Entertainment - Tamil-Media

பாகிஸ்தானில் புரட்சி காரணமாக பிரதமர் பதவி விலகும் வாய்ப்பில்லை!இராணுவம்

பாகிஸ்தானில் கடந்த இரு வாரங்களாகப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் மதகுரு காத்ரி தலைமையில் தீவிர மக்கள் புரட்சி நடைபெற்று வருகின்றது.


Read more ...

ISIS வசம் டிரோன்?:இஸ்லாமிய தேசப் போராளிகள் உலகம் முழுதும் பரவும் அபாயம்!:அமெரிக்கா

ஈராக்கிலும் சிரியாவிலும் தமது நிலைகளை வலுப்படுத்தி வரும் ISIS போராளிகள் உலகம் முழுதும் பரவும் அபாயம் இருப்பதாகவும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்த சர்வதேசத்தின் கூட்டு ஒத்துழைப்பு அவசியம் எனவும் இதில் அரபு நாடுகளை ஒருங்கிணைப்பது கடினம் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜப்பானியப் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் 07ஆம் திகதி இலங்கை வருவார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

நஸ்ரியா-பஹத் திருமண ட்ரெயிலர் வீடியோ

நஸ்ரியா-பஹத் திருமண வீடியோ ட்ரெயிலர் வெளிவந்துள்ளது. அதன் இணைப்பு இங்கே


Read more ...

ஸ்மார்ட் கடிகாரம் சாம்சங்கின் Gear S 3G

சாம்சங்க் நிறுவனம் ஸ்மார்ட் கடிகார தயாரிப்புக்களில் இறங்கியுள்ள போதும்


Read more ...

நேபாள் செல்லும் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

நேபாளில் நடைப்பெற இருக்கும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு செல்லும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,அங்கு வரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரை சந்திப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Read more ...

வங்கிகளின் வாராக்கடன்கள் அச்சப்படும் நிலையில் இல்லை:ரகுராம் ராஜன்

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் அளவு கவலைக்குரியதாக இருந்தாலும், அச்சப்படும் நிலையில் இல்லை என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.


Read more ...

வங்கிகளின் வாராக்கடன்கள் அச்சப்படும் நிலையில் இல்லை:ரகுராம் ராஜன்

துத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் அளவு கவலைக்குரியதாக இருந்தாலும், அச்சப்படும் நிலையில் இல்லை என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.


Read more ...

அரசு அலுவலகக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்:இம்ரான்கான்

அரசு அலுவலகக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்று போராட்டக்காரர்களுக்கு இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Read more ...

மாணவர்களின் கேள்விகளுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பதில் அளிக்கவுள்ளார் பிரதமர்!

ஆசிரியர் தினத்தன்று குறிப்பிட்ட சில பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பதில் அளிக்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்:மீனவளத்துறை அதிகாரிகள்

இந்திய எல்லையைத் தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் மீனவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Read more ...

சந்தானத்தின் , ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’

சரிவுக்கு வந்துவிட்டார் சந்தானம். நாளொன்றுக்கு பதினைந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு இப்போது


Read more ...

நவநீதம்பிள்ளை: இலங்கையின் பெரும் தலைவலி!

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடியாக இருந்து வந்த நவநீதம்பிள்ளை, தான் வகித்து வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியிலிருந்து நேற்று (ஓகஸ்ட் 31, 2014) ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.


Read more ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு!:உச்ச நீதிமன்றம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.


Read more ...

மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற நிலையில் தொழில் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடுகள் குவிகின்றன!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற நிலையில் தொழித்துறை மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடுகள் குவிகின்றன என்று, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.


Read more ...

திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு வீடு!:வெங்கைய நாயுடு

தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரும் முயற்சிகளைத் தொடங்கும் என்று, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.


Read more ...

நாடு முழுவதும் சிறைகளில் உள்ள இரண்டரை லட்சம் விசாரணைக் கைதிகள் விடுதலையாகும் வாய்ப்பு!

நாடு முழுவதும் சிறைகளில் உள்ள இரண்டரை லட்சம் விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஐ.நா. சபை அமர்வுகளின் போது மஹிந்த – மோடி சந்திக்கலாம்(?)

ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வுகளின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்புப்பொன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதில், பொது விவாதம் 24ஆம் திகதி இடம்பெறும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 25ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.

இந்த நிலையில், நரேந்திர மோடியும், மஹிந்த ராஜபக்ஷவும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Read more ...

பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல் விலையையும் குறைக்க மத்திய அரசு திட்டம்!

பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இதைத் தொடர்ந்து டீசல் விலையையும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

கிராம மக்கள்- மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது: ஹர்ஷவர்தன்

கிராம மக்கள், மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கவலை தெரிவித்துள்ளார். 


Read more ...

ஈழத்தமிழர்களை கைவிட மாட்டோம் என்று மோடி உறுதியளித்தார்: இரா.சம்பந்தன்

ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றும், ஈழத்தமிழர்களை என்றைக்குமே கைவிட மாட்டோம் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரித்தானியப் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் இலங்கை குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் விசாரணை!

இலங்கையின் குடிவரவு- குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில், இலங்கை இராணுவம் குறித்த தகவல்களை சேகரித்த முயன்ற இந்தியரான- பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 


Read more ...

கிழக்கு உக்ரைன் குழப்பத்தில் 2600 பேர் வரை பலி!:ஐ.நா

வெள்ளிக்கிழமை ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றின் பிரகாரம் கிழக்கு உக்ரைனில் வெடித்துள்ள குழப்ப நிலை இதுவரை 2600 பொது மக்களைப் பலி கொண்டிருப்பதாகவும் இதில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது வெளிநாட்டைச் சேர்ந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

இன்று 40 வருடங்களுக்கு முன் பிறப்பு ஆதாரத்தை தொலைத்த 127 வயதுப் பெண்மணியின் பிறந்த நாள்!

மெக்ஸிக்கோவைச் சேர்ந்த லெயான்ட்ரா பெசெர்ரா லும்ப்ரெராஸ் (Leandra Becerra Lumbreras) என்ற பெண்மணி இன்று தனது 127 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.


Read more ...

ISIS முற்றுகையிட்டிருந்த அமெர்லி நகரிலிருந்து பொதுமக்களை வான் வழியாக மீட்டது ஈராக் படை

கடந்த இரு மாதங்களாக சுமார் 15 000 சிறுபான்மை ஷியா துருக்கி மக்கள் வாழும் அமெர்லி நகரிலிருந்து குறிப்பிட்டளவு மக்களை வான் வழியாக மீட்டுள்ளது ஈராக் படை.


Read more ...

பாகிஸ்தான் புரட்சியில் மூவர் பலி!:300 பேர் காயம்:பிரதமர் நவாஸ் ஷெரீஃப் லாகூருக்குத் தப்பிச் சென்றார்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சித் தலைவர்களான இம்ரான் கான் மற்றும் காத்ரி ஆகியோர் நடத்தும் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.


Read more ...

கியோட்டோ நகரில் மோடி

தனது ஜப்பான் சுற்றுப் பயணத்தில் மோடி தனது இன்றைய இரண்டாம் நாள் விஜயமாக, ஜப்பானின் கலாச்சார தலைநகரான கியோட்டோவுக்கு சென்றுள்ளார்.


Read more ...

90 ODI வெற்றி : அசாருதீனின் சாதனையை சமப்படுத்திய தோனி

இந்திய கிரிக்கெட் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளைத் தேடித்தந்தவர் எனும் பெருமை இதுவரை மொஹ்மட் அசாருதீனுக்கே இருந்து வந்தது.  தற்போது அப்பெருமையை சமப்படுத்தியுள்ளார் மகேந்திர சிங் தோனி.


Read more ...

பொது பல சேனா நாட்டில் இரத்த ஆறு ஓட வழி செய்கிறது: ரிஷாட் பதியுதீன்

நாட்டில் நீடித்து வந்த மோதல்கள் முடிவுக்கு வந்து மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி வரும் நிலையில், இனங்களுக்கிடையில் குரோதங்களை ஏற்படுத்தி மீண்டும் இரத்த ஆறு ஓட வைக்கும் முயற்சிகளில் பொது பல சேனா ஈடுபடுகின்றது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு; ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நாளை முதல் ஷெயிட் அல் ஹூசைன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக கடந்த ஆறு வருடங்களாக கடமையாற்றிய ‘நவிபிள்ளை’ என்று ஊடகங்களினாலும், இராஜதந்திர மட்டங்களிலும் அழைக்கப்பட்ட நவநீதம்பிள்ளை இன்று (ஓகஸ்ட் 31, 2014) ஞாயிற்றுக்கிழமையோடு தனது பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கிறார். 


