Tourism - Dinakaran

சேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு

ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவரும் சேவல் கொண்டை மலர்கள் நீலகிரியில் பல இடங்களில் பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கவும், மகிழ்விக்கவும் பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் இயற்கை அழகை காணவே விருப்பப்படுகின்றனர். தற்போது கீழ்கோத்தகிரி, எப்பநாடு மலைச்சரிவுகள் மற்றும் கல்லட்டி சோலாடா பகுதிகளில் குறிஞ்சி ...

விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது

பென்னாகரம் : காந்தி ஜெயந்தி விடுமுறை, காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவால், ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பரிசல் துறையிலும், மெயினருவியிலும் கூட்டம் அலைமோதியது. இளைஞர்களும், பெண்களும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளியல் போட்டனர். கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீரால், 2 மாதங்களுக்கு முன் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு சரிந்தது. மெயின் அருவிக்கு செல்லும் பாதை, குளிக்கும் இடம் ஆகியவை சேதமடைந்தது.
இதனால் சுமார் 80 ...

12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி

தேனி : தண்ணீர் வரத்து குறைந்தததால் சுருளி அருவியில் 12 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் சுருளி அருவி உள்ளது. ஹைவேவிஸ், மேல்மணலாறு, வெண்ணியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆக.14ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன் படிக்கட்டுகளில் செல்வதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ...

கொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொல்லிமலைக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கடந்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால், கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை மலையின் இயற்கை சூழல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காலை 10 மணியிலிருந்து 50வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 70வது கொண்டை ஊசி வளைவு வரை மேகமூட்டங்கள் சாலையை கடந்து செல்லும் காட்சி, சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ...

சாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்

தென்காசி:  குற்றாலத்தில் விடுமுறை தினமான நேற்று  சாரல் களைகட்டியதோடு அருவிகளில் தண்ணீர் தாராளமாக கொட்டியது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. பெரும்பாலான நாட்கள் சாரல் பெய்துள்ளதோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர்வரை தொடர்ச்சியாக 3 தினங்கள் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. நேற்று மதியம் லேசான வெயில் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு சாரல் களைகட்டியது. மெயினருவியில் ...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும், சாலையோரங்களிலும் பூத்துள்ள மஞ்சள் நிற சீகை பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை தாரவங்கள், மரங்கள், ஆர்கிட்டுகள் உள்ளன. இது தவிர இங்குள்ள தாவரவியல் பூங்காக்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் காணப்படும் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகள் ஆகியவை வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனங்களில் சில சமயங்களில் வனங்களில் ஒரே சமயத்தில் சில மரங்கள் பூத்து குலுங்கும். இந்நிலையில் சாலையோரங்களில் காணப்படும் ...

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்

தென்காசி : விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்  அலைமோதியது. மெயினருவி, ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில்  காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக சாரல் மாயமானது. சாரல் இல்லாத போதும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு நன்றாக விழுகிறது. நேற்று மதியம் வரை வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. அத்துடன் மனதுக்கு இதமான குளு குளு தென்றல் காற்றும் வீசியது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் ...

குற்றாலம் சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி

தென்காசி, ஜூலை 31 : குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடந்தது. குற்றாலம் சீசனை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர், காய்கறி கண்காட்சி  துவங்கியது. 3வது நாளான நேற்று ஐந்தருவி சுற்றுலாத்துறை படகு குழாமில் படகுப்போட்டி நடத்தப்பட்டது. ...

பைக்காரா அணை நீர்மட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி: தொடர் மழை காரணமாக பைக்காரா அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் சுமார் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையில் உள்ள நீைர கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் ...

குற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்

தென்காசி, ஜூன் 21: குற்றாலத்தில் சீசன் அபாரமாக உள்ளது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றாலத்தில் கடந்த ஒரு மாதமாக சீசன் நன்றாக உள்ளது. தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. இடையிடையே மெல்லிய சாரலும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சீசன் அபாரமாக இருந்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.  பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ...

ரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

கிருஷ்ணகிரி: ரம்ஜான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் பண்டிகையினையொட்டி பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலே விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவினையொட்டி, பல்வேறு நகரங்களில் இருந்து முஸ்லிம்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவ்வாறு விடுமுறைக்காக வந்தவர்கள் மற்றும் அண்டைய ...

சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்

திருவண்ணாமலை: ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா ...

தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சேந்தமங்கலம் : தொடர் மழையால், கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து  அதிகரித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது  அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. குறி்ப்பாக கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால், காய்ந்து கிடந்த அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக கொல்லிமலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா ...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது

தென்காசி :  குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளபட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மெயினருவி, ஐந்தருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாத இறுதியிலேயே சற்று முன்னதாக துவங்கிவிட்டது. துவக்க நாளன்றே அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தடை விலக்கப்பட்டு அருவிகளில் ...

தென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்

வி.கே.புரம் :  தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. வெள்ளப்பெருக்கால் அகஸ்தியர் அருவியில் குளிக்க காலையில் விதிக்கப்பட்ட தடை மாலையில் நீக்கப்பட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. பருவமழை முன்பே தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ...

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சுற்றுலா நகரமான ஊட்டியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மேகமூட்டத்துடன் கூடிய குளு குளு காலநிலை நிலவி வருகிறது.மேலும் கோடை விழா துவங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் சமவெளி பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து ...

கோடை விடுமுறை எதிரொலி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய கொல்லிமலை

சேந்தமங்கலம்: கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளால் கொல்லிமலை களை கட்டி காணப்பட்டது. கொல்லிமலையில் கோடை விடுமுறையையொட்டி, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர். அவர்கள் அறப்பளீஸ்வரர் கோயில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், எட்டுக்கை அம்மன் கோயில், மாசிலா அருவி, நம்மருவி, வாசலூர்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை வியூபாய்ன்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தங்கள் குடும்பத்துடன் சுற்றி பார்க்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு ...

விடுமுறையை கொண்டாட பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சத்தியமங்கலம்: கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப்பயணிகள் பவானிசாகர் அணைப்பூங்காவை பார்வையிட ஆர்வம் காட்டினர். பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா உள்ளது. பூங்காவில் படகு வசதி, சிறுவர் மற்றும் பெரியவர்கள் சறுக்கி விளையாடுவதற்கும், ஊஞ்சல், செயற்கை நீரூற்று மற்றும் அழகிய கூடாரங்கள் உள்ளன. இதனால் விடுமுறைக்காலங்களில் அதிக அளவில் பயணிகள் வருவது வழக்கம். தற்போது பள்ளி தொடர்விடுமுறை விடப்பட்டதால் பொதுமக்கள் பூங்காவிற்கு கூட்டம் கூட்டமாக வந்தனர். ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி ...

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஒரே நாளில் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்தனர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 200 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகாலை முக்கடல் சங்கமத்தில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிக்கும் மக்கள் கடலில் குளித்து விட்டு பகவதியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பின்னர் கடல் ...

சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்

பென்னாகரம்: தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல், ஏற்காடு மற்றும் மேட்டூர் அணைப்பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருவதாலும், கோடை விடுமுறையையொட்டியும்,  சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கியவாறு இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், மே தின விடுமுறையையொட்டி, நேற்று ...