Villupuram - Dinakaran

விநாயகர் சிலை ஏரிக்கரையில் கண்டெடுப்பு

திருவெண்ணெய்நல்லூர், அக். 17: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருடு போன பழமை வாய்ந்த விநாயகர் சிலை ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராயநல்லூர் கிராமத்தில் சக்தி விநாயகர், பாலமுருகன் சமேத செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி இரவு கோயிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டது. இது குறித்து கோயிலின் முக்கிய நிர்வாகிகள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சிலை நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிலைக்கு பூஜை செய்து எடுத்து சென்று கோயிலில் வைத்தனர்.

தமிழர்களை இழிவுபடுத்தி சித்து பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்

சென்னை, அக். 17: ‘‘தமிழர் கலாசாரம் பற்றி  பஞ்சாப் அமைச்சர் சி்தது கூறிய கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்து,  தமிழ் மொழி,  தமிழ் பண்பாடு, கலாச்சாரம், உணவு பழக்கத்தை  பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு  பேசியதை கண்டித்து,சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாஜ  நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதற்கு, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். இதில், சித்துவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.னர். பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அளித்த பேட்டி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்து, தமிழ் மொழி, பண்பாட்டை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். இதுபற்றி, தமிழக அரசியல் கட்சியினர் எவரும் அவருக்கு எதிராக ஒருவார்த்தையும் பேசவில்லை. இந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். வட இந்தியாவையும், தென் இந்தியவையும் அவரது பேட்டியில் பிரிப்பதாக உள்ளது.  இவ்வாறு தமிழிசை கூறினார்.

மணல் ஏற்றிவந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ரிஷிவந்தியம், அக். 17: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் பகுதியில் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் மூர்த்தி, துள்ளி மகன் நாராயணன், காக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிங்காரம் ஆகிய 3 பேரும் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, மணலுடன் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

சாராயம் விற்றவர் கைது

விக்கிரவாண்டி, அக். 17:விக்கிரவாண்டியில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பொன்னங்குப்பம் பகுதியில் சம்பவத்தன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி செல்லும் சாலையில் சாராயம் விற்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் பொன்னங்குப்பத்தை சேர்ந்த மோகன்(40) என தெரிந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ரிஷிவந்தியம், அக். 17: திருக்கோவிலூர் அடுத்த மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் சந்திரசேகர்(34), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாலை இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான மணிகண்டன், சுரேஷ் ஆகியோருடன் மேல்வாலை பெரிய ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளித்து கொண்டிருக்கும்போது சந்திரசேகர் மட்டும் நீரில் மூழ்கி அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதையடுத்து நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் உறவினர்கள், கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சந்திரசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை அவரை சடலமாக மீட்டனர். இதையடுத்து சந்திரசேகர் உடலை கண்டாச்சிபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் சீனுவாசன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், அக். 17: தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ், கருணை தொகை வழங்கிட வேண்டும். நிலையாணைகள் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது பணியிட மாறுதல், இளநிலை உதவியாளர் தேர்வில் டாஸ்மாக் இயக்குநர் குழு முடிவுகளை அமல்படுத்த வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், கணபதி, சிங்காரவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் பழனிவேல், சந்தானகுமார், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டெங்கு சிறப்பு பிரிவில் எம்எல்ஏ ஆய்வு

‘விக்கிரவாண்டி, அக். 17: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு பிரிவை நேற்று பொன்முடி எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பொன்முடி எம்எல்ஏ கூறுகையில், காய்ச்சல் பிரிவில் 35க்கும் மேற்பட்டோர் ஜூரம் என்ற காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நிரப்பப்பட வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனை சரிசெய்து மருத்துவர்களுக்கு தேவையான வசதியையும் செய்து தரவேண்டும். அப்போதுதான் நோயாளிகளை எந்த வித இடையூறுமின்றி கவனிக்கமுடியும். சுகாதார துறை டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளது. அவ்வாறு இருக்கையில் டெங்கு காய்ச்சலை எவ்வாறு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். திமுக நிர்வாகிகள் ஜனகராஜ், ஜெயச்சந்திரன், நயினாமுகமது, ஜெயபால், ரவிதுரை, அப்துல்சலாம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

