Tamil News - One India

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி மீண்டும் உயர்வு: விலையில் மாற்றமில்லை

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை உயர்த்தியது மத்திய அரசு. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 2.25. டீசலுக்கு ஒரு ரூபாய் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான உற்பத்தி வரி கடந்த மாதம் ரூ 1.50 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயராது என தகவல் வெளியாகியுள்ளது.

மோடியை கடுமையாக விமர்சிக்காதீர்கள்... வைகோ, ராமதாசுக்கு மீண்டும் தமிழிசை வேண்டுகோள்

சென்னை: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, ராமதாஸ் உள்ளிட்டோருக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுகவும் அங்கம் வகிக்கிறது. ஆனபோதும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடி குறித்து வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த ரோதக் சகோதரிகளுக்கு ஊர் ஊராக போய் இளைஞர்களை அடிப்பதுதான் வேலையோ....??

டெல்லி: ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில் தங்களைச் சீண்டிய இளைஞர்களை சரமாரியாக அடித்து பரபரப்பை ஏற்படுத்தி ஹரியானா மாநில அரசிடமிருந்து பரிசையும் பெற்று விட்ட சகோதரிகள் இருவர், ஏற்கனவே கடந்த மாதமும் இதேபோல சாலையில் வைத்து ஒரு இளைஞரை அடித்தது போன்ற வீடியோ வெளியாகி இவர்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஹரியானா

"யுடர்ன் அரசு" : பா.ஜ.க.வுக்கு எதிராக டெல்லியில் ராகுல் தலைமையில் போராட்டம்!!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மோடி அரசை 'யுடர்ன்' அரசு என்று சாடினார் ராகுல் காந்தி. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசால் வெளியிட்ட மோடி அரசுக்கு எதிரான யுடர்ன் என்ற துண்டுப் பிரசுரத்துடன் இன்று

கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவியை போஸ்டர் அடித்து கேவலப்படுத்திய கணவன்!

கிருஷ்ணகிரி: கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடிய மனைவியை அசிங்கப்படுத்த கணவன் குடும்பத்தார் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் இந்த போஸ்டர். கிருஷ்ணகிரி அருகே ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், கள்ளக் காதலர்களுக்கு சவுக்கடி கொடுப்பதாக உள்ளது. குறிப்பிட்ட அந்த போஸ்டரில், ஓடிப்போன பெண்ணின் படம், பெயர், அவரின் அப்பா பெயரை போட்டு தெருத்தெருவாக ஒட்டியுள்ளனர்.

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் தமிழகத்தில் வங்கி சேவை முற்றிலுமாக முடங்கியது!

சென்னை:தமிழகம், புதுவை உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இன்று வேலைநிறுத்தம் செய்ததால் வங்கிப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சபரிமலையில் வருமானம் ”கொட்டுது”: 13 நாட்களில் ரூ. 44 கோடி வசூல்

சபரிமலை: சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் வருமானம் 13 நாட்களில் ரூபாய் 44 கோடி ரூபாயை கடந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 9 கோடி ரூபாய் அதிகமாகும். சபரிமலையில் மண்டல காலம் தொடங்கிய நவம்பர் 17 முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டின் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

எச்ஐவி வைரசின் வீரியம் குறைந்து வருகிறது.. எய்ட்ஸ் பரவலும் குறைகிறது: ஆய்வில் மகிழ்ச்சி தகவல்

லண்டன்: எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்ஐவி வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எய்ட்ஸ் என்னும் உயிர் கொல்லி நோயை எச்ஐவி என்ற வைரஸ் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்காவிலுள்ள எய்ட்ஸ் பாதித்த 2 ஆயிரம் பெண்களிடம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வுக்குழு சார்பில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், எச்ஐவி வைரசின் வீரியம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

என்னம்மா அங்கே சத்தம்???.. அரண்டு போன அமெரிக்கா, இங்கிலாந்துக்காரர்கள்!

லண்டன்: உலகுக்குத் தெரியாத அமெரிக்க ரகசியங்கள் எக்கச்சக்கம்.. அதில் ஒன்றுதான் அரோரா... நம் ஊர்க்காரப் பெயரா இருக்கேன்னு குழப்பிக்காதீங்க.. இது 'Aurora'. இந்தப் புனை பெயரில் அமெரிக்கா ஒரு உளவு விமானத்தை தயாரித்து வருவதாக இன்று நேற்றல்ல, 1989ம் ஆண்டிலிருந்தே ஒரு தகவல் உலா வந்தபடிதான் உள்ளது. ஆனால் இதுவரை இப்படி ஒரு விமானம் இருப்பதாக அமெரிக்கா

ரஷியா அருகே தென்கொரிய கப்பல் மூழ்கி விபத்து: 50 மீனவர்கள் பலி?

