Spiritual - Dinakaran

வேண்டுபவர்களுக்கு ஐஸ்வர்யம் அருளும் அழகாபுத்தூர் படிக்காசுநாதர்

தஞ்சை மாவட்டம் அழகாபுத்தூரில் அமைந்துள்ளது படிக்காசுநாதர் திருக்கோயில். மூலவர்   படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்), உற்சவர்      சோமாஸ்கந்தர். தாயார்  அழகம்மை. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 129வது தேவாரத்தலமாகும். பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். உடனே பிரம்மாவை அழைத்த முருகன், நீங்கள் யார்  எனக் கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்று கர்வத்துடன் கூறினார். முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் ...

வல்லமை தருவாள் வண்டி மலைச்சியம்மன்

அஸ்தினாபுரம் அடுத்த பகாசுரவனம் இருந்தது. இங்கு, பகாசுரன் மற்றும் பகாசுரவள்ளி என்னும் அசுர தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இந்த வனத்தையொட்டி இருந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்துவந்தனர்.அசுரனுக்கு பசி எடுத்தால் கிராமத்துக்குள் நுழைந்து கண்ணில் பட்டவரை கொன்று தின்று விடுவான். கிராம மக்கள் ஏதோ, பேய், பிசாசு, சாத்தான் வந்து இப்படி மனிதர்களை பலிவாங்கி தின்று விடுகிறதே, என்று அஞ்சி இருந்தனர். ஒரு நாள் அசுரன் ஒரு வாலிபனை அடித்து தின்று கொண்டிருந்ததை கிராம மக்கள் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள் ஏ, அசுரனே, நீ ஒருத்தனை கொன்று தின்க, ஊரையே ஆட்டி ...

தடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்

வடசெந்தூர், காட்டுப்பாக்கம், சென்னைசெந்தூர் எனப்படும் அலைகடல் ஆர்ப்பரிக்கும் நகரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் முருகன் திருவருள் நிலைபெறச் செய்ய பக்தர்கள் சிலர் எண்ணினர்.காஞ்சி முனிவரிடம் சென்று தம் எண்ணத்தைத் தெரிவித்தனர். “நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்  திருச்செந்தூர் செந்திலாண்டவனை தாராளமாக பிரதிஷ்டை செய்யலாம்” என்று அவர் அருளாசி வழங்கினார். கூடவே, சுமார் 6 அடி உயரமுள்ள அழகான முருகன் சிலையை வைக்க ஏற்பாடும் செய்து கொடுத்து, இத்தலத்தின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்றும் ஆலோசனையும் தெரிவித்தார். அவருடைய ...

பால் மாங்காய் நிவேதனம் ஏற்கும் திருப்பாவை நாயகி

* வைகாசி பௌர்ணமி - 18-5-2019ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பௌர்ணமி நாளன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில், ஆண்டாள் நாச்சியாருக்குப் பால் மாங்காய்  நிவேதனம் செய்யும் சிறப்பான வழக்கம் ஒன்று உள்ளது.இந்த வழக்கம் ஏற்படக் காரணம் யாது?ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் கீழே, சாட்சாத் பூமி தேவி ஒரு பெண்  குழந்தையாகத் தோன்றினாள். அக்குழந்தையே ஒரு பூமாலை போல் இருந்தபடியால், அவளுக்குக் கோதை என்று பெயர் சூட்டினார் பெரியாழ்வார்.  கோதை என்றால் மாலை என்று பொருள். சிறுவயது ...

ஆராட்டு காணும் பகவதி அம்மை

*ஆராட்டு விழா - 18-5-2019*கன்னியாகுமரி சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காக கன்னியான பார்வதிதேவி இந்த முனையிலே நின்று  தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாகவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தனது நாயகனுக்காகக் காத்திருந்த இடம் என்ற கருத்துடன் இந்தப் பெயர் வந்திருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர். மகிமை மிக்க தீர்த்தக்கட்டம் என கன்னியாகுமரியை வால்மீகி ராமாயணமும் வியாச பாரதமும் சிறப்பிக்கின்றன. ராமபிரான் இலங்கை செல்வதற்கு முன் கன்னியாகுமரியை வணங்கியதாக சேது புராணத்தில் ...

வைகாசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் காணும் ஜம்புகேஸ்வரர்

* திருவானைக்காவல் - திருச்சிதிருவானைக்காவல் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இச் சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருட்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள அகிலாண்டேஸ்வரி கம்பீரமான, ...

பலன் தரும் ஸ்லோகம்((கொடிய துன்பங்கள் நீங்க, தேவியின் திருவருள் கிட்ட...))

த்யானம் காலாப்ரபாம் கடாக்ஷைரரிகுல பயதாம்மௌளிபத்தேந்து ரேகாம்சங்கம் சக்ரம் க்ருபாணம் த்ரிசிகமபி கரைருத்வ ஹந்தீம் த்ரிநேத்ராம்ஸிம்ஹஸ்கந்தாதி ரூடாம் திரிபுவன மகிலம்தேஜஸா பூரயந்தீம்-த்யாயேத் துர்க்காம் ஜயாக்யாம் த்ரிதசபரிவ்ருதாம்ஸேவிதாம் ஸித்திகாமைஹி- ஜெயதுர்க்கா ஸ்லோகம்பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரும் கூடி ஜெயதுர்க்கா தேவியைத் துதித்து பேறு பெற்றனர். இத்தேவியின் மந்திரத்திற்கு பிரம்மதேவன் மஹரிஷியாகிறார். அன்னை சிம்மவாஹினியாக காட்சி தருகிறாள். சங்கு, சக்ரம், வாள், திரிசூலம் ஆகிய ஆயுதங்களோடு நான்கு கரங்களாலும் பக்தர்களைக் ...

இந்த வாரம் என்ன விசேஷம்?

மே 18, சனி - பெளர்ணமி. வைகாசி விசாகம். புத்த பூர்ணிமா.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பால்மாங்காய் நைவேத்யம். வேளூர் வசந்தோற்சவம் பூர்த்தி, சீர்காழியில் ஸ்ரீசம்பந்தருக்கு ரட்சாபந்தனம். காஞ்சி ஸ்ரீகந்தகோட்டம் ஸ்ரீஷண்முகர் ரதம், தீர்த்தவாரி. ஸ்ரீ ரங்கம் ஏகவசந்தம் சாற்றுமுறை. ராமேஸ்வரம் வசந்த உற்சவ பூர்த்தி, பழநி தேர், கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் முகுடேஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.மே 19, ஞாயிறு - காஞ்சி ஸ்ரீமகாபெரியவாள் ஜெயந்தி. காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி வசந்த உற்சவ சாற்றுமுறை, சேலையூர் ஸ்ரீமத் ஸ்ரீசாந்தானந்த ...

ஆயுள் தரும் எமனேஸ்வரம் சிவன்

ராமநாதபுரத்தில்  இருந்து 37 கிமீ தொலைவில் எமனேஸ்வரம் உள்ளது. இங்கு பழமையான  எமனேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. மூலவராக எமனேஸ்வரமுடையார் என்று  அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சொர்ணகுஜாம்பிகை தாயார் தனி  சன்னதியில் அருள் பாலிக்கிறார். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத  சுப்பிரமணியர், மல்லிகார்ஜூனேஸ்வரர் மற்றும் பைரவர் சிலைகள் உள்ளன. தல  மரமாக வில்வ மரம் உள்ளது. கோயில் அருகே எமதீர்த்தம் உள்ளது.தல வரலாறுபண்டை  காலத்தில், சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிரிழக்கும்படி வரம்  பெற்றிருந்தார். இறுதி காலத்தில் அவரது உயிரை ...

சிவனாகக் காட்சியளிக்கும் சௌரிராஜர்

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் - மும்மூர்த்தி தரிசனம் - 17:05:20191. மகாபாரதத்தில் ஒரு சம்பவம். அர்ஜுனன் தினமும் சிவபூஜை செய்து வந்தான். ஆனால், அவனது மகனான அபிமன்யு இறந்தநாளில் அவனால்  சிவபூஜை செய்ய இயலவில்லை. அதை எண்ணி அர்ஜுனன் வருந்திக் கொண்டிருந்த போது, கண்ணன் அவன் முன்னே தோன்றினான்.  சிவபெருமானுக்குச் சமர்ப்பிப்பதற்காக அவன் வைத்திருந்த பூக்களைத் தனது திருவடிகளில் சமர்ப்பிக்கச் சொன்னான். அர்ஜுனனும் அவ்வாறே  செய்தான். கண்ணன் திருவடிகளில் அர்ஜுனன் சமர்ப்பித்த அதே பூக்களை அணிந்த படி சிவபெருமான் அவனுக்குக் ...