திண்டிவனத்தில் குடிநீர் விற்பனை நிலையம் மீண்டும் திறப்பு

திண்டிவனம், அக். 17: திண்டிவனத்தில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே இருந்த குடிநீர் விற்பனை நிலையம் மூடியே இருந்தது. பயணிகளின் நலன் கருதி குடிநீர் விற்பனை நிலையத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக மூடப்பட்டு இருந்த குடிநீர் விற்பனை நிலையம் மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பயணிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஊதிய உயர்வு வழங்க கோரி ரேஷன் கடை ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்

விழுப்புரம், அக். 17:  ஊதிய உயர்வு வழங்க கோரி விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் இரண்டாவது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 500க்கும் அதிகமாக உள்ள குடும்ப அட்டை உள்ள கடைகளில் எடையாளர்களை நியமிக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்ைதயும் விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். பொதுவிநியோக திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும், என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 2,800 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று 2வது நாளாக நடந்த ஸ்டிரைக்கில் 60 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 1,800 கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சி திடல் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கோபிநாதன் முன்னிலை வகித்தார். தனசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். கொட்டும் மழையில் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.

ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை அமோகம்

விழுப்புரம், அக். 17:  ஆயுத பூஜையையொட்டி விழுப்புரத்தில் அலங்காரம், தோரணை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.தமிழகத்தில் நாளை (18ம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை மறுதினம் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் விழுப்புரம் நகரில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பூ, பழம், காய்கறிகள், கரும்பு, சுண்டல், வெல்லம், சர்க்கரை போன்றவற்றின் விற்பனை விழுப்புரத்தில் களைகட்டியது.சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கு வீடு, கடை மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து அலங்காரம் செய்து பூஜை செய்வது வழக்கம்.  இந்நாளில் தொழில் கருவிகளை தூய்மை செய்து பூஜை செய்வர். மேலும் கல்வி நிறுவனங்களில் விஜயதசமி தினத்தில் மழலைகளின் சேர்க்கையும் நடைபெறும். பூஜைகளுக்கு தேவையான திருஷ்டி பூசணிக்காய், மாவிலை, சிறிய வாழைமரங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள், விழுப்புரம் நகரின் பல இடங்களில் சாலையோரம் வைத்து விற்பனை செய்யயப்பட்டது.

விநாயகர் சிலை ஏரிக்கரையில் கண்டெடுப்பு

திருவெண்ணெய்நல்லூர், அக். 17: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருடு போன பழமை வாய்ந்த விநாயகர் சிலை ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராயநல்லூர் கிராமத்தில் சக்தி விநாயகர், பாலமுருகன் சமேத செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி இரவு கோயிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டது. இது குறித்து கோயிலின் முக்கிய நிர்வாகிகள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சிலை நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிலைக்கு பூஜை செய்து எடுத்து சென்று கோயிலில் வைத்தனர்.

சாராயம் விற்றவர் கைது

விக்கிரவாண்டி, அக். 17:விக்கிரவாண்டியில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பொன்னங்குப்பம் பகுதியில் சம்பவத்தன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி செல்லும் சாலையில் சாராயம் விற்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் பொன்னங்குப்பத்தை சேர்ந்த மோகன்(40) என தெரிந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மணல் ஏற்றிவந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ரிஷிவந்தியம், அக். 17: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் பகுதியில் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் மூர்த்தி, துள்ளி மகன் நாராயணன், காக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிங்காரம் ஆகிய 3 பேரும் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, மணலுடன் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

