Nilgiri - Dinakaran

முன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர் கூட்டம்

ஊட்டி, பிப். 15:முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.இதுகுறித்து முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் கூறியிருப்பதாவது: ‘‘முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் இரட்டைப் பிரதிகளில் மனுக்கள் வாயிலாக தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவிக்கலாம்’’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு கராத்தே சீருடை

ஊட்டி, பிப். 15: ஊட்டியில் உள்ள ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகள் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. சில ஆசிரியர், ஆசிரியைகளின் முயற்சியால் அந்தப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த சீருடைகள், ஸ்வெட்டர், டிராக் சூட் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சில பள்ளிகளில் பல்வேறு விளையாட்டுக்களிலும் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வெற்றி பெற்று வருகின்றனர். இது போன்ற பள்ளிகளில் ஊட்டியில் உள்ள ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் முயற்சியால், மாணவர்கள் சிலர் அறிவியல் கண்காட்சியின் போது தேசிய அளவில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுச்சென்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கராத்தே பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் பிரமீளா தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் போது, ஊட்டி அரிமா சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் மணிவண்ணன், முன்னாள் தலைவர்கள் ரவி, சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கராத்தே ஆடைகளை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினர்.

பொக்காபுரம், சோலூரில் மக்கள் தொடர்பு முகாம்

ஊட்டி, பிப். 15: ஊட்டி அருகேயுள்ள பொக்காபுரம், சோலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 278 பயனாளிகளுக்கு ரூ.20.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.அப்போது, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2017-18 நிதியாண்டில் ரூ.2.74 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது. இதில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் 318 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. வீடு கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு வீடு கட்டாமல் உள்ள பயனாளிகள் வீடுகள் கட்ட குழுக்கள் அமைத்து அதன் மூலம் நிதி திரட்டி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.தலா ஒரு வீட்டிற்கு ரூ.50 ஆயிரம் வீதம் 64 வீடுகள் பழுது பார்க்கும் பணி தற்போது நடக்கிறது. அதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட பேரூராட்சிகளில் ரூ.8 ஆயிரமும், ஊராட்சிகளில் ரூ.12 ஆயிரமும் அரசு வழங்குகிறது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது.  எனவே இத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா பேசினார்.  இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள் 20 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதேபோல், பொக்காபுரம் மாரியம்மன் இயற்கை பண்ணை விவசாயிகள் சங்கத்திற்கு வீட்டுத்தோட்டம் அமைக்க மூன்றாம் கட்ட நிதி ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், ரூ.5 லட்சம் மதிப்பில் மிக்சர் இயந்திரம் மற்றும் செங்கல் அச்சு இயந்திரமும் வழங்கப்பட்டது. வாழை தோட்டம் ஸ்ரீஅய்யன் மாட்டுப்பண்ணை சங்கத்திற்கு 200 பயனாளிகளுக்கு ரூ.2.96 லட்சத்தில் தேனீ பெட்டிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் சோலூர் கிராமத்தை சார்ந்த 10 பழங்குடியினருக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பில் விதைகள் வழங்கப்பட்டது.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ. ஆயிரம் வீதம் பெறுவதற்கான ஆணை, 20 பேருக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகள், 5 பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் உட்பட மொத்தம் 278 பயனாளிகளுக்கு ரூ.20.14 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக உல்லத்தி ஊராட்சியில் கல்லட்டி முதல் சோலூர் வரை ரூ.114 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணியினை கலெக்டர் இன்னசென்ட்திவ்யா ஆய்வு செய்தார். இதில் ஊட்டி ஆர்.டி.ஒ., சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பழங்கால சிற்பங்களை பாதுகாக்க பயிற்சி முகாம்

