம். இவர்களை குறிவைத்து இயங்குபவை டார்க்வெப்கள். பொதுவாக எல்லா இணையதளங்களும் சும்மா கூகுளில் டைப் செய்து தேடினாலே போதும். எளிதாக வெப்சைட்டை கண்டுபிடித்து போய்விடலாம். ஆனால், டார்க் வெப் அப்படியல்ல. அலிபாபா குகை மாதிரி சங்கேத மொழிகள் தெரிந்தால்தான் திறக்க முடியும். இதுவும் கூட இதை டார்க் வெப் என அழைக்க ஒரு காரணம். சில புதிய சினிமா படங்கள் கூட இப்படி ஒரு வெப் மூலம் கசியவிடப்பட்டதுதான் என்கிறார்கள். பலரது சீக்ரெட்களை அம்பலப்படுத்துபவர்கள் இதன்மூலம்தான் பதிவேற்றுகிறார்கள். இதன்மூலம் சட்டவிரோதமாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் சிலரை பற்றிய விவரங்கள் விற்கப்படுகின்றன. பொதுவாக மேலே கூறப்பட்ட உணவு ஆர்டர், டாக்சி போன்ற ஆப்ஸ்கள், ஆபாச பட வெப்சைட்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பதிவு செய்து வைக்கும் வசதிகள் உள்ளன. சில பாதுகாப்பானவைதான். ஆனால் ஆபாசபட வெப்சைட்கள் மிக ஆபத்தானவை.இதுபோன்ற ஆப்ஸ், இணையதளங்களில் பதிவு செய்து வைக்கும் கார்டு விவரங்கள், சம்பந்தப்பட்ட நபரை பற்றி இணையதளங்களில் அவரது தேடல்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைத்துள்ளதை இந்த டார்க்வெப்கள் வெறும் 50 டாலருக்கு (சுமார் 3500)க்கு விற்கின்றன என எச்சரிக்கை செய்கிறது வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம்.  போதை மருந்து, ஆயுத வியாபாரம், அரசுக்கு எதிரான ரகசியங்கள், விக்கிலீக்ஸ் என பலவும் இத்தகைய டார்க்வெப்பில் கசிந்தவைதான். எனவே, ஆபாச வெப்சைட், பாதுகாப்பற்ற சில ஆப்ஸ்களில் கிரெடிட் கார்டு, வங்கி விவரங்களை பதிவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் அவ்ளோதான் என எச்சரிக்கிறது வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் நிறுவனம்.

பெட்ரோல், டீசல் விலை சிறிது உயர்வு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நேற்று சிறிதளவு அதிகரித்தது. நேற்று சென்னையில் பெட்ரோல் 20 காசு உயர்ந்து 73.19 ஆகவும், டீசல் 10 காசு அதிகரித்து 3.55 ஆகவும் இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து விலையை உயர்த்திய இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கடந்த அக்டோபர் 17ம் தேதியில் இருந்து விலையை குறைத்து வருகின்றன. இதுவரை சென்னையில் பெட்ரோல் 13.28, டீசல் 12.07 குறைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று முதல் முறையாக டீசல் 10 காசு உயர்ந்துள்ளது. பெட்ரோல் கடந்த 13ம் தேதியில் இருந்து 37 காசு அதிகரித்துள்ளது.

டிசம்பர் 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.19, டீசல் ரூ.68.07

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.19-ஆகவும், டீசல் விலை ரூ.68.07-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் விமான சேவை அதிகரித்தாலும் கட்டணக் கொள்கையால் நஷ்டம்: ஐஏடிஏ

ஜெனீவா: இந்தியாவில்விமான சேவை யின் தேவை அதிகரித்தாலும், விமான கட்டண கொள்கையால் நிறுவனங்களுக்கு  இழப்பை ஏற்படுத்துகிறது என, சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர்  அலெக்சாண்டர் டி ஜூனியாக் கூறினார். சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐஏடிஏ) தலைவர் அலெக்சாண்டர் டி ஜூனியாக் அளித்த பேட்டியில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடையே கட்டண போட்டி, விமான சேவையின் தேவையை  அதிகரித்துள்ளது.இருப்பினும் விமான கட்டணம் தொடர்பான கொள்கைகள் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. ஆனால், வரி விதிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்றவை விமான  நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இது விமான கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தி விடுகிறது என்றார்.

