Technology - Dinakaran

சிபிஐ-யை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம்

டெல்லி : டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிபிஐ-யை  கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெப்ரானிக்ஸ் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறக்கிறது.

தகவல் தொழில் நுட்பத் துறையி்ல் தனது தயாரிப்புகளான தொழில் நுட்ப்பச் சாதனங்கள், ஒலி அமைப்பு, மொபைல் / வாழ்க்கை துணை உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் என தயாரித்து முத்திரை பதித்த இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை சென்னையில் உள்ள ' ஃபோரம்' மாலில் திறக்கிறது.'ஆல்வேஸ் அஹெட்' - என்ற கொள்கையை இந்த நிறுவனத்தின் தொடக்கத்தில் இருந்தே முன்னோடியாக கொண்டதின் காரணமாகவே, நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனையகத்தை குடியரசு தினத்தில் திறப்பதற்கு காரணமாக இருந்தது. சில்லறை விற்பனை அணுகுமுறை என்பது பயனர்களுக்கு தான் விரும்பும் பொருட்களை தொட்டு பார்த்து பொருட்களின் தன்மையை அறிந்துகொண்டு கொள்முதல் செய்வதற்கும் ஒட்டுமொத்த பிராண்டின் திருப்தியை அதிகரிப்பதற்கும் ஒரு வாய்ப்பை தருகிறது.இந்த நிறுவனம் மக்களின் ஊடே புகுந்து ஒரு பிராண்ட் தர அடையாள மாற்றத்தினை விளைவித்தது மட்டுமின்றி மெதுவாக நவீன உற்பத்திகள் மூலம், முக்கிய பகுதிகளில் தனது கால் தடத்தினைபதித்தும்  வருகிறது. 80 விருதுகளை தன்வசம் கொண்டுள்ளது மேலும் ஒவ்வொரு பிரிவிலும் பிரமாண்டமான சாதனை விருதுகளைப் பெற்று மேலும்  பிராண்ட் தூதராகவும், செயல்திறன் மற்றும் ஸ்டைல் துறையின் அங்கமாகவும் உள்ள  ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி திரைப்பட நடிகரையும் பெற்றுள்ளது.தமது புதிய சில்லறை விற்பனையக தொடக்க விழாவில் பேசிய ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் , ராஜேஷ் தோஷி கூறுகையில் - ' சென்னையே அனைத்தின் தொடக்கமாகும், இந்த நிறுவனம் தொடக்கம் முதல் ஏறத்தாழ இருபது வருட அனுபவத்திற்கு பிறகு, எங்களின் சொந்த ஊரான சென்னையில் உள்ள 'ஃபோரம்  மாலில்' எங்களுடைய முதல் சில்லறை விற்பனையகத்தை துவக்கி வைப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன், அதிக அளவிலான சாதனங்கள் மற்றும் வகைகளைக்கொண்ட நிறுவனம், அதிக மக்களை அடைந்த நிறுவனம், மனதை கவரும் டிசைன்கள் மற்றும் செயல்திறன் போன்ற அதிக அம்சங்களை பெற்றுள்ள போதிலும்,  மலிவான விலையை கொண்டது. எங்களுடைய அணைத்து  வாடிக்கையாளர்களுக்கும், எங்களுடைய அனைத்து ரக பயனாளிகளுக்கு அறிமுகம் இல்லாத ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைல் உபகரணங்கள் தொட்டு பார்த்து பயனடையும் வாய்ப்பினை வழங்க விரும்புகிறோம்.  இந்த முயற்சி என்பது பிராண்டின் நம்பகத்தன்மையை மட்டும் வலுப்படுத்துவது இல்லாமல் மறக்கமுடியா ஒரு அனுபவத்தை தருகிறது.  மேலும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எங்களது நீண்ட கால எங்கள் பிராண்டின் தூண்களாக உள்ள எங்கள் வியாபார கூட்டாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இதுபோன்ற அதிக சில்லறை விற்பனையகங்களை 'ஜெப்ரோனிக்ஸ்  டிஜிட்டல் ஹப்' என்ற பெயரில் பிரான்சைஸ் திட்டத்தில்  அதிக கடைகளை திறந்து  எங்கள் பிராண்டின் விழிப்புணர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு  திரு. தோஷி  கூறினார்.

ஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்

ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், டாடா ஹாரியர் வருகை, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த  நெருக்கடியை போக்கிக்கொள்ளும் விதமாக ஜீப் காம்பஸ் காரின் புதிய வேரியண்ட்டை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் லான்ஜிடியூட் ஆப்ஷனல் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்  இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.18.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடுத்தர விலை கொண்ட வேரியண்ட்டில் 7 அங்குல  தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புரொஜெக்டர் ஹாலஜன் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 17 அங்குல அலாய் வீல் ஆகிய முக்கிய அம்சங்கள்  உள்ளன. முன்னதாக, இந்த லான்ஜிடியூட் ஆப்ஷன் வேரியண்ட்டானது டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்த மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லிமிடேட், லிமிட்டேட்  ஆப்ஷனல் மற்றும் லிமிடேட் ப்ளஸ் உள்ளிட்ட உயர் வகை வேரியண்ட்டுகளில் மட்டுமே பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடுத்தர வகை லான்ஜிடியூட் ஆப்ஷனல் வேரியண்ட்டிலும்  இப்போது வந்திருக்கிறது. விலை உயர்ந்த பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களைவிட ரூ.1 லட்சம் வரை விலை குறைவு என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும். தற்போது ஜீப் காம்பஸ்  எஸ்யூவி ரக கார், ரூ.15.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் ரூ.22.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விரைவில் வர இருக்கும் டாடா ஹாரியர் நேரடி போட்டியாக இருக்கும்.  அத்துடன் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கும் இது போட்டியாக இருக்கும்.

வந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் - யமஹா YZF R3

இளைஞர்களை கவரும் ரேஸ் பைக் தயாரிப்பு நிரூபணமான யமஹா, தனது அடுத்த தயாரிப்பான யமஹா YZF R3 பைக்கை வரும் நவம்பரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் யமஹா நிறுவனம் எப்இசட் ரக  பைக்குகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது யமஹா YZF R3 பைக் நவம்பரில் விற்பனைக்கு வரும் என யமஹா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், யமஹா வாடிகையாளர்கள் மகிழ்ச்சியில்  உள்ளனர். இந்த பைக், யமஹாவின் மற்ற பைக்குகளைவிட டிசைனில் மாறுபட்டுள்ளது. இதன் கூர்மையான முன்பக்க டிசைன், சாய்வான எல்இடி முன்பக்க விளக்கு போன்றவை இந்த பைக்கின் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த  பைக்கில், இந்திய சாலைகளை கருத்தில் கொண்டு சாதாரண டெலெஸ்கோபிக் போர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில், மேம்படுத்தப்பட்ட பல இயக்கங்களை கொண்ட தகவல் டிஸ்ப்ளேயில், கியர் பொஸிசன், எரிபொருள் நிலை, நேரம், வெப்பநிலை ஆகியவை தெளிவாக தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பைக்  ஓட்டுபவரின் வசதிக்கு ஏற்ப, பெட்ரோல் டேங்க் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 321CC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 41.4 BHP பவரையும், 29.6 NM டார்க்  திறனையும் தருகிறது. மேலும், 6 கியர்களுடன், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகிறது. மேலும், இதில் டூயல் சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், பைக் ஓட்டும்போது புதிய உணர்வை தரும் என்கிறது யமஹா  நிறுவனம். இதற்கு முன் கடந்த 2015ல் இருந்து 2018ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட யமஹா YZF R3 பைக்குகளில் ரேடியேட்டர் ஹோஸ் மற்றும் ஸ்பிரிங் டார்சன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டதால் யமஹா நிறுவனம் தானாக  முன்வந்து அதனை சரிசெய்தது. அந்த தவறு, இம்முறை நடந்துவிடக்கூடாது என கச்சிதமாக புதிய யமஹா YZF R3 பைக்கை வடிவமைத்துள்ளனர். இந்த பைக், தற்போது விற்பனையாகும் YZF R3 மாடலின் விலையை விட  ரூபாய் 10,000 முதல் 15,000 வரை கூடுதலாக இருக்கும் என யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆர்.எக்ஸ் 100 முதல் FZ பைக் வரை இளைஞர்களிடையே வெற்றிநடை போட்டுவரும் யமஹா நிறுவனம் யமஹா YZF-R3  பைக் விற்பனையிலும் தனது தரத்தை நிருபித்துள்ளது.

காதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’ வரும் பிப்ரவரி 14ம் தேதி விற்பனைக்கு வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் குவான்டோ, டியூவி 300, நுவோஸ்போர்ட் போன்ற எக்ஸ்யூவி ரக கார்களின்  வரிசையில் தனது 4வது தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காருக்கு முதலில் எஸ்201 என பெயரிடப்பட்டது பின்னர், மஹிந்திரா நிறுவனம், எக்ஸ்யூவி 300 என  பெயர் மாற்றி அறிமுகம் செய்தது. இது, சாங்யாங் டிவோலி காரின் டிசனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த காரில் அசத்தலான இன்டீரியர் அமைப்புடன், மிக நேர்த்தியான டிசைனிங் மற்றும் நவீன  தலைமுறையினர் விரும்பும் பல்வேறு வசதி உள்ளது. குறிப்பாக, 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில், இடம்பெற உள்ள தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு  ஆட்டோ உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதன் 4 டயர்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. 7 பாதுகாப்பு ஏர் பேக் உள்ளது. நீண்ட வீல் பேஸ் மற்றும் புதிய சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. போர்டு ஈக்கோ  ஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாட்டா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த மாடல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்  1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இரு இன்ஜின்களிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான டாடா ஹாரியர் அறிமுகம்