ஊட்டி, பிப். 15: ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓலைசுவடிகள் போன்றவற்றை பதப்படுத்தி பாதுகாக்க, அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊட்டி அரசு கலைக்கல்லூாி அருகே கல் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தர், தோடர், குறும்பர், பனியர் போன்ற பழங்குடியின மக்கள் வசித்த வீடுகளின் மாதிரி மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.  அதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் அரிய வகை புகைப்படங்கள், ஓவியங்கள், பழங்காலத்து சிலைகள், பழங்கால நாணயங்கள், இசைக்கருவிகள், வன விலங்குகள், பறவைகளின் பதப்படுத்தப்பட்ட மாதிாிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  மேலும், ஓலை சுவடிகள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட கனிமங்கள், புதைப்படிவங்கள், கல்மரம், மரசிற்பங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை தூய்மைப்படுத்தி பாதுகாப்பது தொடர்பாக வரலாற்றுத்துறை மாணவ,மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமின் போது அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள் தூய்மை பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சி முகாம் வரும் ஞாயிற்றுகிழமை வரை நடக்கிறது.இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறுகையில், ‘‘அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிற்பங்கள் காலநிலை மாற்றத்தால் சேதமடையாமல் இருக்க அவற்றை பதப்படுத்தி பாதுகாக்கும் பயிற்சி வரலாற்றுத்துறை மாணவ,மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது’ என்றார். 

ரத்த தான முகாம்

ஊட்டி, பிப். 15: கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அரசு மருத்துவமனை, நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் கோழிப்பாலம் பகுதியில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இதில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மகேஸ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். இதுகுறித்து ரத்தவங்கி மருத்துவ அலுவலர் மயில்சாமி கூறுகையில்: ‘18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். மது அருந்தினால் 24 மணி நேரம் ரத்தம் வழங்க முடியாது,’ என்றார்.இதில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 22 பேர் ரத்த தானம் செய்தனர். பின் முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் கூடலூர் ரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.பிரிவு 17நிலம் தொடர்பான கூட்டம் புறக்கணிப்புகூடலூர், பிப்.15: கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் வசிக்கும் பிரிவு 17 நிலப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அனைத்து அரசியல் பொது நல அமைப்புகள் அடங்கிய விளக்ககூட்டம் கூடலூர் ஊரட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: ‘‘பிரிவு 17 நிலம் குறித்து அரசு எடுத்துவரும் நாவடிக்கைகள் குறித்தும் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.  அவ்வாறு  தவறான தகவல் அளிப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட அரசியல் கட்சியினர் பேசுகையில்: ‘‘பிரிவு 17 நிலங்களில் வசிப்பவர்களுக்கு நில வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலில் முரண்பாடு உள்ளதாக கூறி  அரசியல் கட்சியினர் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. மாவட்ட ஆட்சியரே தங்களை விளக்க கூட்டத்திற்கு அழைத்து விட்டு அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டதாகவும், பொது மக்களின் பிரச்னை குறித்த கேள்விகளுக்கு உரிய  விளக்கம் தர மறுப்பதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும் பிரிவு17 நிலங்களை வனமாக அறிவிக்கை மக்களை நில வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை உள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளதால் அதற்கும் முறையாக பதில் அளிக்காமல் உள்ளனர் என அனைத்து கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பு கள் சார்பில் மீண்டும் போராட்ட நடந்த போவதாக அரசியல் கட்சியினர் கூறினர்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இந்த நிலங்களில் வசிக்கும் ஆதிவாசி குடியிருப்புகளுக்கு சாலை மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின்னர் இந்த நிலப்பிரச்னை தீர்க்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நிலங்களில் வசிக்கும் யாரையும் நில வெளியேற்றம் செய்யும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே  அரசும் மாவட்ட நிர்வாகமும் செயலில் ஈடுபட்டு வருகிறது. எனவே பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது. இது குறித்து இப்பகுதி மக்கள் மத்தியில் அரசு சார்பில் விழிப்புனர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாசடைந்த குடிநீர் விநியோகம்

குன்னூர், பிப்.15: குன்னூர் அருகே மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குன்னூர் அருகே உள்ள வசந்தம் நகர் பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு விநியோகம் செய்ய கூடிய குடிநீர் மஞ்சள் நிறத்தில் மாசடைந்து வருவதால் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் பஸ்வசதி, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இது குறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்ததப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் ஜீப் மீது பைக் மோதி தொழிலாளி பலி

அவிநாசி,பிப்.15:  திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தாலுகாவை சேர்ந்தவர் நாகபாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (32). இவருக்கு ராஜலட்சுமி(28) என்கிற மனைவியும், சுபீன்(7), தருண்(4) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் அவிநாசி அடுத்து தெக்கலூர் வெள்ளாண்டிபாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் ஏற்றுமதி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பனியன் நிறுவனத்தில் இருந்து பைக்கில், கோவை - சேலம் பைபாஸ் ஆறுவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னாள் சென்ற வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாக சென்றபோது, ரோட்டின் ஓரமாக நின்றுகொண்டிருந்த போலீஸ் ஜீப்பின் பின்புறத்தில், எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திகேயன் உயிரிழந்தார்.