வைகாசி விசாகத்தில் அஸ்திரம் பெற்ற அர்ஜுனன்

* வைகாசி விசாகம் : 18-05-2019* திருவேட்களம்அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன்  பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க  துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக்கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த  பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் ...

சிங்கப் பிரானின் மகிமை உரைத்த சிவபெருமான்

ஹிரணியனை சம்ஹரித்து விட்டு கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான் நரசிம்மன். உலகமே மாதவனுக்குள் இருக்க அவனே இந்த கோர  தாண்டவம் ஆடினால் வையம் தாங்குமா?. அனைத்து தேவர்களும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். தேவர்கள் கூட்டத்தின் நடுவில் இருந்த  மஹாதேவன்  மட்டும் பயம் கொண்டதாக தெரியவில்லை. மாறாக தனது இரு கைகளையும் குவித்துக் கொண்டிருந்தார். அவரது மூன்று கண்களிலும்  பக்தியால் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. கணீர் குரலில் நரசிம்மனை போற்றிப் மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை பாட ஆரம்பித்தார், முக்கண்  முதல்வன்.கோபத்தில் ஊழிக் கூத்தாடிய அந்த ...

வைகாசி விசாகத்தில் உதித்த சோமாஸ்கந்தர்

ஞான மயமாக விளங்கும் முருகப் பெருமான் வைகாசி விசாகத் திருநாளில் அவதாரம் செய்தார். தேவர்கள் வேண்டுகோளின்படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றி, சரவணப் பொய்கையில் விடப்பட்ட ஆறு தீப் பொறிகளிலிருந்து ஆறு குழந்தைகளாக பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்ந்தனர். உமையுடன் சென்ற சிவபெருமான் அவளுக்கு ஆறு குழந்தைகளையும் காட்டினார். அவள் அந்தக் குழந்தைகளையும் எடுத்து ஒருசேர அணைத்தாள். உடனே, முருகப் பெருமான் ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட ஒரே வடிவு கொண்டார்.வைகாசி விசாகத்தில் உருவானதால் அவருக்கு விசாகன் ...

குங்கும சுந்தரியை கரம் பற்றும் காசி விஸ்வநாதர்

* உமையாள்புரம் - கும்பகோணம், தஞ்சை* வைகாசி விசாக வைபவம் - 18.5.2019காசி விஸ்வநாதர் குங்குமசுந்தரியுடன் கோலோச்சும் திருத்தலம் உமையாள்புரம். தல மரமாக வில்வமும், தல தீர்த்தமாக காவிரியும்   விளங்குகின்றன. இத்தலத்தில் வைகாசியில் திருக்கல்யாண விழா நடக்கிறது. இவ்வேளையில் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் இங்கு   எழுந்தருளி, அம்பிகையை சிவனுக்கு மணம் செய்து வைப்பார்.  இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர்   வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகு சடைமுடிநாதர் கோயில்கள் மற்றும் திவ்ய தேசங்களான ...

வெற்றி தருவான் விசாக நாயகன்

* வைகாசி விசாகம்: 18-5-2019சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் வெளியான நெருப்பில் இருந்து அவதரித்தவர் முருகப்பெருமான். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு  வைகாசி மாதத்தில் விசாக விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும் நாளில், நாம் முருகப்பெருமானை  முறையாக வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும். திருப்பரங்குன்றத்தை முதல் படைவீடாகவும், திருச்செந்தூரை 2ம் படைவீடாகவும், பழநியை  3ம் படைவீடாகவும், திருவேரகம் எனப்படும் சுவாமிமலையை 4ம் படைவீடாகவும், திருத்தணியை 5ம் படைவீடாகவும், பழமுதிர்சோலையை 6ம்  படைவீடாகவும் ...