சாலையோர குப்பை குவியலால் தொற்றுநோய் பரவும் அபாயம்

திண்டிவனம், அக். 17: விழுப்புரம் மாவட்டத்திலேயே விழுப்புரம் நகரத்திற்கு அடுத்த படியாக திண்டிவனம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது. திண்டிவனம் -செஞ்சி செல்லும் சாலையில் செஞ்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கு அருகில் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இப்பகுதியானது நகரில் அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக விளங்குகின்றது. மேலும் இப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது. எனவே, இங்கு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகின்றது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மழைநீரில் இந்த குப்பைகள் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதேபோல் நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் எடுத்து செல்லும்போது வலையால் மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுவதால் குப்பை காற்றில் பறந்து வீதிகளில் சிதறுகின்றது. பயன்படுத்தப்படாமல் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் கேட்பாராற்று கிடக்கின்றது. இதனை நகரின் முக்கிய வீதிகளில் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொதுமக்கள் மட்டுமின்றி சாலையோர உணவகங்கள், கோழி இறைச்சி, மீன் கடைகள் ஆகியவற்றின் கழிவுகள் சாலையில் கொட்டப்படுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், அக். 16:  நிலமற்ற விவசாய கூலிகளுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவப்படை கட்சி சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவனத்தலைவர் சிவசாமி ஐஏஎஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். பொதுச்செயலாளர் மோகன்ராஜ் துவக்க உரையாற்றினார். மாசிலாமணி வரவேற்றார். நிர்வாகிகள் கோவிந்தசாமி, மகாராஜன், ஹரிகிருஷ்ணன், சத்ரபதி, சங்கர், குமார், உத்திரகுமார், ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சின்னசேலம், அக். 16: சின்னசேலம் அருகே வீ.மாமந்தூர்

கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்(60). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் குடும்பத்திற்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்ரமணியின் ஆதரவாளர் தூண்டியின் நிலத்தில் முருகேசன் மாடு மேய்ந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தூண்டி, பாரதிராஜா, வல்லரசு, கலியன் ஆகியோர் சேர்ந்து முருகேசனிடம் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது முருகேசன், அவரது மனைவி இன்பரசி, தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், தூண்டி, பாரதிராஜா, வல்லரசு, கலியன் ஆகியோரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாரதிராஜா கொடுத்த புகாரின்பேரில் முருகேசன், அவரது மனைவி இன்பரசி, தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை(60) கைது செய்தனர். அதைபோல முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் தூண்டி, பாரதிராஜா, வல்லரசு, கலியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தூண்டி(49), வல்லரசு(19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.ஆனத்தூர் ஏரியில் மணல் கடத்திய 10 பேர் கைதுதிருவெண்ெணய்நல்லூர், அக். 16: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூர் ஏரிக்கரையில் இருந்து தினமும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், ேநற்று திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, ஆனத்தூர் ஏரிக்கரையில் இருந்து மணல் கடத்தி வந்த 10மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். பின்னர் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பரணி(34), கலியமூர்த்தி மகன் ஆனந்தன்(28). ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(30), வைத்தி மகன் கூத்தப்பன்(28), ஐயனார் மகன் மகாதேவன்(34), சுப்பிரமணியன் மகன் முருகன்(39), காசிநாதன் மகன் நாகராஜன், ராமச்சந்திரன்(57), தங்கராசு மகன் மோகன்ராஜ்(50), சடையன் மகன் சங்கர்(47) என தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். மேலும், 10 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

படியில் பயணிக்கும் அவலம் விழுப்புரம் - பில்லூருக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

விழுப்புரம், அக். 16:  விழுப்புரத்திலிருந்து பில்லூருக்கு கூடுதல் பேருந்து இயக்கக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.விழுப்புரம் அருகே பாணாம்பட்டு ஊராட்சி பொதுமக்கள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரத்திலிருந்து பாணாம்பட்டு, ஆனாங்கூர் வழியாக பில்லூருக்கு அரசு பேருந்துகள் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. தினசரி பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்பவர்கள் என பலர் செல்வதால் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு வரும் அரசு பேருந்தில் தினசரி படிகட்டில்தான் மாணவர்கள் பயணித்து வரும் அவலநிலை உள்ளது. மேலும் வேலைக்குச் செல்பவர்களும் கூட்ட நெரிசலில் பயணிக்கின்றனர். காலை நேரத்தில் இந்த ஒரு பேருந்தை தவிர வேறு பேருந்து இல்லாததால் அனைவரும் போட்டி, போட்டுக்கொண்டு இந்த பேருந்தில் சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலால் பலர் பேருந்தை விட்டு நடந்தே செல்லும் நிலையும் உள்ளது.இந்த நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி கிராம மக்கள் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் படியில், ஜன்னலில் தொங்கியபடி பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து காலை நேரங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். அதேபோல் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகள் விடும்போது ஒரு டிரிப் பேருந்து இயக்கினால் பொதுமக்கள், மாணவர்கள் எளிதாக செல்ல முடியும். ஆட்சியர் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட்டு பேருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.முன்விரோத தகராறில் மோதல்