கடந்த ஆண்டு நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், டாடா எச்5எக்ஸ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்யூவி ரக கான்செப்ட் கார் இப்போது டாடா ஹாரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக  வந்துள்ளது. இப்புதிய கார், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி-8 பிளாட்பார்மின் அடிப்படையிலான ஒமேகா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.   இது, 4,598 மி.மீ நீளமும், 1,894 மி.மீ அகலமும், 1,706 மி.மீ உயரமும்  கொண்டதாக உள்ளது. 2,741 மி.மீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. 5 சீட்டர் மாடலாக வந்திருக்கும் இப்புதிய கார், சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கிறது. இந்த காரில் 425 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.  50 லிட்டர் கொள்ளளவு உடைய பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த காரில், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 2  வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே வந்துள்ளது. அதேநேரத்தில், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. சிட்டி, ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ ஆகிய மூன்று டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டுள்ளன. 8.8 அங்குல  தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜேபில் நிறுவனத்தின் 9 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்ளது. இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும்  ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளையும், ஸ்மார்ட்போன் மிரர் லிங்க் இணைப்பு வசதியையும் வழங்கும். இந்த காரில் மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கைய அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி,  7.0 அங்குல திரையுடன்கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த காரில், 6 ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு மற்றும் டிசென்ட் அசிஸ்ட்,  ரோல்ஓவர் மிட்டிகேஷன், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் எலெக்ட்ரானிக் டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. XE, XM, XT மற்றும்  XZ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் வெளிவருகிறது. ரூ.12.69 லட்சம் முதல் ரூ.16.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த ஆண்டிலேயே இதன் 7 சீட்டர் மாடலும் விற்பனைக்கு வர இருப்பது  குறிப்பிடத்தக்கது.

பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் கால்கள் கொண்ட 'கார்': ஹூண்டாய் நிறுவனம் தயாரிப்பு

லாஸ் வேகாஸ்: பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் கால்கள் கொண்ட கார் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த கண்காட்சியில் நூதன பொருட்கள் மற்றும் நவீன ரக சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நான்கு நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், எலிவேட் என்ற நான்கு கால்கள் கொண்ட காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் டயர்களுக்கு பதிலாக 4 கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை நிலச்சரிவு, நிலநடுக்கத்தால் ஏற்படும் பேரழிவு, ஆழிப்பேரலையால் உண்டாகும் தொடர் வினைகள் போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான இடிபாடுகளுக்கு நடுவிலும் லாவகமாக செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும். மேலும், அவசர காலங்களில் மீட்பு பணியில் மட்டுமல்லாது ஆம்புலன்ஸ் போன்றும் இந்த வாகனத்தை செயல்படுத்தலாம் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகனம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய இரு தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் சாலைகளில் செல்லும்போது, வாகனப் போக்குவரத்தில் பெரிய புரட்சியே ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை விவகாரம்: சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல்

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. தடசேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் எம்எல்ஏ சசியின் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதே போல் பாஜக எம்பி முரளிதரன் வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக குறப்படுகிறது. சபரிமலையில் 2 பெண்கள் சென்று தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாஜக-வினர் தொடர்ந்து போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 1319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அசத்தல் எலெக்ட்ரிக் கார்

இந்தியாவை எடுத்துக்கொண்டால் தற்போதைக்கு மஹிந்திரா மற்றும் டாடா போன்ற ஒருசில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன. ஆனால், இந்த வாகனங்களின் ‘’ரேஞ்ச்’’ மிகவும்  குறைவாக இருப்பது ஒரு குறையாக கருதப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பதே ‘’ரேஞ்ச்’’ என்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக்  வாகனங்களின் பெர்பார்மென்ஸ் சர்வதேச தரத்திற்கு இல்லை எனவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் வெகுவாக முன்னேறி விட்டன.  டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் அதிக ரேஞ்ச் கொண்டவை. இதில், பாதுகாப்பு விஷயங்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து குறையை களையும் விதமாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் எஸ்201 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் எஸ்யூவி ரக  கார் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்கிறது. அதன்பின் எஸ்201-ஐ அடிப்படையாக கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்,  ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இ2ஓ ஸ்போர்ட் (e2o Sport) என்ற எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக  காட்சிக்கு வைத்திருந்தது. இதில், 380வி (380V) பேட்டரி சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தது. இதன் ரேஞ்ச் 200 கி.மீ. மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள எலெக்ட்ரிக் காரிலும் இதே பேட்டரி சிஸ்டம்தான்  பொருத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ தூரம் பயணிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்படும். எனவே, மிகவும் அதிக ரேஞ்ச் கொண்ட மஹிந்திரா  நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை இது பெறும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் 2020ம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது. தற்போது எலெக்ட்ரிக் எஸ்-201 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இந்த காரில், சாங்யாங் டிவோலி காரை அடிப்படையாக  கொண்ட அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். சாங்யாங் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றுதான் டிவோலி. கொரியாவை சேர்ந்த சாங்யாங் கார் நிறுவனத்தை இந்தியாவின் மஹிந்திரா குழுமம்  நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய எலெக்ட்ரிக் எஸ்-201 எஸ்யூவி ரக கார், புனேவுக்கு அருகே சகான் என்ற இடத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதனிடையே  சகான் தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் கேயூவி 100 காரின் அசெம்ப்ளிங், வெகு விரைவில் துவங்கப்பட உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மையான கார்களில் ஒன்று கேயூவி 100. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2019ம் ஆண்டின் மத்தியில்  மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் தரமான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியிருப்பதற்கான அறிகுறிதான் இது. இப்புதிய எஸ்-201 எலெக்ட்ரிக் காரின் விலை 20 லட்சம்  ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு பேம் இந்தியா திட்டத்தின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. மானியம் கிடைப்பதால், எலெக்ட்ரிக்  வாகனங்களை வாங்கவேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.

எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது, தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை  கட்டுக்குள் வைத்திருக்க சில டிப்ஸ்...* கார் மெதுவாக செல்லும்போது ஜன்னல் திறந்துவைத்திருந்தால் பரவாயில்லை. ஆனால், 20 கி.மீ வேகத்தை தாண்டிச்செல்லும்போது ஜன்னல்களை மூடிவிடுங்கள். அதேபோன்று, சன்ரூப் இருந்தாலும் மூடி வைப்பது நல்லது.  காரின் ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்பட்டு அதிக எரிபொருள் செலவாகும். * காரில் கேரியர் மற்றும் ரூப் ஸ்கை பாக்ஸ் ஆகியவை இருந்தால் தேவைப்படாத நேரத்தில் கழற்றி வைத்துவிடுவது அவசியம். ஸ்கை பாக்ஸில் பொருட்கள் இல்லாமல் காலியாக இருந்தால்கூட அது ஏரோடைனமிக்ஸில்  பாதிப்பு ஏற்படுத்தி மைலேஜ் குறைய காரணமாகிவிடும். தற்போது வரும் கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ்களை எளிதாக கழற்றி மாட்ட முடியும். மேலும், கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ் எடையும் மைலேஜ் குறைய காரணமாக  இருக்கும். * காரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில், எக்ஸ்ட்ரா பம்பர் உள்ளிட்ட தேவையில்லாமல் ஏராளமான ஆக்சஸெரீகளை பொருத்துவதால் அதிக எடையை சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இதுவும் எரிபொருள் சிக்கன அளவில்  பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று, சிலர், கார் டிக்கியில் விளையாட்டு பொருட்கள், உடைமைகளை தேவையில்லாமல் போட்டு வைத்திருப்பதும் வழக்கம். இதுவும் மைலேஜ் குறைய வாய்ப்பை ஏற்படுத்தும். * காரை எடுத்தவுடன் அதிக ஆக்சிலரேட்டரை கொடுத்து உறுமச்செய்து எடுப்பது சிலரின் வாடிக்கை. இதுவும் தேவையில்லாத வேலை. காரை சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எடுத்தால் போதுமானது. ஆக்சிலரேட்டரை  அதிகப்படியாக கொடுத்து எரிபொருளை வீணடிக்காதீர்கள். எரிபொருள் விரயத்தால் பணம் செலவு மற்றும் புகையால் காற்று மாசுபடுதலும் அதிகரிக்கிறது. * பொதுவாக கார் குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும், சீரான வேகத்தில் இயக்குவது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும். இதற்கு சரியான கியரில் இயக்குவது அவசியம். குறிப்பாக, டாப் கியரில் வைத்து சீரான வேகத்தில்  ஓட்டும்போது நீங்கள் நினைத்ததைவிட அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். நெடுஞ்சாலையில் செல்லும்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தை கடைபிடிக்கும்போது மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற  முடியும். * அடிக்கடி பிரேக் பிடிப்பதும் எரிபொருள் விரயத்தை ஏற்படுத்தும். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் செல்வதும், நிதானமான வேகத்தை கடைபிடிப்பதும் நல்லது. முன்னால் செல்லும் வாகனத்தை  கணக்கில்கொண்டு ஓட்டும்போது, தேவையில்லாமல் பிரேக் பிடிப்பது தவிர்க்கப்படும். * மேலே சொன்ன காரணங்கள் மட்டுமின்றி, காரின் பராமரிப்பும் மிக முக்கியம். தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையின்படி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான பராமரிப்பில் வைத்திருப்பதும் அவசியம். 5,000 கிமீ  தூரத்திற்கு ஒருமுறை காருக்கு பராமரிப்புப் பணிகள் செய்வது அவசியமாகும். கார் இன்ஜின் பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் எப்போதும் இருக்கவேண்டும். மேலும், டயரில் காற்றழுத்தம் அளவையும் அவ்வப்போது  பரிசோதிப்பது அவசியம்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெற்றி ரகசியம்