பரவசம் தரும் பஞ்ச நரசிம்மர்கள்

*நலம் தரும் நரசிம்மர் 10முருகனுக்குத் தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகருக்கு மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக் கோயில்கள் இருப்பதுபோல நரசிம்மருக்கும் ஆந்திர மாநிலத்தில் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் தலங்கள் அமைந்துள்ளன. புராதனம் மிக்க கிருஷ்ணா நதிக்கரையில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அந்தத் தலங்கள்: மங்களகிரி, வேதாத்ரி, மட்டப்பல்லி, வாடப்பல்லி மற்றும் கேதவரம்.முதலில் மங்களகிரியை தரிசிப்போம்.  நரசிம்மர் கொலுவிருக்கும் இந்த மலையை பத்ரகிரி, பீமாத்ரி என்றெல்லாமும் அழைக்கிறார்கள். மலையடி வாரத்திலும் மலை ...

சிந்தையில் குளிரும் சிங்கபெருமாள்

கண்சிமிட்டும் வானம் கண்டுநாணும்  நிலம் நலம் பெறவிண்திரண்ட செல்வம் கூட்டிமண்ணுயிர்கள் வளம் பெறமாயை புகுந்த மனமெல்லாம்மாற்றம் பெற்று ஒளிபெறமனித இனம் அறநெறியில்மாண்பு கொண்டு நடந்திடமஞ்சள் நிற பொன்னுருக்கிசமுதாய கோயில் புனைந்திடசாதிமத மனப்பிணி நீங்கிசமத்துவம் உறுதிபட நிலைத்திடகூறுபோட்டு மக்களை பிரிக்கும்குள்ளநரி கூட்டம் நடுங்கிடசோறுபோடும் நிலத்தாயின்சோர்வு, தாகம் தீர்ந்திடசுயநலப்  பதர் விலக்கிசொர்க்கம் மண்ணில் வசப்படசிந்தையில் உருவேற்றி  தமிழ்சொல் மெருகேற்றி அழைக்கிறோம்தூண்பிளந்து வந்திடு ...

நலமெலாம் அருளும் நரசிங்கபுரத்தான்

*நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 9* நரசிங்கபுரம், திருவள்ளூர்சென்னைக்கு அருகே உள்ள பழமையான நரசிம்ம தலங்களுள் நரசிங்கபுரம்  திருத்தலமும் ஒன்று. ‘நாளை என்பதில்லை  நரசிம்மனிடத்தில்’ என்பது  இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன்  கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான். இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே  நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால்,  நிறைவேற்ற ...

தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள்

* புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அவனைத் திருப்தி செய்ய விழைந்த திருமால், தானே இரணியனைப் போல அவதாரம் செய்து, பிரகலாதனுடன் இணைந்து நாம சங்கீர்த்தனம், விஷ்ணு பூஜை உள்ளிட்டவற்றைச் செய்ததாகவும் கூறியுள்ளார். அதே சமயம், உண்மையான இரணியன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வந்ததாகவும், அவனது கொடுஞ்செயல்கள் அதிகரித்தவாறே, தூணைப் பிளந்து நரசிம்மர் தோன்றிக் கொடியவனான இரணியனை வதம் செய்ததாகவும் ...

அழகிய சிங்கனின் இனிய இருபத்தைந்து தலங்கள்

ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி  17-05-20191. ஸ்ரீநவநரசிம்மர், தாழம்பூர் - சென்னை.மூலவர் நரசிம்மர் நடுவில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகவும், அவரைச்சுற்றி பிராகாரத்தில் எட்டு நரசிம்மர்கள் உள்ளனர். மூலவர் உள்பட ஒன்பது நரசிம்மர்கள் இவ்வாலயத்தில் அருட்பாலிப்பதால் ஸ்ரீநவநரசிம்மர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள இக்கோயில். அஹோபிலத்தில் நவ நரசிம்மரைச் சேவிக்க முடியாதவர்களுக்கு இத்தலம் ஓர் வரப்பிரசாதம். ஸ்ரீநவநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள ...