World Tamilian - Dinakaran

துபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா

கடல் கடந்து வந்து  உழைக்கும் அமீரக மக்களுக்காக, 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும்  ஒலிக்க செய்யும் அமீரகத்தின் பிரபல தமிழ் வானொலியான உம் அல் குவைன் பிராட்கேஸ்டிங் நெட்வொர்க்கின்(Umm al Quwainn Broadcasting Network, UBN)  ரேடியோ கில்லி 106.5 பண்பலை  3 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. உலக வானொலி வரலாற்றில், புதுமை படைக்கும் வண்ணம்,ரேடியோ கில்லி தமது  2 ஆவது வருட துவக்கத்தை, 106 மணி நேரங்கள் மற்றும் 50 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலை  நிகழ்ச்சிகளை ஆர்ஜே நிவி மற்றும் ஆர்ஜே பிரதீப் இணைந்து  தொகுத்து வழங்கி  கின்னஸ் உலக  சாதனை படைத்ததன் ஒரு வருட நிறைவு விழாவும் ...

வெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது

துபாய்: தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரவிசந்திரன் தற்போது ஐக்கிய அரபு எம்ரேட்சின் தலைநகரான‌ அபுதாபியில் பல்கலைகழகத்தில் இணை பேராசிர்யாராக பணியாற்றி வருகிறார். இவர் ஆசிரிய பணியோடு சர்வதேச அளவில் உலக மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.  இவர் சமீபத்தில் 3 ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களை ஐநாவின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நடத்திய போட்டியில் சமர்பித்திருந்தார். இத்திட்டம் மக்களிடம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு இவரின் இரண்டு திட்டங்கள்  சிறந்த திட்டங்களாக  தேர்வு செய்யப்பட்டது.  இதற்கான விருது ஐநாவின் ...

சவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி

துபாய்: இஸ்லாமிய பெருமக்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு சவூதி, அமீரகம், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் துவங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டி ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று 06-05-2019 திங்கள் கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையோட்டி நேற்று முன் தினம் இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு ரமலான் மாதம் முழுவதும் பகுதி நேரத்தில் மாத்திரம் பணி புரியக்கூடிய வாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ...

ஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான புஜைராவில் ஏழு எமிரேட்டுகளையும் சேர்ந்த குழந்தைகளிடையேயான நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019 கடந்த மே மூன்றாம் தேதி நடத்தப்பட்டது.  கிளாசிக்கல், சினிமா நடனங்களில்  தனி நபர் மற்றும் குழுக்கள் பிரிவுகளில் பல குழந்தைகள் போட்டியிட்டனர். திருமதி சுமதி முருகேசனின் வரவேற்புரையுடன் தொடங்கிய இவ்விழாவில் துபாயின்  89.4 தமிழ் பண்பலையின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கவிஞர் ஆர்.ஜே  நாகா அவர்களுக்கு   இலக்கிய சேவைக்கான விருதும் மேடைப்பாடகர் திரு.பிரதீப் அவர்களுக்கு இசை சேவை விருதும்  புஜைராவின் கலாச்சாரம் மற்றும் அறிவு ...

துபாயில் தனி திறன் போட்டி... இந்திய தொழிலாளர்கள் பரிசு வென்றனர்

பல்வேறு கனவுகளோடும் திறமைகளோடும் தாய் நாட்டில்  இருந்து பொருளாதார தேவைகளுக்கு வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதன்பின் தன் தனித்திறமைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு கிடைத்த வேலையில் வாழ்க்கையை ஓட்டிச் செல்லவேண்டி இருப்பது காலத்தின் கட்டாயம். அது போன்றவர்களுக்காக துபாயில் ஆடல், பாடல் என தனித் திறமை கொண்ட ப்ளூ காலர் தொழிலாளர்களை  கண்டறிந்து மேடையேற்றி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறது “ஸ்மார்ட் லைப் பௌண்டேசன்” எனும் தொண்டு நிறுவனம். அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான கருத்தாக்கமான “இயர் ஆப் டாலரன்ஸ்”ஐ  முன்னிலைப்படுத்தி, ...

சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்

ரியாத் தவ்ஹித் கூட்டமைப்பின் ( RTF)  என்ற சமூக நல அமைப்பின் சாப்ரில்  முதலாவது இரத்த தான முகாம் நடைபெற்றது.ரியாத் மாநகரில் மிக பெரிய அரசு ம௫த்துவமனையான King Fahad Hospital உடன் (KFMC) இனைந்து நடைபெற்றது .தேசிய தவ்ஹித் கூட்டமைப்புடன் ( NTF) இனைந்து சவுதி அரேபியா ரியாத் மாநகரில்  கடந்த ஆக்டோபர் 2018 முதல் ரியாத் தவ்ஹித் கூட்டமைப்பு என்ற பெயரில் பல்வேறு சமூக நல பணிகளை  தொடர்ந்து செய்து வருகிறது அதன் தொடர்சியாக நேற்று 19-04-2019 வெள்ளி  கிழமை காலை  9  மணியில் இருந்து  மதியம்  2 மணிவரை நடைபெற்றது .. இது ரமலான் மாதத்தில் உம்ரா வ௫ம் பயணிகளுக்கு பயன்பெரும் விதமாக ...

அபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு

துபாய். அமீரக திமுக சார்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு வருகை தந்துள்ளார். அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலச்சார மையதிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுடன் நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே எஸ் விஜயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.அப்போது அமீரக தமிழ் மக்கள் மன்றத்தில் சார்பாக தலைவர் சிவக்குமார் அவர்கள் தமிழ்ர் நல வாரியம் அமைப்பதற்கான அவசியம் குறித்து விவரத்தை கூறிய ...

மலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

மலேசியா வாழ் தமிழர்கள் சங்கம் (இந்திய குடியுரிமை) சங்கத்தின்சார்பாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 19.01.2019 அன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், மகளிரின் நடனம், கபடி, உரியடி, சிலம்பாட்டம், கயிறுயிழுத்தல் மற்றும்  மழலையரின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.இவ்விழாவானது வளரும் தலைமுறையினர்க்கு பொங்கல் விழாவின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இவ்விழாவினை திருமதி. கோமதி, திருமதி. சவிதா, திருமதி. பூர்ணிமா, டாக்டர். சக்திவேல், டாக்டர். பாலாஜி, திரு. பாலாஜி நாராயணன் மற்றும் திரு. விஜய் ...

அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு

துபாய்: யுஏஇ தலைநகர் அபுதாபி கலீஃபா பூங்காவில்  'அமீரகத் தமிழ் மக்கள் மன்றம்' மற்றும் 'அமீரகத் தமிழகம்'  அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் தமிழர் திருவிழா கொண்டாட்டங்களை நடத்தினர். நிகழ்ச்சியில் தமிழ் பண்பாடு சார்ந்த பல்பேறு நிகழ்வுகளும் பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கென வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. பெரும் குடும்ப விழாவாக உருவாக்கப்பட்ட இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக புதுவை மாநிலத்தின் முதல்வர்  நாராயணசாமி  கலந்து கொண்டு நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தனது பொங்கல்  வாழ்த்துக்களைத்  தெரிவித்து  ...

பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி

துபாய்: தேமுதிக அமீரகபிரிவு சார்பில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான விழா தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டான கபடி போட்டி பொங்கலன்று துபாயில் நடைபெற்றது. முதல் பரிசு தேமுதிக அமீரகபிரிவு செயலாளர் காரல்மார்க்ஸ் வழங்கினார் இரண்டாவது பரிசு தேமுதிக அவைத்தலைவர்  கமால் வழங்கினார்.மூன்றாம் பரிசு பொருளாளர் சதீஸ்குமார் அவர்கள் வழங்கினார். நான்காம் பரிசு ரபீக் அனிபா அவர்கள் வழங்கினார் .ஆறுதல் பரிசுகள் துனை செயலாளர்கள் மாரிமுத்து அம்ஜத் அலி தவசி முருகன் வழங்கினார்கள். தேமுதிக அமீரகபிரிவு அவைத்தலைவரும் திருவாரூர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி இணையதள ...

துபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு

துபாய். ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னாள் எம்பியுமான காதர் மொகிதீனுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில்  வரவேற்பு .அளிக்கப்பட்டது. அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் துபாய்க்கு இன்று 17/01/2019 வியாழக் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex.M.P., அவர்களுக்கு விமான நிலையத்தில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் ...

ராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

துபாய் . யுஏஇக்கு ராகுல் காந்தி ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் வருகை தருகிறார். ஜனவரி 11 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 வருட சகாப்தத்தை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்புரையாற்றுகிறார்.அதோடு துபாயில் தொழிலாளர்கள் மற்றும் இந்திய தொழிலதிபர்களையும் சந்திக்கிறார். யுஏஇ வருகை தரும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும், துபாயில் நடக்கும் விழாவை மிகப் பிரமாண்டமான அளவில் நடத்தவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அகில இந்திய ...

யுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி

துபாய்: தமிழகத்தை சேர்ந்த மாணவி  நவ்சின் முஹைதீன் இவர் யுஏஇ நகரமான சார்ஜாவில் உள்ள சார்ஜா இந்தியன் பள்ளியில் 12வது படித்து வருகிறார். இவர் உயரம் தாண்டுதலில் யுஏஇ-யில் சிபிஎஸ்சி பள்ளியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் இந்தியாவில்  நடைபெற்ற சர்வதேச அளவிலான சிபிஎஸ்சி பள்ளி மாணவியர் பங்கேற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பத்து இடங்களில் 6வது இடம் பெற்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து ...

துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது

துபாய்:  அதிகளவில் ரத்ததானம் தொடங்கி தற்போதைய கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண உதவி வழங்கும் முயற்சி என பல்வேறு சமூக நல பணிகளின் ஈடுபடும் அமைப்பாக துபாயில் அரசு பதிவு பெற்ற தமிழகத்தை சேர்ந்தோரை நிர்வாகிகளாக கொண்ட அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் செயல்பட்டு வருகிறதுஇந்த அமைப்பு கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துபாய் அரசு சமூக சேவை அமைப்புகளை முறைப்படுத்த புதிய சட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது. அப்போது பதிவு பெற்ற ஒரே தமிழ் அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக அல்ஹாஜ் ...

தீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்

துபாய்:  உலகில்  அதிகம் பேர் கொண்டாட கூடிய பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான தீபாவளி உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் அதிகம் வசிக்ககூடிய  பர் துபாய் பகுதியில்  தீபாவளியை கொண்டாடியவர்கள்  தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.தீபாவளியையோட்டி கடைகளில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி ...

அன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..!

துபாய்.  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி பிறந்த நாளையோட்டி துபாயில் உள்ள பாட்டளி மக்கள் கட்சியினர் சார்பில் பார்துபாய் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.தொழில் அதிபர் ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதில் சிரஞ்சிவி, மகேஷ்காமராஜ், செல்வராசு, மகா.மணிகண்டன், செல்வம், அர்சுணன், அருள்வேந்தன் உள்ளிட்ட பாமக முக்கிய நிர்வாகிகள் பெருந்திரளாக  கலந்து கொண்டனர்.இன் நிகழ்ச்சியில் 500 மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டதொடு நல உதவிகளும் ...

துபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்

துபாய்: அமீரகத்தில் தமிழில் ஒலிபரப்பு செய்து வரும் 106.5 கில்லி பன்பலை, நிலையம் தொடங்கி 500 நாள் கடந்ததை கொண்டாடும் வகையில் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 148வது மாடியிலிருந்து ஒருநாள் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்து சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியில் கில்லியின் நேயர்களும் கட்டணமின்றி அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் கில்லி எப்.எம் குழுவினர், நிகழ்ச்சி தயாரிப்பின் தலைமை நிர்வாகி ஆர்.ஜே நிவி, ஆர்.ஜே அருண், ஆர்.ஜே அஞ்சனா, ஆர்.ஜே பிரதீப், ஆர்.ஜே கிரிஷ் மற்றும் சி.இ.ஒ அசோகன் உள்ளிட்டோர் ...

துபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

துபாய்: துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா (வயது 34) தொழில்நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 09.07.2018 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது உடலை அவரது சொந்த ஊரில் ஒப்படைக்க உதவிடுமாறு ஈமான் அமைப்பை கேட்டுக் கொண்டது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் மற்றும் பொதுச்செயலாளர் ஏ.ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில் அவரது உடல் பீகார் மாநிலம் பாட்னாவில் அவரது சகோதரர்களிடம் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் மூலம் ...

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

துபாய்: துபாய் கோடு சூக் மற்றும் அல் ராஸ் மெட்ரோ நிலையம் அருகில் அல் அப்ரா மருத்துவ நிலையம் உள்ளது. இந்த மருத்துவ நிலையத்தில் பல் மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜ்மா நசீர் பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்தவர். அமீரகத்தில் வசித்து வரும் தமிழக மக்களுக்கு பல்லை பரிசோதித்து அதனை முறையாக பராமரிக்க வேண்டிய ஆலோசனைகள் குறித்து விளக்கி வருகிறார். எனவே பல்லை இலவசமாக பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகள் பெற விரும்புபவர்கள் ...

மொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா

மொரிஷியஸ்: மொரிஷியஸில் டெர்ரே ரூக் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடந்தேறியது. இக்கோயிலில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ கிருஷ்ணர், மற்றும் காளி சன்னதிகள் அனைத்திற்கும் கும்பாபிஷேகங்கள் நடந்தன. காலை 8 மணி முதல் மந்திர கோஷங்கள் முழங்க, ஆகம விதிப்படி ஹோமங்களும், கலச பூஜைகளும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்கு பின், வீர மா காளி அம்மனுக்கு மஹா ஆர்த்தியும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், மதிய விருந்திற்கு ஏற்பாடு ...