திமுக., சார்பில் ராசாவிற்கு வரவேற்பு

ஊட்டி, பிப். 15: ஊட்டி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிற்கு சேரிங்கிராஸ் பகுதியில் நகர திமுக., சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். திமுக., தேர்தல் பணிக்குக்குழு செயலாளர் ராமசந்திரன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் மாலை அணிவித்து ராசாவை வரவேற்றனர். தொடர்ந்து, ராசாவிடம் பல்வேறு குறைகளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில், ஜெயகோபி, ரவீந்திரன், மகேஷ், கார்டன் கிருஷ்ணன், புஷ்பராஜ், சுபையர், ஹென்றி, மஞ்சுகுமார், சம்பத், நிக்கோலஸ், டிசோசா, தியாகு, பாபுராஜ், சுரேஷ், உமேஷ், ஸ்டீபன், கமலகண்ணன், அருள், பெரியசாமி, ஸ்டேன்லி, ரஞ்சித், சங்கர், குழந்தைநாதன், மகளிர் அணியை சேர்ந்த லூவிசா, டெய்சி, வனிதா, கண்ணகி, விஜயா, ரெஜினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணாநகர் பகுதியில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் அவதி

பந்தலூர், பிப்.15 :பந்தலூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நடைபாதை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் நீண்ட நாட்களாக தவித்து வருகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தனிநபர் பயன்பாட்டிற்கு சாலை அமைக்க எதிர்ப்பு

பந்தலூர், பிப்.15: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் தனிநபர் பயன்பாட்டிற்காக சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அருகே உள்ள கொட்டாடு முதல் கொத்தகொல்லி வரை சுமார் 500 மீட்டர் தூரம் ஆளுங்கட்சி பிரமுகர் பயன்பாட்டிற்காக நெலாக்கோட்டை  ஊராட்சி கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்கு அப்பகுதி மக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலை வசதி இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில் தனிநபர் ஒருவருக்கு சிமென்ட் சாலை அமைத்து தர கூடாது என்றனர்.

சேரிங்கிராசில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஊட்டி, பிப். 15: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.    கோத்தகிரி, தும்மனட்டி, கப்பச்சி, கட்டபெட்டு, மைனலை, பேரார் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்ேவறு ேதவைகளுக்காக நாள் தோறும் ஊட்டி வந்து செல்கின்றனர். இவர்கள், மீண்டும் தங்களது கிராமங்களுக்கு செல்வதற்கு, மாலை நேரங்களில் சேரிங்கிராஸ் பகுதியில் பஸ்சிற்காக வெகு நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளது. தற்போது இப்பகுதியில் நிழற்குடை மற்றும் பஸ் நிறுத்தம் இல்லாத நிலையில் பயணிகள் சாலையோரங்களிலேயே வெகு நேரம் காத்து நிற்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.  மேலும், பயணிகள் நிற்கும் இடத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்திக் கொள்கின்றனர். மழை காலங்களில் ஒதுங்க இடமில்லாத நிலையில் ெபாதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நிழற்குடை அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ெபாதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் முற்றுகை