சியோல்: ரஷ்யா அருகே தென்கொரிய கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 50 மீனவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகிறது. தென்கொரியாவை சேர்ந்த ஒரு தனியார் மீன்பிடி கப்பல் ஒன்று ரஷியாவின் பெர்ரிங் கடல் பகுதியில் ‘போலாக்' உள்ளிட்ட ரக மீன்களை பிடிக்க சென்றது. அதில் அவர்களில் 35 இந்தோனேசியர்கள், 13 பிலிப்பைன்ஸ்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி 86 சதவீதம் முடிந்துள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் திட்டமிட்டப்படி ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் 86 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மீதம் உளள பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு திட்டமிட்டபடி வரும் ஜனவரி

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

சென்னை: சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. 38 லாரிகளுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்வோம் என சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த பேச்சில் எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்தன. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம்,

வங்கிக் கடன்களுக்கான வட்டியில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று அறிவித்தார். 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், தேசிய

ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனராக 'டம்மி பதவிக்கு' தூக்கி அடிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் சுங்கத்!!

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் அற்ற ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மோகன்

சாலை தடுப்பில் மோதிய பஸ் தீக்கிரை: பயணிகள் மூவர் உயிர் ஊசல்

பெங்களூரு: சாலை சாலை தடுப்பில் தனியார் பஸ் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிந்தாமணி நகரில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று மதியம் வந்து கொண்டிருந்தது. லட்சுமிவெங்கடேஷ்வரா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பஸ் பெங்களூரு நகரின்

கருப்புப் பண விவகாரத்தில் ப. சிதம்பரம் பாதையை பின்பற்றுகிறது மோடி அரசு: ராம்ஜெத்மலானி சாடல்!

டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் பாதையைத்தான் தற்போதைய மோடி அரசும் பின்பற்றுகிறது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சாடியுள்ளார். இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானாலும் கருப்புப் பண விவகாரத்தில் நேர்மையாக, முழு ஈடுபட்டுடன் செயல்படவில்லை. உச்சநீதிமன்ற

டீக்கடை வேலை முதல் ரூ.3.5 கோடி கார்கள் வரை.. ஆசிரியரை ஆள்வைத்து அடித்த அருளானந்தத்தின் பின்னணி

சென்னை: டீக்கடையில் வேலை பார்த்த அருளானந்தம் சதுரங்க வேட்டை மோசடிகளின் மூலம், மூன்றரை கோடி ரூபாய் விலையுள்ள கார் வாங்கும் அளவுக்கு வசதி வாய்ப்பை பெருக்கிக் கொண்டவராகும். பணம் பத்தும் செய்யும் என்ற சித்தாந்தத்தின் நம்பிக்கை வைத்ததன் விளைவு இப்போது மகனை அடித்த ஆசிரியரை ஆள் வைத்து அடித்து கம்பி எண்ணும் நிலைக்கு அவரை கொண்டு சென்றுள்ளது.

ஆப்கானிஸ்தான்: "பறவைகள் தற்கொலைப் படை"யை ஏவும் தலிபான்கள்!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய போர் வியூகமாக மிகப் பெரிய பறவைகளை தற்கொலைப் படைகளாக அனுப்பி தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற உள்ளன. இந்த நிலையில் அண்மைக்காலமாக தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் படைகள் மீது

கிறிஸ்துவர்-முஸ்லிம்கள் ராமரின் பிள்ளைகள்: மத்திய அமைச்சர் சாத்வி பேச்சு- ராஜினாமா செய்ய கோரிக்கை!!

டெல்லி: நாட்டில் வாழும் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருமே ராமரின் பிள்ளைகள்.. இதை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று மத்திய தொழில் மற்றும் உணவு துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் சாத்வி ஜோதி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. டெல்லியில்

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 10 சிறுவர்கள் தப்பியோட்டம்.. ஒருவன் சிக்கினான்.. மதுரையில்!

மதுரை: மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறையிலிருந்து 10 குற்றவாளிகள் நள்ளிரவில் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தப்பியோடிய 10 சிறுவர்களில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட சிறுவன் மதுரை பி.பி குளத்தைச் சேர்ந்தவன் என கூறப்படுகிறது. மேலும் 9 பேரை தெப்பக்குளம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த

நாளை 'தாயகம்' திரும்புகிறார் விஜயகாந்த்....!