பிரிமீயம் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் சந்தைப்போட்டியை அதிகப்படுத்த மிக சிறப்பான மாடலாக மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரை களமிறக்கியுள்ளது மஹிந்திரா. இப்புதிய கார்,  டொயோட்டா பார்ச்சூனர், போர்டு எண்டெவர் மாடல்களை போன்று பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால், முரட்டுத்தோற்றமாக இல்லாமல், இது சொகுசு எஸ்யூவி ரக கார்களை போன்று சாப்ட் ரோடர்  எஸ்யூவி ரக மாடலாக மென்மையான தோற்றத்துடன் பிரிமீயமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வாடிக்கையாளர்களை நிச்சயம் சமரசம் செய்யும். இந்த இன்ஜின் 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த  கார், யூரோ-6 மாசு தர உமிழ்வுக்கு இணையானது. இந்த காரில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல்  டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. டொயோட்டா பார்ச்சூனர், போர்டு எண்டெவர் என்ற இரு ஜாம்பவான்களை கடந்து, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி ரக காரை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்வதற்கு விலை நிர்ணயம்தான்  முக்கிய கருவியாக இருக்கப்போகிறது. டொயோட்டா பார்ச்சூனர் பேஸ் மாடல் ₹27.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், போர்டு எண்டெவர் எஸ்யூவி ரக பேஸ் மாடல் ₹26.30 லட்சம்  எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி ரக காரின் பேஸ் மாடல் ₹20 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்தால், நிச்சயம் ஜாம்பவான்களை ஒரு  கை பார்க்க முடியும் என்கிறார்கள் மஹிந்திரா வாடிக்கையாளர்கள். இந்த கார், நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்கிறது மஹிந்திரா நிறுவனம்.

அதிக உறுதி, இலகு எடை கொண்ட புதிய மாருதி எர்டிகா

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய மாருதி எர்டிகா, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய மாருதி எர்டிகா, மாருதி சுஸுகி நிறுவனத்தின் சாதாரண அரேனா  ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் LXi, VXi, ZXi, ZXi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல்  ஆட்டோமேட்டிக் மாடல் VXi AT மற்றும் ZXi ATஆகிய 2 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் LDi, VDi, ZDi, ZDi+ ஆகிய நான்கு  வேரியண்ட்டுகளில் கிடைக்கும். புதிய மாருதி ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் உருவாக்கப்பட்ட சுஸுகி நிறுவனத்தின் ஹார்ட்டெக் பிளாட்பார்மில்தான் இப்புதிய மாருதி எர்டிகா காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிக  உறுதியும், இலகு எடையும் கொண்ட உலோக கட்டுமானத்தின் மூலமாக, பழைய மாடலைவிட 10 முதல் 20 கிலோ வரை வேரியண்ட்டுக்கு ஏற்ப எடை குறைந்துள்ளது. ஆனால், பரிமாணத்தில்  அதிகரித்துள்ளது. இந்த கார், 4,395 மிமீ நீளமும், 1,735 மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், வீல் பேஸ் பழைய மாடலைப்போலவே 2,740  மி.மீட்டராகவே உள்ளது. புதிய மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 மி.மீ குறைக்கப்பட்டு, 180 மி.மீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த 7 சீட்டர் காரின் இடவசதி மேம்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் 209 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி உள்ளது. வடிவமைப்பில்  முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. இப்புதிய மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103  பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் இன்ஜின் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. டீசலில் ஆட்டோமேட்டிக் மாடல் இல்லை.மெட்டாலிக்  மேக்மா கிரே, பியர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்போர்டு, பியர்ல் ஆர்டிக் ஒயிட், மெட்டாலிக் சில்க்கி சில்வர் மற்றும் பியர்ல் மெட்டாலிக் ஆபர் ஆகிய 5 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்புதிய  மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ₹7.44 லட்சம் முதல் ₹9.50 லட்சம் வரையிலான விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகள் ₹9.18 லட்சம்  முதல் ₹9.95 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். டீசல் மாடல் ₹8.84 லட்சம் முதல் ₹10.90 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக்