போகல... ஆனா, போன மாதிரி! ரயில்வே புது முயற்சி

புதுடெல்லி: ரயில் பயணிகள், மாணவர்களுக்கு சுற்றுலா தலங்களை இருந்த இடத்தில் இருந்தே கண்டு களிக்க புது முயற்சியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.வீடியோவிலேயே ஒரு இடத்தை நேரில் சென்று பார்த்ததை போன்ற உணர்வை தருவது  விர்ச்சுவல் ரியாலிடி (விஆர்). இதற்கென விஆர் முப்பரிமாணத்துடன் பார்க்கக்கூடிய வீடியோக்கள் பல யூடியூப் உட்பட பல்வேறு இணைய  தளங்களில் உள்ளன. இதை கூகுள் கார்ட்போர்டு மூலம் பார்க்க வேண்டும்.  ரயில்வேயின் பாரம்பரிய இடங்களை இப்படி ஒரு வசதியுடன் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. முதலில் கல்கா சிம்லா ரயில்வே, சத்திரபதி சிவாஜி டெர்மினஸ் போன்றவை விஆர் எபெக்ட்டுடன் பதிவு செய்யப்பட இருக்கின்றன.  ரயிலில் செல்லும்போதே இவற்றை பார்க்க ரயில் பயணிகளுக்கு வாடகைக்கு பிரத்யேக விஆர் கண்ணாடிகள் வாடகைக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கும் இந்த வசதி செய்து தர என்ஜிஓவுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.  இதன்மூலம் மாணவர்கள் ஒரு பாரம்பரிய இடத்தை பற்றி பாடம் நடத்தும்போது, நேரடியாக அங்கு சென்று பார்த்தது போன்ற உணர்வை பெறலாம். இந்த புதிய அனுபவம் ஆசிரியர்களுக்கும் கற்பித்தலில் புதிய அணுகுமுறை  கொண்டதாக இருக்கும் என ரயில்வே (ஹெரிடேஜ்) செயல் இயக்குநர் சுப்ரதா நாத் கூறினார்.

போகல... ஆனா, போன மாதிரி! ரயில்வே புது முயற்சி

புதுடெல்லி: ரயில் பயணிகள், மாணவர்களுக்கு சுற்றுலா தலங்களை இருந்த இடத்தில் இருந்தே கண்டு களிக்க புது முயற்சியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.வீடியோவிலேயே ஒரு இடத்தை நேரில் சென்று பார்த்ததை போன்ற உணர்வை தருவது  விர்ச்சுவல் ரியாலிடி (விஆர்). இதற்கென விஆர் முப்பரிமாணத்துடன் பார்க்கக்கூடிய வீடியோக்கள் பல யூடியூப் உட்பட பல்வேறு இணைய  தளங்களில் உள்ளன. இதை கூகுள் கார்ட்போர்டு மூலம் பார்க்க வேண்டும்.  ரயில்வேயின் பாரம்பரிய இடங்களை இப்படி ஒரு வசதியுடன் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. முதலில் கல்கா சிம்லா ரயில்வே, சத்திரபதி சிவாஜி டெர்மினஸ் போன்றவை விஆர் எபெக்ட்டுடன் பதிவு செய்யப்பட இருக்கின்றன.  ரயிலில் செல்லும்போதே இவற்றை பார்க்க ரயில் பயணிகளுக்கு வாடகைக்கு பிரத்யேக விஆர் கண்ணாடிகள் வாடகைக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கும் இந்த வசதி செய்து தர என்ஜிஓவுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.  இதன்மூலம் மாணவர்கள் ஒரு பாரம்பரிய இடத்தை பற்றி பாடம் நடத்தும்போது, நேரடியாக அங்கு சென்று பார்த்தது போன்ற உணர்வை பெறலாம். இந்த புதிய அனுபவம் ஆசிரியர்களுக்கும் கற்பித்தலில் புதிய அணுகுமுறை  கொண்டதாக இருக்கும் என ரயில்வே (ஹெரிடேஜ்) செயல் இயக்குநர் சுப்ரதா நாத் கூறினார்.