Read more ...

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


Read more ...

இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா : சுழற்பந்துவீச்சு கைகொடுத்தது

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அலெஸ்டீர் கூக் 44 ஓட்டங்களையும், புட்லர் 42 ஓட்டங்களையும் எடுத்தனர்.


Read more ...

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - கௌதம சித்தார்த்தன்

எதிர்கால ஆயுத உற்பத்தி, அவற்றின் வியாபார உத்தி, நோக்கம், விளைவு என்பன குறித்த பார்வையாக, கட்டுரையாளர் கௌதம சித்தார்த்தனின் இக்கட்டுரை, உலகின் பிரபலமான இணையத்தளங்களில் பிரசுரமாகியிருந்தது. ஆங்கில மொழியிலான அக்கட்டுரையின் தமிழாக்க வடிவம் இது. மானுட நேசிப்பு மிக்கவர்கள் தவறாது வாசிக்கவும், சிந்திக்கவும் வேண்டிய இக்கட்டுரையினை கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம். கட்டுரையின் உள்ளடக்கங்களுக்கு கட்டுரையாசியரே பொறுப்பாவார்-ஆசிரியர் குழு, 4TamilMedia


Read more ...

இராஜதந்திரப் போர் எனப்படுவது; பின்நோக்கிப் பாய்வதல்ல! (நிலாந்தன்)


இந்திய பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13வது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல சலிக்கத் தொடங்கி விட்டார்கள். 


Read more ...

உறுதிமொழி எதனையும் மோடி வழங்கவில்லை; த.தே.கூ பொய்யுரைக்கிறது: சம்பிக்க ரணவக்க

இந்தியாவுக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி மொழிகள் எதனையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருவதாக தெரிவித்துள்ளார். 


Read more ...

சிரிய உள்நாட்டுப் போரைக் கண்டித்த ஐ.நா அகதிகளுக்கான விசேட தூதர் ஏஞ்சலினா ஜூலி

பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையப் பணியகத்தின் விசேட தூதருமான ஏஞ்சலினா ஜுலி சிரிய உள்நாட்டுப் போரை வன்மையாகக் கண்டித்துள்ளார்.


Read more ...

சுரங்க ரெயில் நடை பாதையில் உணவு : வினோத விளம்பரம்

சுரங்க ரெயில் நடை பாதையை துப்பரவு செய்தபின்னர் அதன் மீது உணவைக் கொட்டி உண்ணும் விளம்பர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


Read more ...

பப்புவா நியூகினியாவின் டவுர்வுர் எரிமலை கடும் சீற்றம்!:விமானப் பயணம் பாதிப்பு

நேற்று வெள்ளிக்கிழமை முதல் பப்புவா நியூ கினியாவின் டவுர்வுர் எரிமலை கடும் சீற்றமடைந்து வானில் மிகச் செறிவுடைய புகை மற்றும் சாம்பலைக் கக்கத் தொடங்கியிருப்பதால் அருகே இருந்த குடிமக்கள் அகற்றப் பட்டும் விமானப் பாதைகள் பாதிக்கப் பட்டும் உள்ளன.


Read more ...

காணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியாவில் ஒன்று கூடல்; அரசாங்கத்திடம் கோரிக்கை மனு கையளிப்பு!


சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று (ஓகஸ்ட் 30) வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்று கூடியுதுடன், தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி அரசாங்கத்திடம் கோரிக்கை மனுவையும் கையளித்துள்ளனர். 


Read more ...

ZMapp எனும் எபோலா தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாகப் பரிசோதனை

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற ஆட்கொல்லித் தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தாக (Vaccine) ZMapp என்று பெயரிடப் பட்ட மருந்து ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குரங்குகளிடம் பரிசோதித்து இருப்பதாக தி இன்டிபென்டன்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

அல்ஜீரியாவில் உக்ரைன் சரக்கு விமானம் விபத்தில் சிக்கியது!:7 பேர் பலி

இன்று சனிக்கிழமை காலை உக்ரைன் நாட்டின் சரக்கு விமானம் ஒன்று தென்கிழக்கு அல்ஜீரியாவின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 7 பேரும் கொல்லப் பட்டிருப்பதாக அல்ஜீரிய ஊடகம் அறிவித்துள்ளது.


