Latest News - Dinakaran

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சூலூர் 79.41%, திருப்பரங்குன்றம் 74.17%, ஒட்டபிடாரம் 72.61% வாக்கு பதிவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 286 தொகுதிகளில் பாஜக கூட்டணி கைப்பற்றும்: நியூஸ் நேஷன் தகவல்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் 286 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 122 தொகுதிகளையும் இதர கட்சிகள் 134 தொகுதிகளையும் கைப்பற்றும் என நியூஸ் நேஷன் தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்: 295-முதல் 315 இடங்களை பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு: ஸ்வர்ணா செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் 295-ல் இருந்து 315 இடங்கள் வரை பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஸ்வர்ணா செய்தி நிறுவனம் கணித்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் கூட்டணி 122-ல் இருந்து 125 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் இதரக் கட்சிகள் 102 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக ஸ்வர்ணா கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.  

தேர்தல் முடிவடைந்தபின் கணிப்புகளில் பாஜக 306 இடங்களும், திமுக 34 மக்களவைத் தொகுதி கைப்பற்ற வாய்ப்பு : கருத்துக் கணிப்பில் தகவல்

சென்னை: தேர்தல் முடிவடைந்தபின் வெளியான வாக்கு கணிப்புகளில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது. டைம்ஸ்நவ்- வி.எம்.ஆர். வாக்கு கணிப்புப்படி பாரதிய ஜனதா கூட்டணி 306 இடங்கள் கைப்பற்ற வாய்ப்பு என கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 34 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவிலிருந்து வந்த ஹகீம், துபாயிலிருந்து வந்த நாகூர், அரபாத்திடம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மக்களவைக்கான 7-வது கட்ட தேர்தல் 59 தொகுதிகளிலும் நிறைவடைந்தது

* தமிழகத்தில் அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நிறைவடைந்ததுசென்னை: 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மேலும் தமிழகத்தில் அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நிறைவடைந்தது.

இந்தியாவில் 3-வது அணி என்பது சாத்தியம் கிடையாது: முத்தரசன்

சென்னை: இந்தியாவில் 3-வது அணி என்பது சாத்தியம் கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். மேலும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும் கூறினார்.

நாட்டிலேயே மிகவும் குள்ளமான பெண் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்

மத்திய பிரதேசம்: நாட்டிலேயே மிகவும் குள்ளமான பெண்ணான வினிதா மேத்தா மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் அந்த பெண் வாக்களித்தார்.

சூலூர் இடைத்தேர்தலில் 148வது மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

சூலூர்: சூலூர் இடைத்தேர்தலில் 148வது மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல் இயந்திரம் இருக்கும் இடத்தில் 2வது இயந்திரம் வைக்கப்பட்டதாக முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வாக்கு இயந்திரங்கள் இடம்மாற்றி வைக்கப்பட்டதாக முகவர்கள் அளித்த புகாரில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்: 5 மணி நிலவரம்

டெல்லி : 7ம் கட்ட மக்களவை தேர்தலில் 11 மணி நிலவரப்படி  பீகார் - 46.75%, இமாச்சல் பிரதேசம் - 57.43%, மத்திய பிரதேசம் - 59.75%, பஞ்சாப் - 50.49%, உத்தரபிரதேசம் - 47.21%, மேற்குவங்கம் - 64.87%, ஜார்கண்ட் - 66.64%, சண்டிகர் - 51.18% வாக்குகள் பதிவாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து வருகிறார். மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் சோனியாவை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். காலையில் ராகுல் காந்தி மற்றும் சரத் பவாரை சந்தித்த நிலையில் தற்போது சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

மோடி கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு யாத்திரை சென்றது தொடர்பாக ஆந்திரா முதல்வர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார்

ஆந்திரா: மோடி கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு யாத்திரை சென்றது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் அனுப்பீயுள்ளார். மேலும் யாத்திரையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது தேர்தல் விதிமீறல் என புகார் அளிக்கப்பட்டது

அரவக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு போலீஸ் மிரட்டல்

கரூர்: அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததை அம்பலப்படுத்திய செய்தியாளர்களுக்கு போலீஸ் மிரட்டல் விடுத்துள்ளனர். செய்தியை சேகரிக்க விடாமல் வாக்குச்சாவடியில் இருந்து நிருபர்களை அப்புறப்படுத்த போலீஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்தவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் பிடிப்பட்டார். மகேந்திரனை திமுகவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் முன் பணம் கொடுத்தபோது பிடிப்பட்டார். அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்தவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்துள்ளாகியுள்ளது. மேற்கூரை இடிந்த விபத்தில் டீக்கடை நடத்தி வந்த குருநாதன் என்பவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து வளாகத்தில் இருந்த இரண்டு கடைகள் சேதமடைந்தன.

ஒட்டபிடாரம் அருகே பருத்தி, நவதானிய சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே பருத்தி, நவதானிய சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையிர் தீயை அணைக்கும் பணியில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

சிவகங்கையில் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுபிரியர்கள்: போலீசார் தடியடி

சிவகங்கை: புலியூரில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க குவிந்த மது பிரியர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடப்பதால் சிவகங்கை மாவட்டம் புலியூரில் மதுபிரியர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வாக்காளர்களுக்கு அதிமுக ரூ.300 கோடி வரை பணம் வழங்கி உள்ளதாக தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை: வாக்காளர்களுக்கு அதிமுக ரூ.300 கோடி வரை பணம் வழங்கி உள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். மத்தியில் பாஜக ஆட்சி அமைய ஒருபோதும் ஆதரவு தரமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தாமதத்தை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தாமதத்தை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தபால் ஓட்டுகளை எண்ணத் தொடங்கும்போதே, மிண்ணணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி துவங்கும் என கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் : 1 மணி நிலவரம்

டெல்லி : 7ம் கட்ட மக்களவை தேர்தலில் 11 மணி நிலவரம் படி  உத்தரப்பிரதேசம் 37%, இமாச்சல்பிரதேசம் 42.38%, ஜார்கண்ட் 52.89%, சண்டிகர் - 37.50%, பஞ்சாப் 37.86% வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் மேற்குவங்கம் 49.79%, பீகார் 36.20%, மத்திய பிரதேசம் 45.81% வாக்குகள் பதிவாகியுள்ளது.