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் கிளாசிக் எடிசன் மாடல் புதிய வண்ணத்தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று புதிய வண்ணத்தேர்வுகள் அறிமுகம்  செய்யப்பட்டு இருக்கிறது. முழுவதுமான கருப்பு, சிவப்பு அலங்காரத்துடன் கருப்பு வண்ணத்தேர்வு மற்றும் சில்வர் வண்ண அலங்காரத்துடன் கருப்பு வண்ணம் என 3 புதிய வண்ணங்களில்  கிடைக்கும். ஹெட்லைட்டுக்கு மேல்புறம், சக்கரம், பக்கவாட்டில் உள்ள ஏர்வென்ட் ஆகிய மூன்று இடங்களில் சில்வர் அல்லது சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, லோகோவும்,  இருக்கைகளில் தையல்களும் சிவப்பு அல்லது சில்வர் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது, தனித்துவமான பல்சர் 150 மாடலாக வேறுபடுகிறது. இப்புதிய பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் பைக்கில் 149சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14 எச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும்  வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த  பைக்கில் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது, பழைய பல்சர் 150 மாடலின் அடிப்படையில் வந்திருப்பதால்,  ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அவசியப்படாது. ₹65,500 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல்

ஆரம்ப ரக ஸ்போரட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் ட்யூக் 200 பைக் அதீத வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. கேடிஎம் ட்யூக் 200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகம்  செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஏபிஎஸ்  பிரேக்கிங் சிஸ்டம் பாஷ் நிறுவனத்திடமிருந்து கேடிஎம் நிறுவனம் சப்ளை பெறுகிறது. இதன் 199.5சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரையும், 19.6 என்எம் டார்க்  திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது ட்ரெல்லிஸ் பிரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில்  அப்சைடு டவுன் அமைப்பிலான போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 300 மி.மீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மி.மீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு  இருக்கிறது. முதலில் ஆரஞ்சு வண்ண கலவையிலும், பின்னர் வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணத்தேர்வுகளும் வழங்கப்பட்டன. எனினும், ஆரஞ்சு வண்ணத்தேர்வு தொடர்ந்து  வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதிக செயல்திறன்மிக்க இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்கப்படுவது, இந்த பைக்கின் பாதுகாப்பை  மேலும் வலுப்படுத்தும் என நம்பலாம். இந்த மாடலுக்கு ₹1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும், கச்சிதமானதுமாக ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன்

ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும் கச்சிதமானதும் குரல் உதவியுடனான ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன், இந்த புதுரக ஜெப்-பீஸ் இயர்போன் அனுபவத்தை  அனுபவியுங்கள்.இசைப்பயிற்சிக்காக பழையரக இயர்போன் மூலம் கொண்ட சலிப்பும் மணிக்கணக்கிலுமான கடினப்பயிற்சிகளை கைவிட்டு, ஜெப்-பீஸ் உதவியுடன் வயர்களின் சிக்கல்களின்றி தடையில்லாத இசை அனுபவத்தை பெறுங்கள். கேட்கும்போதே துள்ளியெழச்செய்யும் தெளிவான துள்ளிசை அனுபவத்தை உணர்ந்து இசையின் புது அனுமானத்தோடு மன அமைதி பெற்றிடுங்கள். ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட், இந்தியாவின் முண்ணனி தயாரிப்புகள் ஆகும். ஐடி துறையிலும், ஒரு அமைப்பு, மொபைல் போன்கள் / நவநாகரீக மின்னணு அணிகலன்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் போன்ற புரட்சிகரமான பொருட்களை வயர்லஸ் தொழில்நுட்பத்தில் நமது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. ஜெப்-பீஸ் ஒரு உண்மையான வயர்களில்லாத தனித்துவமான கருவியாக தரம் உயர்ந்துள்ளது. இது நமது பார்வைக்கு நல்ல ஸ்போர்டி தோற்றத்துடன் பளபளப்பு கூட்டப்பட்டு அழகாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிரத்யேகமாக பிறை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஒலிச்சிதறல் இல்லாது இயங்க கூடியது. மிகவும் கனமில்லாத வெறும் 4 கிராம்கள் மட்டுமே எடையை உடையது.