Read more ...

ஆப்கானிஸ்தான் புலனாய்வு மையத்தைத் தாக்கிய போராளிகள்!:6 பேர் பலி

இன்று சனிக்கிழமை காலை கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள புலனாய்வு ஏஜன்ஸி ஒன்றினைத் துப்பாக்கி தாங்கிய போராளிகள் தாக்கியதில் 6 பேர் கொல்லப் பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Read more ...

இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து தப்பிக்க முயல்கிறது: சர்வதேச மன்னிப்பு சபை

காணாமற்போனோருக்கான நீதியையும், உண்மையையும் பெற்றுக்கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாமதப்படுத்தும் தந்திரோபாயங்களைக் கையாள்வதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்பு சபை, இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

எனக்கு அரசியல் தெரியாது:நடிகர் விஷால்

எனக்கு அரசியல் தெரியாது என்றும், அப்படி நான் அரசியலில் இணைய வேண்டும் என்றால் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியல் படிக்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


Read more ...

உள்ளாட்சித் தேர்தலை திமுக புறக்கணிக்கிறது : கருணாநிதி அறிவிப்பு

நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

ஆம் ஆத்மியை இரண்டாக உடைத்தால் டெல்லி முதல்வர் பதவி : பாஜக மீது குமார் விஸ்வாஸ் புகார்

ஆம் ஆத்மிக் கட்சியை இரண்டாக உடைத்தால் டெல்லி முதல்வர் பதவியை வழங்குகிறோம் என்று தம்மிடம் பாஜக பேரம் பேசியதாக, ஆம் ஆத்மிக கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ், பாஜக மீது புகார் கூறியுள்ளார்.


Read more ...

அழைப்பு வரும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் கூட்டணிக்குத் தயார்:மம்தா

அழைப்பு வரும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Read more ...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவிகிதமாக அதிகரிப்பு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும்,  மத்தியில் மோடி தலைமையிலான நிலையான ஆட்சி இருக்கும் என்றும் நம்பிக்கை அதிகரித்துள்ளது தான் இதற்கு காரணம் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Read more ...

பிரிட்டனுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

பிரிட்டனுக்கு அவ்வளவாகத் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்கிற நிலை மாறி, தற்போது அதிபயங்கர தீவிரவாத அச்சுறுத்தல் பிரிட்டனுக்கு உள்ளது என்று  அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

நக்சல் தலைவர்களை அடையாளம் காட்டினால் ரூ 1 கோடி - ரிசர்வ் படை

நக்சல் தலைவர்களை அடையாளம் காட்டிக் கொடுத்தாலோ, அவர்களைப் பற்றிய துப்புக் கொடுத்தாலோ ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ரிசர்வ் படைத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Read more ...

ராஜஸ்தான் எல்லையில் 15 தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி?

ராஜஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் 15 பேர் ஊடுருவ முயற்சித்து உள்ளனர் என்று மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கைத் தகவல் அனுப்பியுள்ளது.


Read more ...

வருங்கால தொழில்நுட்பம் 9:வண்ணங்களை கேட்கும் மனிதர்- சைபோர்க் கலைஞர்!

அணி கணிணிகளின் (வியரபில் கம்ப்யூட்ட்டர்ஸ்) சாத்தியங்களை அறியும் போது ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்று வரலாம். சென்சார் திறன் கொண்ட கைப்பட்டைகளையும், காதணிகளையும், ஆடைகளையும் அணிந்து கொள்வதன் மூலம் நமது செயல்பாடுகளையும் உடல் இயக்கத்தையும் கண்காணிக்கலாம், தகவல் சேகரிக்கலாம், ஆபத்துகளையும் நோய்க்கூறுகளையும் முன்கூட்டியே அறியலாம். இன்னும் பல ஆச்சர்யங்களும் அற்புதங்களும் அணி கணிணிகள் மூலம் சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது தான். ஆனால் அணி கணிகளை விட ஆச்சர்யமளிக்க கூடியதாக சைபோர்க் கருத்தாக்கம் இருப்பதை கடந்த வாரம் பார்த்தோம்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று 5 நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார். இவருடன் 15 பேர் அடங்கிய குழுவும் சென்றுள்ளது.