சென்னை: மகன் படப்பிடிப்பை மேற்பார்வையிடுவதற்காக மலேசியாவுக்குப் போயிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சென்னை திரும்புகின்றார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த சில நாட்களிலேயே அதாவது நவம்பர் 7ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியாவுக்குப் புறப்பட்டுப்

சமையல் எரிவாயு மானியத்தைப் பெற... மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

சென்னை: மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் சேருவதற்கு மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நேரடி சமையல் எரிவாயு மானிய திட்டம், தற்போது நாட்டிலுள்ள 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில், இந்தத் திட்டம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி

முன்னாள் மத்திய அமைச்சர், மகாராஷ்டிர முதல்வர் ஏ.ஆர். அந்துலே மரணம்

மும்பை: முன்னாள் மகாராஷ்டிர மாநில முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.ஆர். அந்துலே இன்று மும்பையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 85. மனைவி நர்கீஸ், மகன் நவேத், மகள்கள் நீலம், ஷப்னம், முபீனா ஆகியோர் அவருக்கு உள்ளனர். கடந்த சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார் அந்துலே. அவருக்கு சிறுநீரக

வகுப்பறையில் கணினி ஆசிரியையை தாக்கி காதைக் கிழித்த மாணவர்... சென்னையில் பரபரப்பு

சென்னை : சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ மாணவர் ஒருவர் கணினி ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியதில் ஆசிரியியையின் காது ஜவ்வு கிழிந்து போனது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார் புளியந்தோப்பு வ.உ.சி.

'அலை பாய்வதில்' அமெரிக்கர்களும் நம்மை போலத்தான்.. கிம்மைக் காண முண்டியடித்த அமெரிக்க வீரர்கள்!

அபுதாபி: அபுதாபியில் முகாமிட்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் யுஎஸ்எஸ் சான்டியாகோ போர்க்கப்பலுக்கு கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியாவின் விசிட் அடித்து அமெரிக்க கடற்படை வீரர்களைச் சந்தித்து அளவளாவினார். அப்போது கிம்முடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும், செல்பி எடுத்துக் கொள்ளவும், கை குலுக்கவும், பேசவும் வீரர்கள் அலைமோதியதால் கப்பலே சற்று தள்ளாடித்தான் போனது. கலர்புல் டிரஸ், கண்களை மறைக்கும்

ராஜா பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன், பாஜக கூட்டணியிலிருந்து வைகோ விலகலாம்... கருணாநிதி

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மிரட்டும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரது பேச்சால் பாஜக கூட்டணியிலிருந்து வைகோ விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். வைகோவை ராஜா மிரட்டியதைக் கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும்

தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம், 'மக்களின் தலைமைச் செயலாளர்' தொடர்கிறார்..!

சென்னை: தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ்தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரே தவிர, 'மக்களின் தலைமைச் செயலாளர்' ஷீலா பாலகிருஷ்ணன் இன்னும் அதே பதவியில்தான் தொடருகிறார். தமிழக அரசின் 42வது தலைமைச் செயலராக கடந்த மார்ச் மாதம் மாதம் மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டார். இன்று அவர் மாற்றப்பட்டு அண்ணா குடிமையியல் பயிற்சி மையத்துக்கு (ஐ.ஏ.எஸ் அகாடமி) மாற்றப்பட்டுள்ளார்.

4000 கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி!

புவனேஸ்வர்: அக்னி 4 ஏவுகணை தொடர்ந்து 3 முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்று டிஆர்டிஓ நிறுவனம் மீண்டும் ஒரு பரிசோதனையை நடத்தியுள்ளது. ராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு நடத்தப்படும் இறுதிக் கட்ட பரிசோதனையாகும் இது. தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணையான இது, 4000

மத்திய அரசிடம் அனுமதி

மத்திய அரசிடம் அனுமதி 'ஆலோசகர்' ராமானுஜத்துக்கான அரசு ஆணையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் சலுகைகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு டி.ஜி.பி. அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள ஓர் அறையை ஒதுக்கியிருக்கிறார்கள். அசோக்குமாருக்கு மேல் 'சூப்பர் டி.ஜி.பி'-யாக ராமானுஜம் செயல்படுவார் என்பதைத்தான் இது காட்டுகிறது. டி.ஜி.பி அந்தஸ்திலான இந்த நியமனத்துக்கு முறைப்படி மத்திய அரசிடம் அனுமதி வாங்கப்பட்டதா

'மக்களின் முதல்வர்', 'மக்களின் தலைமைச் செயலாளர்', 'மக்களின் டிஜிபி'.. இப்படி பண்றீங்களேம்மா!...

சென்னை: சினிமாவில்தான் ஹீரோவுக்கு சண்டை காட்சிகளிலும், ரிஸ்க்கான காட்சிகளிலும் டூப் போடுவார்கள். ஆனால் தமிழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களையே டம்மியாக்கிவிட்டு அவர்களுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்தான் அதிகம் செயல்படுவதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வராக