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

சின்னசேலம், அக். 16: சின்னசேலம் அருகே நயினார்பாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சோழன்(34). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது சின்னசேலம் அருகே நல்லசேவிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(25), ஈரியூர் செல்வம்(28) ஆகிய இருவரும் காரில் டீசல் போட சென்றனர்.  அப்போது இரவு நேரம் என்பதால் டீசல் போடமுடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார்(25), செல்வம்(28) ஆகிய இருவரும் சோழனை அசிங்கமாக திட்டி உள்ளனர். இதில் பயந்துபோன சோழன் பங்க் அலுவலகத்தில் நுழைந்து கதவை சாத்திக்கொண்டார். அப்போது செந்தில்குமார், செல்வம் இருவரும் கல்லால் கதவு கண்ணாடியை உடைத்துள்ளனர்.  இதனால் வெளியே வந்த சோழனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சோழன் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார்(25), செல்வம்(28) ஆகிய இருவரையும் கைது செய்தார்.மாட்டு வண்டி மீது பைக் மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி திருவெண்ணெய்நல்லூர், அக். 16:   திருவெண்ணெய்நல்லூர் அருகே மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். பைக்கை ஓட்டி வந்த பேராசிரியர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை விருகம்பாக்கம் வேம்பம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகள் சாய்மனஷா (20), பேஷன் டெக்னாலஜி மாணவி. இவர் தனது பேராசிரியரான சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த பாபு மகன் திலீப்(30) என்பவருடன் சென்னையில் இருந்து தேனிக்கு பைக்கில் சென்றார். இவர்கள் கல்லூரியை சேர்ந்தவர்கள் ஒரு வேனில் தேனிக்கு சுற்றுலா சென்ற நிலையில் இவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் அரசூர் தனியார் பொறியியல் கல்லூரி எதிரே நேற்று காலை அவர்கள் சென்றபோது, எதிரே வந்த மாட்டு வண்டி மீது பைக் மோதியது. இதில் சாய்மனஷா தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  பைக்கை ஓட்டி வந்த திலீப் தோள்பட்டையில் படுகாயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்ைத சரி செய்தனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மது விற்ற 2 பெண் கைது

திண்டிவனத்தில் மூடிக்கிடக்கும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம்

திண்டிவனம், அக். 16: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்து துறையின் சார்பாக மலிவு விலையில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டது. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் திறக்கப்பட்ட அம்மா குடிநீர் விற்பனை கடைகள் பெரும்பாலும் மூடியே கிடக்கின்றது. இதை பற்றி தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் அடுத்த வருடம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள், பொதுமக்கள் விலை மலிவான வாட்டர் பாக்கெட் வாங்கி குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.திண்டிவனத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக துவங்கப்பட்ட அம்மா குடிநீர் விற்பனை கடை மேம்பாலத்தின் கீழே அமைந்துள்ளது. இந்த கடை எப்போதாவது ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகின்றது. அதுவும் திறக்கப்பட்டால் போதுமான அளவு வாட்டர் பாட்டில்கள் ஸ்டாக் இல்லாததால் விற்று தீர்ந்தவுடன் மீண்டும் கடை மூடப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில் அம்மா குடிநீர் விற்பனையகத்தை பயணிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற முதியவர் சாவு

ரிஷிவந்தியம், அக். 16:    ரிஷிவந்தியம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற முதியவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். ரிஷிவந்தியம் அருகே மரூர் கிராமத்தை சேaர்ந்தவர் அண்ணாமலை (65). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள நிலத்தில் கரும்பு வெட்டிய சோலையை கொளுத்த சென்றார். அங்கு சோலையை கொளுத்திக் கொண்டிருந்தபோது, வேலு என்பவருக்கு சொந்தமான பக்கத்து நிலத்தில் வெட்டாமல் இருந்த கரும்பு தோட்டத்துக்கு தீ பரவியது. இதைக்கண்ட அண்ணாமலை அதை அணைக்க முற்படும்போது, தீயில் மாட்டிக்கொண்டார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.   இதுகுறித்து அண்ணாமலை மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.