Read more ...

மாணவர்களை துன்புறுத்தக் கூடாது!:மெட்ரிகுலேசன் கல்வி இயக்ககம்

மாணவர் செல்வங்களை அடித்து கடுமையான சொற்களால் திட்டித் துன்புறுத்தக் கூடாது என்று மெட்ரிகுலேசன் கல்வி இயக்ககம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.


Read more ...

அரசியல் கட்சிகள் நிதியை வங்கிகளில்தான் டெபாசிட் செய்ய வேண்டும்:தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் நிதியை வங்கிகளில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Read more ...

அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே, நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் பிரார்த்தனை ஆரம்பம்!

காணாமற்போனவர்களை கண்டுபிடிக்கக் கோரி அவர்களின் உறவினர்களினால் தீபங்கள் ஏற்றி தேங்காய் உடைத்து விசேட பிரார்த்தனை நிகழ்வு மன்னார், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 


Read more ...

விநாயக சதுர்த்தி பெருவிழா : கண்கவர் புகைப்படங்கள்

நேற்றயதினம் விநாயக சதுர்த்தி பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.


Read more ...

நாட்டின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தேவை: டி.எம்.ஜயரட்ண

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லை என்றால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க முடியாது போகும். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய அவசியமானது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார். 


Read more ...

மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றிய 6000 பேருக்கு வேலை இழப்பு!

இவ்வருடம் அடுத்தடுத்து இரு மலேசியன் ஏர்லைன்ஸின் சர்வதேச பயண விமானங்கள் விபத்தில் சிக்கி அவற்றில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்ததை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிகவும் நட்டத்துடன் இயங்குவதால் சமீபத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 6000 பேரை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது அந்நிறுவனம்.


Read more ...

சிரியாவில் தாம் கைப்பற்றிய 250 இராணுவ வீரர்களை ISIS கொலை செய்ததாகத் தகவல்!

கடந்த வாரம் சிரியாவின் டாப்கா விமானத் தளத்தைக் கைப்பற்ற சண்டையிட்ட போது பின்வாங்கிய 150 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உட்பட 250 துருப்புக்களை சமீபத்தில் ISIS போராளிகள் வரிசையாக உள்ளாடையுடன் மண்டியிட வைத்து சுட்டுக் கொன்றிருப்பதாகவும் இதற்கு சான்றாக ஓர் வீடியோ பதிவு இணையத்தில் வெளியிடப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

மறக்க இயலா கானங்கள்: “அடிப்பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை....“

 

1978 இல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த “முள்ளும் மலரும் என்ற படத்திற்காக ஜென்சி பாடிய பாடலிது. இளையராஜாவின் எந்த பாடலை மறந்தாலும் இப்பாடலை யாருமே மறக்கமாட்டார்கள்.


Read more ...

வவுனியாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புலிக்குட்டி இறந்த நிலையில் மீட்பு!

வவுனியா குருமன்காடு பகுதியில் வீடொன்றில் இறந்த நிலையில் புலிக்குட்டி ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 


Read more ...

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் கமலேந்திரனுக்கு பிணை!

கொலை வழக்கொன்றில் பிரதான குற்றவாளியாக பொலிஸாரினால் முன்னிறுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாக பிணையில் செல்ல முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ் மேலதிக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கியுள்ளது. 


Read more ...

லிங்காவிற்கு பிறகு ரஜினி படத்தை இயக்கும் ஐஸ்வர்யா

லிங்கா படம் முடிந்த பின்பு ரஜினி எந்திரன் பார்ட் 2 வில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்க, ரஜினி எடுத்திருக்கும் முடிவு வேறொன்றாக இருக்கிறது.


Read more ...

காணாமற்போனோரின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து பிராத்தனை!


மோதல் காலங்களில் காணாமற்போன உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (29 ஆம் திகதி) முதல் 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக தேங்காய் அடித்து பிரார்த்தனை செய்யவுள்ளதாக வடக்கு இளைஞர் வலையமைப்பின் இணைப்பாளர் எஸ்.பிரதீப் தெரிவித்துள்ளார். 