வசதியான வடிவமைப்பு ஏர்போடுகள் மிகவும் துல்லியமாக இயங்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, காதுகளுக்கு ஏற்ற வசதியான வடிவமைப்பினை கொண்டது. நீங்கள் பளூத்தூக்குபவராகவோ, மைல்கள் தூரம் ஓட்டப்பயிற்சி செய்பவராகவோ இருப்பினும் ஏர்போடுகள் தங்களது காதுகளில் இருந்து நழுவி விழாது. இதன் மூலம் தங்களுடைய முக்கிய வேளைகளில் சிறப்பாக கவனம் செலுத்தலாம்.
அழைப்பு இணைத்துலும் / செயல்பாடும் :இந்த ஹெட்செட்டுடன் ஃ போனை இணைப்பது மிக எளிதும் துரிதமுமான ஒன்றாகும். ஒருமுறை இணைத்துவிட்டால் பின் எப்போது வேண்டுமானாலும் ஒலிச்சேவையில் இருந்து குரல் சேவைக்கு உடனடியாக மாற்றிக்கொள்ள இயலும். அழைப்புகள் வரும்போது தானாகவே ஒரு இயர்போனாக மாறி துல்லியமான ஒலியினை தந்து கூடிய விரைவில்  செயல்படத்துவங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.குரல் உதவி : ஆண்ட்ராய்டு மற்றும் iOS கருவிகளுடன் இணைந்து தெளிவான குரல் சேவையை பெற முடியும். இரு கருவிகளின் ஊடாக எந்தவிதமான கேள்விகளையும் கேட்டு உடனடியாக பதில்களை கூடியவிரைவில் பெற்றுக்கொள்ள இயலும். தாங்கள் பயணிக்கும் வழி மற்றும் வானிலை சம்பந்தமான கேள்விகளையும் கேட்டறிந்து கொள்ளமுடியும். இயர்போடில் உள்ள பொத்தானை இருமுறை அழுத்தம் கொடுத்து இந்த சேவையை எளிதாக பெறலாம்.ரீசார்ஜபிள் பேட்டரி பெட்டகம்:விரைவில் பேட்டரி அதன் சக்தியை இழந்துவிட்டதா கவலை வேண்டாம், பிரத்யேகமாக இயர்போடுகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ரீசார்ஜபிள் பேட்டரி கேஸில் வைத்துவிட்டால் கூடுதலாக 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைத்துவிடும். இந்த பேட்டரிகேஸ் மிகவும் எடைகுறைந்த, அளவில் சிறியதான கருவி என்பதால் தங்களது சட்டைப்பையில் அழகாக அடங்கிக்கொள்ளும்..ஜெப்ரானிக்ஸ் தயாரிப்புகளை அறிமுகம் செய்து பேசும் போது இதன் இயக்குநர் திரு.பிரதீப் தோஷி கூறியதாவது, 'அனைவரும் வயர்களில்லா புரட்சியில் ஜெப்-பீஸ் உடன் இணையுங்கள், குரல் உதவி மற்றும் ஒலிச்சேவைக்காக ஆண்ட்ராய்டு மற்றும் iOS கருவிகளில் வயர்களில்லாத புரட்சியின் உச்சநிலையை அடைந்திடவும், துல்லியமான தடையில்லாத இசையை கேட்டு மன அமைதி பெறவும் எங்களோடு இணைந்திருங்கள்.'இந்த வயரில்லாத இயர்போன்கள் கவர்ச்சிகரமான கருப்பு நிறத்தில் ,இந்தியாவின் அனைத்து முண்ணனி மற்றும் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும்.

புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்

இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த  ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் மீண்டும் களமிறங்க இருக்கின்றன.  புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா மோட்டார்சைக்கிள்கள்  வர இருப்பதால், பெரும்  எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஜாவா பிராண்டில் மொத்தம் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வர இருக்கிறது. சட்டென பார்க்கும்போது, இது ராயல் என்பீல்டு புல்லட்டின் சாயலை பெற்றிருப்பதால், ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான  எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், இன்ஜின் அமைப்பு, மட்கார்டு உள்ளிட்டவை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் சாயலையே பெற்றுள்ளது. எனினும், இருக்கை அமைப்பும், பின்புற  மட்கார்டும் மட்டுமே ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய தனித்துவத்தை பெற்றிருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்போக்ஸ் வீல், பெட்ரோல் டேங்கில் ஜாவா நிறுவனத்தின் பிராண்டு முத்திரை, பிரேக் சிஸ்டம், கைப்பிடிகள் மற்றும் டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவை பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களை  பிரதிபலிக்கும் விதத்தில், மாற்றம் அதிகம் இல்லாமல் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில், ஜாவா நிறுவனத்தின் 293சிசி இன்ஜின் இடம்பெற்றிருக்கும் என  கருதப்படுகிறது. இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பியூயல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதால், இது நவீன யுக  இன்ஜின் என கூற முடியும். அத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதும் என்பதும் இதன் முக்கிய சிறப்பு. இது, பழைய ஜாவா மோட்டார்சைக்கிள் போன்றே, இரட்டை குழல் சைலென்சர்களுடன் வர இருக்கிறது.  இந்த இன்ஜின் நடுத்தர நிலையில், மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அத்துடன், 2 ஸ்ட்ரோக் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் போன்றே, தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தையும் பெற்றிருக்கும்  என்பது ஜாவா பிரியர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இப்புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட  உள்ளது. இது, இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நிச்சயம் நேரடி போட்டியை கொடுக்கும்.