ஊட்டியில் பரபரப்புஊட்டி, பிப். 15: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மெயின் பஜார் பகுதியில் விதிமுறை மீறிய கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை  கட்டிட உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறிய கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளை கண்டறிந்து தற்போது சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் முதல் இதுவரை 21 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் வணிக ரீதியான கட்டிடங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகளும் அடங்கும். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள ஒரு விதிமுறை மீறிய கட்டிடத்திற்கு சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த கட்டிடம், குடியிருப்பிற்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டதால் சீல் வைக்கப்பட்டது. மேலும், அதே கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி இரண்டாவது மற்றும் மூன்றவாது மாடியும் கட்டியுள்ளனர். மூன்றாவது மாடியை இடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அப்போது, கட்டிட உரிமையாளர்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதற்கு நகராட்சி அதிகாரிகளும் சம்மதித்தனர். மேலும், இரண்டாவது கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற போது, அதில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள  அவகாசம் கேட்டுள்ளனர். நேற்றுடன் அதற்கான கால அவகாம் முடிந்த நிலையில், அந்த கட்டிடடத்திற்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆனால், அதிகாரிகளை கட்டிடத்தின் அருகில் நெருங்கவிடாமல் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து கட்டிட உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், இரு நாட்களுக்குள் கட்டிடத்தில் உள்ள பொருட்களை அகற்றிவிடுவதாக உரிமையாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாவட்டத்தில் காட்டு தீ தடுக்க கண்காணிப்பு மையம்

ஊட்டி, பிப். 15: காட்டு தீயை தடுக்க கொலாரி பெட்டா பகுதியில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் பனிக்காலத்தின் போது பெரும்பாலான, வனங்கள் காய்ந்துவிடும். இதனால் எளிதில் காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பளவிலான வனங்கள் நாசமாகிறது. பொதுவாக காட்டு தீ இயற்கையாக ஏற்படுவதில்லை. சில சமூக விரோதிகள் புகை பிடித்துவிட்டு வனப்பகுதியில் சிகிரெட் துண்டுகளை வீசி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே காட்டி தீ ஏற்படுகிறது . இது போன்ற சமயங்களில் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.   எனவே, கோடை காலம் முடியும் வரை நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், வனங்களை ஒட்டி வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள் வனங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதேபோல் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நீலகிரி வனக்ேகாட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் கூறியதாவது: நீலகிரியில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டு தீ ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காட்டு தீயை கட்டுப்படுத்த இம்முறை கொலாரிபெட்டா பகுதியில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார். அவரிடம் செல்போன் மற்றும் ஒயர்லெர்ஸ் கருவி இருக்கும். எங்கு காட்டு தீ ஏற்பட்டாலும் அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட சரக ஊழியர்களுக்கு தகவல் கொடுப்பார். அவர்கள் உடனடியாக அங்கு சென்று காட்டு தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்வார். மேலும், பொதுமக்கள் சாலையோரங்களில் தீ மூட்டுவது, சமையல் செய்வதை தவிர்க்க வேண்டும். வனங்களுக்குள் சென்று சிகரெட் பிடிப்பது, தீ மூட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.  கோடையில் போதுமான தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத நிலையில், விலங்குகள் வனங்களை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளது. எனவே, விலங்குகளை கண்டு அச்சப்பட வேண்டாம். அதற்கு தொல்லை கொடுக்காமல் உடனடியாக ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமிற்கு தகவல் கொடுங்கள்.  அவர்கள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி விலங்குகளை காட்டிற்குள் விரட்டும் பணிகளை மேற்கொள்வார்கள். நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது காட்டெருமைகள் அதிகரித்துள்ளன. எனவே, பொதுமக்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம். குறிப்பாக, சிறிய குழந்தைகளை தனியாக தேயிலை தோட்டங்களுக்கு நடுவே மற்றும் வனங்களை ஒட்டிய பகுதிகளில் நடமாடவோ அல்லது விளையாடவோ அனுமதிக்காதீர்கள். இவ்வாறு சுமேஷ்சோமன் கூறினார்.

அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையே போட்டி

ஊட்டி, பிப். 14: அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  தேசிய அறிவியல் தினம் ஆண்டு தோறும் பிப்.,28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ‘ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் அமைந்துள்ள ரேடியோ வானியல் மையத்தில் தேசிய அறிவியல் தினம் பிப்., 28ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.  இந்நிலையில், ஊட்டி வானியியல் ஆய்வு மையத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கிடையே கட்டுரை போட்டி, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் அறிவியல் தினத்தற்கு வழங்கப்படும் என வானியியல் ஆய்வு மைய தலைவர் மனோகரன் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஊட்டி, பிப். 14:  நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி., தட்சிணாமூர்த்தி கூறியுள்ளதாவது: ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாரேனும் பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றாலோ அல்லது ஊழல் புகார் இருந்தால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.இதன்படி தட்சணாமூர்த்தி (டிஎஸ்பி.,) 95666-16699, 94981-09718, கீதாலட்சுமி (இன்ஸ்பெக்டர்) 94981-76712 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தட்சிணாமூர்த்தி கூறினார்.