Read more ...

புலிகளின் பிரதிநிதிகளாக எம்மைக் காட்டி அரசாங்கம் பேச்சுக்களை தட்டிக்கழிக்கிறது: எம்.ஏ.சுமந்திரன்

எம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக காட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை தட்டிக் கழித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மலையகத் தமிழர்களும் உள்ளடக்கப்பட வேண்டும்: சமூக ஆர்வலர்கள்!

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் போது அதில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் எண்ணங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தரப்பு தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Read more ...

மஹிந்த அரசு பேச்சுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு பின்னால் சர்வதேச அழுத்தம் இருக்கிறது: த.தே.கூ

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைளை தட்டிக்கழித்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியிருப்பதற்குப் பின்னால் சர்வதேச அழுத்தம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

புதியதோர் உலகம் செய்வோம் - விமர்சனம்

அஞ்சான் வந்த கையோடு வந்திருக்கிறது இந்த லஞ்சான்!


Read more ...

நமது சூரிய மண்டலம் அதிவெப்பமுடைய வாயுக் குமிழிக்குள் அமைந்துள்ளது:விஞ்ஞானிகள்

நீங்கள் எப்போதாவது ஒரு குழிழிக்குள் (bubble) இருப்பது போன்று கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஆனால் இது கற்பனையல்ல! நிஜம்.


Read more ...

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது!

இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் விநாயகர் சதுர்த்தி தினத்தை வெகு கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


Read more ...

திமுகவில் 80 சதவிகிதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்:முக.ஸ்டாலின்

இனி திமுகவில் 80 சதவிகிதம் இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்று, திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

ஆசிரியர்கள் தினம் இல்லையா?

நாடு முழுவதும் மாமேதை ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது பிறந்த நாளான செப்டெம்பர் மாதம் 5ம் திகதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் மத்திய அரசு குரு உத்சவ் நாள் என்று செப்டெம்பர் மாதம் 5ம் திகதியை அறிவித்துள்ளது.


Read more ...

விமான சேவையை சரிவர செய்யாததில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது!

இந்தியாவில் விமான சேவையை சரிவர செய்யாத விமானங்களின் பட்டியலில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கர்நாடக சட்டப்பேரவையில் தனியார் தொலைகாட்சி சேனல்களுக்கு அனுமதி இல்லை!

கர்நாடக சட்டப்பேரவையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைப்பெறும் காலங்களில் தனியார் தொலைகாட்சி சேனல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டெம்பர் 20ம் திகதி தீர்ப்பு!

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வருகிற செப்டெம்பர் மாதம் 20ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.


Read more ...

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளித் திருவிழா

கிழக்கு ஸ்பெயினின் பியுனோல் நகரில் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து வரும் வருடாந்த தக்காளித் திருவிழா நேற்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.


Read more ...

எபோலா ஆட்கொல்லி நோய் பரவும் வீதம் அதிகரிப்பு!:பலி எண்ணிக்கை 1550 ஐ தாண்டியது!

எபோலா ஆட்கொல்லி தொற்று நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவும் வீதம் அதிகரித்து வருவதாகவும் இந்த நோயால் சிகிச்சைப் பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 1552 ஐ எட்டி விட்டதாகவும் உலக சுகாதாரத் தாபனம் (WHO) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி!:காத்ரி

பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கடந்த இரு கிழமைகளாக முன்னால் கிரிக்கெட் வீரரும் PTI கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மற்றும் மற்றும் மதகுருவும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் (PAT) கட்சியின் தலைவர் காத்ரி ஆகியோர் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இஸ்லாமாபாத்திலுள்ள பாராளுமன்றத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தி வந்தனர்.


Read more ...

நமது வெளியுறவுக் கொள்கை நீதியை அடிப்படையாகக் கொண்டது:ISIS ஐ சாடிய மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமரான நஜீப் ரஷாக் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் எல்லாத் துறையிலும் நீதியைப் பக்க பலமாகக் கொண்டே இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.


Read more ...

விநாயகரின் அவதாரங்கள்

இந்தியாவின் பல பாகங்களிலும், தமிழகத்திலும், உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களும், விநாயகசதுர்த்தி நன்நாளை கொண்டாடி வருகின்றனர்.