ராயல் என்பீல்டு 836சிசி கான்செப்ட் பைக்

இத்தாலியின் மிலன் நகரில் நடந்துவரும் ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 836சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.  பாரம்பரியம்மிக்க ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ரக மோட்டார்சைக்கிள் மாடல்களை தயாரிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் வரிசையில், தற்போது  பாபர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், KX என்ற புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடலை  அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பொறியியல் வல்லமையை உலகுக்கு பரைசாற்றும் விதமாக, பிரம்மாண்டமான இந்த மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை வடிவமைத்துள்ளது. 1937ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ராயல் என்பீல்டு KX  மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் நவீன கால டிசைனுக்கு ஒத்துப்போகும் வகையில், இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 6 மாதங்களில் இந்த மோட்டார்சைக்கிள் வரைபட நிலையில் இருந்து  கான்செப்ட் நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 1937ல் தயாரிக்கப்பட்ட 1140 KX மோட்டார்சைக்கிளானது Ultimate Luxury Motorcycle என்ற கொள்கையில் பிரபலப்படுத்தப்பட்டது. அந்த மோட்டார்சைக்கிளில்  1,140 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதே பாணியில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய KX மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது. பாரம்பரியமான பாபர் ரக வடிவமைப்பில் இப்புதிய மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில்  வட்ட வடிவிலான பகல்நேர விளக்குகளுடன்கூடிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. பழைய 1140 KX மாடலைப்போன்றே, கர்டர் போர்க்குகள் அமைப்பு கொண்ட முன்புற சஸ்பென்ஷன் சிறப்பாக உள்ளது.   முன்புறத்தில் பிரம்மாண்டமான அலாய் வீல்கள் மற்றும் டயர்கள், கீழே இப்புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் வி-ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 836 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ராயல்  என்பீல்டு மற்றும் போலரிஸ் நிறுவனங்களின் கூட்டணியில் இப்புதிய 836சிசி இன்ஜின் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு. பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இப்புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் அடுத்த ஆண்டு தயாரிப்பு  நிலைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்

இத்தாலியின் மிலன் நகரில் நடந்துவரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய மோட்டார் சைக்கிள் டூரர் எனப்படும் நீண்ட தூர  பயணங்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் என்ற சாகச ரக மாடலை தழுவி டூரர் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு  இருக்கிறது. ஆனால், எக்ஸ்பல்ஸ் மாடலைவிட எக்ஸ்பல்ஸ் 200 டி மாடல் 30 மி.மீ குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்இடி  விளக்குகள், புளூடூத் இணைப்பு நுட்பம் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், நேவிகேஷன் வசதி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளது. எம்ஆர்எப் ரேவ்ஸ் டயர்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் பைக்கில் இருந்த அதே 198சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இப்புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.1  பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எனினும், இன்ஜின் டியூனிங்கில் மாறுபடும் வாய்ப்புள்ளது. இப்புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலானது அடுத்த ஆண்டு பிற்பாதியில் எதிர்பார்க்கலாம்.  விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. கபே ரேஸர், டெசர்ட், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் பிளாட்- டிராக் ஆகிய வேறு புதிய பரிணாமங்களிலான மாடல்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்தடுத்து பல புதிய ரக  மாடல்களை ஹீரோ நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா கோடியாக் ஸ்பெஷல் மாடல்

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரக மாடல் காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில்  விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் கிளெமண்ட் என்ற பெயரில் இப்புதிய மாடல் வந்துள்ளது.  கோடியாக் எஸ்யூவி ரக கார், அனைத்து வசதிகளும் பொருந்திய விலை உயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்படும். இப்புதிய காரில், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் அதற்கான 360 டிகிரி கேமரா  கொடுக்கப்பட்டுள்ளன. இன்டீரியர் மானிட்டரிங் சிஸ்டத்துடன்கூடிய ஆன்ட்டி தெப்ட் அலாரம் வசதியும் உள்ளது. இந்த காரில் ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது. இந்த காரில் தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எல்சிடி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்  கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த ரகத்திலேயே 9 ஏர்பேக்குகள் கொண்ட மாடலாகவும் இது பெருமை பெறுகிறது. இப்புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் அண்ட் கிளெமென்ட் மாடல் ரூ.35.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்!

வாஷிங்டன் : முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் மாநாட்டில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில்செயல்பட கூடிய  இந்த  ஸ்மார்ட்போன், கேலக்சி எஃப் ஸ்க்ரீன் திறந்த நிலையில் 7.3 அங்குள்ள டிஸ்பிளேவில் டேப்லெட் போன்று பயன்படுத்தக் கூடியதாகவும் மடங்கிய நிலையில் 4.58 அங்குள்ள டிஸ்பிளேவுடன் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓஎல்இடி பேனல் வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த போனை ஸ்மார்ட்போனாகவும் டேப்லெட் ஆகவும் பயன்ப்படுத்தலாம். இரண்டு சிம் கார்டு வசதி 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி என்று சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை சுமார் 1லட்சத்து 10 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.