கஞ்சா விற்றவர் கைது

பாலக்காடு, பிப்.14: பாலக்காடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போதை தடுப்பு பரிவினர் நேற்று கைது செய்தனர். பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கையரம்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதை தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போதைத் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சம்சுதீன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த பெரியசாமி(32), என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தமிழகம் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நகராட்சி மார்க்கெட்டில் கழிவு நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

ஊட்டி, பிப். 14: ஊட்டி நகராட்சி மார்க்கெட்  உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்குவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் அங்கு, கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால்கள் போதுமானதாக இல்லை. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதும், சாதாரணமாக கால்வாய்களில் ஏதேனும் கழிவுகள் அடைத்தால், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதும் தொடர்கிறது.  இந்நிலையில், நகராட்சி இறைச்சி கடைகள் உள்ள பகுதியில் நேற்று காலை கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இைதயடுத்து கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.பின் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் கழிவு நீர்கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தனர்.மேலும், கழிவு நீர் தடையின்றி செல்ல கால்வாய்  பெரிதாக அமைக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

6 வட்டங்களில் நாளை சிறப்பு திட்ட முகாம்

ஊட்டி, பிப். 14: நீலகிாியில் உள்ள 6 வட்டங்களில் நாளை(15ம் தேதி) வருவாய்த்துறை சார்பில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.  நீலகிாி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் முதியோர் ஓய்வூதிய தொகை, விதவை உதவித்ெதாகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை மற்றும் வருவாய்த்துைற மூலம் வழங்கப்படும் சான்றுகள், ேரசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், அரசுத்துறை சார்ந்த குறைகள் கேட்கப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பல்வேறு சிறு தொழில் உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதன்படி நாளை (15ம் தேதி) மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் ஊட்டி வட்டத்திற்குட்பட்ட ஊட்டி ரூரல், புதுமந்து சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட கேத்தி-3, சோகத்தொரை சமுதாய கூடத்திலும், கோத்தகிாி வட்டத்தில் கோத்தகிரி-3, கேர்பெட்டா சமுதாய கூடத்திலும் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. குந்தா வட்டத்திற்குட்பட்ட முள்ளிகூர், இன்பசாகர் கிராம சமுதாய கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் பாடந்தொரை-2, புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியிலும், பந்தலூர் வட்டத்தில் நெல்லியாளம்-2, குன்னலாடி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.

அரசு பள்ளிகளில் பாடபுத்தகம் வழங்குவதில் தாமதம் மாணவர்கள் பாதிப்பு

ஊட்டி, பிப். 14:நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் இன்னும் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழக அரசு புதிய பாடத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த பின், மூன்று பருவங்களாக பாடத்திட்டங்களை பிரித்து மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், ஜனவரி மாதம் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை சில பள்ளிகளில் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வழக்கப்படவில்லை இதனால், பள்ளி மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், கடந்த மாதம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட  ஆசிரியர்களை, பள்ளிக்கல்வித்துறை  பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த பணி மாற்றம் காரணமாக பல பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்லாத நிலை நீடிக்கிறது. சில பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சென்றாலும், அவர்கள் பாட புத்தகங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

கூடலூர், பிப்.14:கூடலூர் நகராட்சியில் வரி செலுத்தாத நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  கூடலூர் நகராட்சியில் 2018-19 ஆண்டிற்கான வாடகை பாக்கி மற்றும் வரிவசூல் பாக்கி உள்ளிட்டவைகளை வசூலிக்க aநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி நேற்று கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத நான்கு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் வாடகை பாக்கி வைத்து இருந்த கடைகளில் ரூ.6 லட்சம் வாடகை பாக்கி வசூல் செய்யப்பட்டது.