Read more ...

மஹிந்த தலைமையிலான கொடுங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: மனோ கணேசன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதிகளை மீறுவதில் உலக சாதனை செய்துள்ளது. உள்நாட்டில் நமது மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அது உலக அரசுகளை ஏமாற்றுகிறது. இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு எவரையும் விட தமிழ், முஸ்லிம் மக்களுக்கே அதிக தேவை உள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் லெனின் எம் சிவமின் A Gun & A Ring திரையீடு!

புலம்பெயர் தமிழர்களின் சினிமா அடையாளங்களில் ஒன்றாக கொள்ளப்படும் இயக்குனர் லெனின் எம் சிவமின் A Gun & A Ring திரைப்படம் கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. 


Read more ...

அமரகாவியம், காவியத்தலைவன் பிரஸ் மீட் வீடியோ

அமரகாவியம், காவியத்தலைவன் பிரஸ் மீட் வீடியோ


Read more ...

சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் வாரச் சந்தை அமைக்கப்படும்: சைதை துரைசாமி

சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் வாரச்சந்தை அமைக்கப்படும், இன்றைய மாமன்றக் கூட்டத்தில், மாநகர மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். 


Read more ...

மானிய விலை சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் மாற்றம்:மத்திய அமைச்சரவை

மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.


Read more ...

பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஆதரவு!

இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கும் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழகத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

சிவகார்த்திகேயனுக்கு தமன்னா ஜோடி

ஓட்டப்பந்தயத்தில் முள்ளு ஷு முக்கியம் என்பதை நன்றாகவே உணர ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


Read more ...

கொடி அணிவகுப்பையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்!

நேற்று மாலை நடைப்பெற்ற இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடனான கொடி அணிவகுப்பு பேச்சுவார்த்தையையும் மீறி, நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.


Read more ...

மு க.அழகிரி எந்நேரமும் கைதாகும் வாய்ப்பு?

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததுத் தொடர்பாக எழுந்துள்ள புகாரில் முக அழகிரி எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.


Read more ...

சதானந்தா கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது பாலியல் பலாத்காரப் புகார்!

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது, நடிகை ஒரு வரவர் பாலியல் பலாத்கார் புகார் அளித்துள்ளார்.


Read more ...

மோடியின் வேண்டுகோளை ஏற்று த.தே.கூ செயற்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒருமித்த இலங்கைக்குள் போதிய அதிகாரங்களுடனான தீர்வே அவசியம்: இரா.சம்பந்தன்

ஒருமித்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தக் கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுவதற்கு அரசு தயார்; ஆனால், தெரிவுக்குழுவினூடே தீர்வு: சுசில் பிரேம ஜயந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் பேச்சுவார்த்தைளை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள அரசாங்கம், ஆனாலும், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு பாராளுமன்றத் தெரிவுக்குழுவினூடே காணப்படும் என்று தெரிவித்துள்ளது. 


Read more ...

ஒருநாள் ஒரு நிமிடம் :ஆகஸ்ட்28, 2014

தமிழ்மக்கள் மறந்துவிட முடியாத ஒரு பெருமகனார் குறித்தது இந்தப் பதிவு.


Read more ...

சுரேஷ் ரைனாவின் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சுரேஷ் ரைனாவின் அதிரடியால் இந்திய அணி வெற்றி பெற்றது.


Read more ...

327 எனும் கடின இலக்கை துரத்தியடித்து ஆஸ்திரேலியாவை கவிழ்த்தது தென்.ஆபிரிக்கா

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் சிம்பாப்வே முக்கோண ஒரு நாள் தொடரில் நேற்று விறுவிறுப்பான ஒரு ஆட்டம் நடைபெற்றது. 


Read more ...

சிரிய அதிபர் அசாத்துக்கு எதிரான யுத்தத்தில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் ISIS பயிற்றுவிக்கிறது:ஐ.நா

சிரிய யுத்தத்தில் நாளுக்கு நாள் அட்டூழியங்கள் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.


Read more ...

உதயகுமாருக்கு வருவதாக கூறிய வெளிநாட்டு நிதிக் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

உதயகுமாருக்கு வருவதாக கூறிய வெளிநாட்டு நிதிக் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...