7 மாதத்தில் 3.15 லட்சம் டன் வந்தது இந்தியாவில் ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு: விலை சரிவால் விவசாயிகள் கவலை

நாகர்கோவில்: தொடர் விலை சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் ரப்பர் இறக்குமதி கடந்த ஏழு மாதத்தில் 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ்.4 கிரேடு ரப்பர் கிலோ ₹176.82 என்று சராசரி விலை இருந்து வந்தது. தற்போது விவசாயிகளுக்கு ₹121 மட்டுமே கிடைக்கிறது. கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு  கிலோ ₹123.50 ஆகவும், கொச்சியில் கிலோ ₹123 ஆகவும் நேற்று முன்தினம் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையான பாங்காக்கில் ₹101.53 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டாக உள்நாட்டு உற்பத்தி குறைந்து  ரப்பர் இறக்குமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ரப்பர் இறக்குமதி உள்நாட்டு உற்பத்தியை கடந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 3.15 லட்சம் டன்  ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  இந்த காலக்கட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி 3.44 லட்சம் டன்.தாய்லாந்து, இந்தோனேஷியா நாடுகள் இந்திய ரப்பர் சந்தையை ஆக்கிரமிக்கின்றன. வியட்நாம், சீனாவில் இருந்தும் ரப்பர் வரத்து  தொடங்கியுள்ளது இது ரப்பர் விவசாயிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொத்த ரப்பர் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 6.94 லட்சம் டன் என்று குறைந்தது. இந்த உற்பத்தியில் கேரளா தவிர தமிழகம்  உள்ளிட்ட பிற மாநிலங்களில் பங்களிப்பு மட்டும் 1.50 லட்சம் டன் ஆகும். ரப்பர் உற்பத்தி அதிகரித்தும் விலை சரிவில் இருந்து ரப்பர் மீளவில்லை.இதனால் இறக்குமதி ரப்பருக்கு கட்டுப்பாடுகள் விதிக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இறக்குமதி அதிகரிப்பால் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

7 மாதத்தில் 3.15 லட்சம் டன் வந்தது இந்தியாவில் ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு: விலை சரிவால் விவசாயிகள் கவலை

நாகர்கோவில்: தொடர் விலை சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் ரப்பர் இறக்குமதி கடந்த ஏழு மாதத்தில் 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ்.4 கிரேடு ரப்பர் கிலோ ₹176.82 என்று சராசரி விலை இருந்து வந்தது. தற்போது விவசாயிகளுக்கு ₹121 மட்டுமே கிடைக்கிறது. கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு  கிலோ ₹123.50 ஆகவும், கொச்சியில் கிலோ ₹123 ஆகவும் நேற்று முன்தினம் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையான பாங்காக்கில் ₹101.53 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டாக உள்நாட்டு உற்பத்தி குறைந்து  ரப்பர் இறக்குமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ரப்பர் இறக்குமதி உள்நாட்டு உற்பத்தியை கடந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 3.15 லட்சம் டன்  ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  இந்த காலக்கட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி 3.44 லட்சம் டன்.தாய்லாந்து, இந்தோனேஷியா நாடுகள் இந்திய ரப்பர் சந்தையை ஆக்கிரமிக்கின்றன. வியட்நாம், சீனாவில் இருந்தும் ரப்பர் வரத்து  தொடங்கியுள்ளது இது ரப்பர் விவசாயிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொத்த ரப்பர் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 6.94 லட்சம் டன் என்று குறைந்தது. இந்த உற்பத்தியில் கேரளா தவிர தமிழகம்  உள்ளிட்ட பிற மாநிலங்களில் பங்களிப்பு மட்டும் 1.50 லட்சம் டன் ஆகும். ரப்பர் உற்பத்தி அதிகரித்தும் விலை சரிவில் இருந்து ரப்பர் மீளவில்லை.இதனால் இறக்குமதி ரப்பருக்கு கட்டுப்பாடுகள் விதிக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இறக்குமதி அதிகரிப்பால் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

‘பாய்சனாக’ மாறிய பிஞ்சு குழந்தைகளின் ‘பாச பவுடர்’ ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ்

* பல ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிப்பு * தெரிந்தே விற்பனை செய்தது அம்பலம்புதுடெல்லி: ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் துகள் கலந்திருப்பதும், இந்த பவுடர் பயன்படுத்திய பல ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.யாருக்காவது குழந்தை பிறந்திருந்தால் உடனே வாங்கக்கூடிய கிப்ட் ‘ஜான்சன் பேபி கிட்’ ஆகத்தான் இருக்கும். இந்தியாவில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பவுடரை எல்லாம்  நம்புகிறார்களோ இல்லையோ... ஜான்சன் பேபி பவுடரை விட என் குழந்தைக்கு பாதுகாப்பு வேறெதுவுமே இல்லை என்று அடித்துச் சொல்வார்கள் தாய்மார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இதே நிலைதான்.  இந்த நம்பிக்கையை தூள் தூளாக்கும் வகையில் வந்துள்ளது ஒரு பரபரப்பு ரிப்போர்ட். ஜான்சன் பவுடர் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பதுதான். இதற்கு முன்பும் ஜான்சன் தயாரிப்புகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இவா எச்வேரியா என்ற பெண் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு ஜான்சன் பேபி பவுடர்தான் காரணம் என கண்டுபிடித்த அவர் லாஸ் ஏஞ்சலஸ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 11 வயதில் இருந்தே ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தி வருவதாகவும், இதனால்தான் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். அவருக்கு 417 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு  வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதோடு இச்சம்பவத்தை பலர் மறந்து விட்டனர். இந்த சூழ்நிலையில் மற்றொரு பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான பல்வேறு உண்மைகளை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. டெக்சாஸ் நகரில் மசாஜ்  பள்ளி நடத்தி வந்தவர் டார்லின் காக்கர். 52 வயதானபோது இவருக்கு நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டது தெரிந்தது. மிகக்கொடிய இந்த புற்றுநோய் வந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் காரணம்  என தெரிய வந்தது. சுரங்கம், கப்பல் கட்டும் பணி, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குதான் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். ஆஸ்பெஸ்டாஸ் துகளுக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்ேப இல்லையே என மண்டையை குழப்பி  யோசித்த அவருக்கு, சிறு வயது முதலே ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தி வந்தது ‘பொறி தட்டியது’. தனது 2 பெண் குழந்தைகளுக்கும் இந்த பவுடரை போட்டு வந்தார். ஏனென்றால் இதை தவிர எந்த துகளுடனும் அவருக்கு  சம்பந்தம் இல்லை. ஆராய்ந்து பார்த்தபோது, ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருந்தது தெரிய வந்தது. உடனே ஜான்சன் நிறுவனம் மீது 1999ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் டார்லின். ஆனால், ஆஸ்பெஸ்டாஸ் துகள் கலக்கவே இல்லை என சாதித்து விட்டது ஜான்சன் நிறுவனம். வாதி என்பதால் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு  இவருக்குதான். இதனால் வழக்கில் தோல்வி அடைந்தார். நோய் தீவிரத்தால் 2009ல் இறந்தார்.ஆனால் அவர் தேடித்தேடி களைத்துப்போன ஆதாரங்கள் இப்போது வெளிவந்துள்ளன. அதாவது, 1972ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை  ஜான்சன் பேபி பவுடர் மூன்று முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில்  ஆஸ்பெஸ்டாஸ் பவுடர் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. நிறுவன மெமோ மற்றும் ஆவணங்களில் இதை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது ராய்டர்ஸ்.அதற்கு ஆஸ்பெஸ்டாஸ் கலந்துள்ளது தெரிந்த பிறகும், அதை மறைத்து அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் ஷவர் டூ ஷவர் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக சுமார் 11,700 வழக்குகள் போடப்பட்டுள்ளன.பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் இந்த பவுடரை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், நீதிமன்றம் இழப்பீடு  அறிவித்தாலும் மேல் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை பெற்று விடுகிறது ஜான்சன் நிறுவனம். காரணம், நிரூபணம் இல்லை என்பதுதான். இப்போது இந்த உண்மைகளை போட்டு உடைத்து விட்டது ராய்டர்ஸ் செய்தி  நிறுவனம். இதுகுறித்து நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டார்லினின் மகள்கள் கேடி இவான், கிறிஸ்டல் டெகார்டு ஆகியோர் கூறுகையில், கடைசி வரை தனது வழக்குக்கான ஆதாரங்களை எங்கள் தாய் தேடி வந்தார் என  கூறியுள்ளனர். இந்த விவகாரம் ஜான்சன் நிறுவனத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ஆபத்தில் முடிந்த அரவணைப்பு* ஜான்சன் அண்ட் ஜான்சன், அமெரிக்க நிறுவனம். * குழந்தைகளுக்கு மட்டுமின்றி, சரும மற்றும் தலைமுடி பாதுகாப்பு, பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், மருத்துவ கருவிகள், மருந்து பொருட்கள் தயாரிக்கிறது.* 1886ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த நிறுவனம், 132 பழமை வாய்ந்தது. இந்த பாரம்பரிய நம்பிக்ைகதான் தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.* குழந்தைகளுடனான பாசப்பிணைப்பு, அரவணைப்புக்கு அடையாளமாகவே இந்த நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட குழந்தைகள் தயாரிப்புகள் கருதப்பட்டன. ஆனால், ஆபத்துக்கான துவக்கப்புள்ளியாகவே இது மாறியுள்ளது  அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.* ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) என்றதுமே, வீடுகள், தொழிற்சாலைகளில் போடப்பட்டிருக்கும் கூரைதான் எல்லாரது நினைவுக்கும் வரும். * இந்த கூரை தீப்பிடிக்காது, பாதுகாப்பானது என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட உண்மை. இதில் கிரிசோடைல், குரோசிடோலைட், அமோசைட், டிரெமோலைட், ஆக்டினோலைட், ஆந்தோஃபைலைட் தாதுக்கள் உள்ளன. இந்த  அனைத்து வகை கல்நார்களும் வெப்பத்தை அரிதில் கடத்தும் தன்மை கொண்டவை. இதன் மூலக்கூறு அமைப்பில் சிலிக்கான், ஆக்சிசன் உள்ளன.* இதில், கிரிசோடைல் உட்பட அனைத்து கல்நார் வகையும் புற்றுநோயை உண்டாக்கும் இயல்பு கொண்டவை. நுரையீரல், மூச்சுக்குழல், கர்ப்பப்பை, இடைத்தோல் புற்றுநோயை உருவாக்கும். * இதுதவிர நுரையீரல், தொண்டைகளில் பல நோய் பாதிப்புகளை இவை ஏற்படுத்துகின்றன.* ஆசிய நாடுகளில்  இன்னும் கல்நார் பயன்பாடு உள்ளது. ஆந்திரா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்டில் கல்நார் பவிவுகள் காணப்படுகின்றன.* இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.25 லட்சம் டன் கல்நார் கையாளப்பட்டுகிறது.  இதில் ஒரு லட்சம் டன் ஏற்றுமதியாகிறது.* கோவை, அகமதாபாத், ஐதராபாத், மும்பையில் சிமென்ட் ஆலைகளில் பணிபுரிவோரிடம் கல்நார் நுரையீல் நோய் பாதிப்பு 3 முதல் 5 சதவீதம் காணப்படுகிறது. * கல்நார் துணி ஆலைகளில் 10 ஆண்டில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் கல்நார் நுரையீரல் விகிதம் 9 சதவீதமாக உள்ளது. இது சுரங்க ஊழியர்களிடம் 3 சதவீதம், பதப்படுத்தும் ஆலைகளில் 21 சதவீதம் என உள்ளது.

டிசம்பர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ72.99, டீசல் ரூ.67.97

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை மாற்றப்படாமல் ரூ72.99-ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 13 பைசா குறைத்து ரூ.67.97-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.